உழைப்புக்கு கிடைத்த அடையாளம்! சிறகடிக்க ஆசை சீரியல் மனோஜ்க்கு வந்த வாய்ப்பு, ஒரே நேரத்தில் 13 படத்தில் நடிப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீதேவா தற்போது ஒரே நேரத்தில் 13 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது குறித்து தகவல் தான் இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
உழைப்புடன் விடாமுயற்சியும் இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு பலர் முன்மாதிரியாக இருக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஸ்ரீ தேவாவும் இணைந்து இருக்கிறார். இவரை சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜாக பார்த்திருப்போம். பெரிய கண்ணாடி.. திரு திருவென முழி... சுயநலம் கொண்ட கேரக்டரை பார்த்ததும் இப்படி ஒரு நபர் நம்ம வீட்டில் இருந்திடவே கூடாது என்று நினைக்கத் தோன்றும்.

ஆனால் சீரியலில் அப்படி நடிப்பவர்கள் எல்லோரும் நிஜத்தில் அப்படி இல்லை என்பதற்கு சான்றாகவே இவர் சில வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருவார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை பகிர்ந்து அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்துவார். ஒரு சில நேரங்களில் தெருவோரத்தில் வசிப்பவர்களுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகள் செய்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சமீபத்தில் கூட இவரை சுற்றி நின்று சில குழந்தைகள் மனோஜ் என்று கத்திய ஒரு வீடியோவை பகிர்ந்து இருந்தார்.
அந்த பதிவில், படப்பிடிப்பு வழியில் நான் நடந்து சென்று கொண்டிருந்தேன்.. அப்போது திடீரென்று சின்ன சத்தங்கள்.. அவர்களின் மெல்லிய குரல்கள் காற்றைத் திருப்பி என் மீது விழுந்தது. நான் நடிகர் மனோஜ் என்பதை கண்டதும் சின்ன கால்கள் ஓடின.. சின்ன கைகள் என்னை சுற்றி உலகமே கொண்டாடியது போல ஒரு ஆட்டோகிராபிக்காக காத்திருந்து! அந்த கண்கள் அது எனக்கு பெரும் புகழல்ல, அது ஒரு நம்பிக்கை.
ஒரு அன்பு ஒரு பரிசு, விருது.. அந்த குழந்தைகளுக்கு என் நன்றியும் அவர்களின் மகிழ்ச்சியை எனக்கு இன்றைய தினத்தில் உண்மையான அவார்ட் என்பதையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இதுபோல அவர் சூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் எடுத்த வீடியோக்கள் வெளியிட்டு வருவார். இந்த நிலையில் சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார்.
ஏற்கனவே ரஜினி நடித்த வேட்டையன் படத்தில் சின்ன ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல அஜித் நடித்த துணிவு படத்திலும் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இப்போது சில திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அதில் வசூல் மன்னன், நிகழ்தகவு, மெய்யழகி அவுரா, ஓடிபி, சுப்பன், பேப்பர் ஏஜென்ட், ஆகாயம் போன்ற பல படங்களில் கமிட் ஆக இருக்கிறார்.
இந்த படங்களில் மெய்யழகி, நிகழ்தகவு, வசூல் மன்னன், ஓடிபி போன்ற படங்களில் ஹீரோ கேரக்டரில் நடித்திருக்கிறார். அதில் சுப்பன் என்கிற படம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே டிசம்பர் 19ல் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடித்திருக்கும் கொம்பு சீவி படமும் வெளியாக இருக்கிறது. அந்த படத்துடன் இந்த படமும் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications