முடிஞ்ச வரைக்கும் பண்ணிட்டேன்! மன்னிச்சிருங்க! எதிர்பார்க்கல! கண்கலங்கிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடிகர் வெற்றி வசந்த் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய பிறந்தநாளுக்கு தனக்கு வாழ்த்துக்கள் சொன்ன ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் நான் இதுவரைக்கும் பிறந்த நாளை இவ்வளவு பிரமாண்டமாக கொண்டாடியது கிடையாது. ஆனால் எனக்காக பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டு இருந்தாங்க. அவங்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார். மேலும் சில தகவல்களை அதில் பகிர்ந்து இருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai serial Actor Vetri Vasanth heartfelt video thanking his fans

அந்த வகையில் சமீபத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. டிவியில் பார்க்கும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இருந்த சீரியலுக்கு இணையத்திலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகனாக இருக்கும் முத்துவுக்கு அதிகமான பேன்ஸ் பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் இன்று நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவின் ஆரம்பத்தில், எல்லாருக்கும் வணக்கம் நான் எப்படி ஸ்டார்ட் பண்ண போறேன்னு யோசிக்கல. என் மனதில் எப்படி தோணுதோ அதை அப்படியே உங்க கிட்ட பேச போறேன். எனக்கு நேற்று இன்ஸ்டாகிராமில் அவ்வளவு பேர் வாழ்த்துக்கள் தெரிவிச்சாங்க.

பல வீடியோக்கள் எனக்காக போட்டு இருந்தாங்க, அதற்கு நன்றிகள். நிறைய பேர் அனுப்புன வீடியோ போஸ்ட் எல்லாமே என்னை கண்கலங்க வச்சிட்டு. நிறைய பேர் அனுப்புன போஸ்ட் என்னை பிரமிக்க வச்சது. உங்களுடைய எடிட்டிங் பார்த்து நான் மிரண்டு போய் விட்டேன். முடிஞ்ச வரைக்கும் நான் எனக்கு மெசேஜ் பண்ணவங்களுக்கும், வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் ரிப்ளை கொடுத்து இருக்கிறேன்.

ஆனால் ஒரு சிலருக்கு பதில் கொடுக்க முடியவில்லை. அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. நான் வேணும்னு எதுவும் பண்ணல. நான் இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு பிறந்த நாளை கொண்டாடியதே கிடையாது. இந்த முறை எனக்கு மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் இன்னும் எத்தனை நாட்கள் பிறந்தநாளுக்கு இருக்கிறது என்று ரசிகர்கள் ரிமைண்ட் பண்ணிக்கொண்டே இருந்தார்கள்.

Siragadikka aasai serial Actor Vetri Vasanth heartfelt video thanking his fans

அதை பார்க்கும் போது நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். இந்த மாதிரி ஒரு அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன் என்று தெரியவில்லை. இதுவரைக்கும் நான் ஏதாவது ஒரு சின்ன விஷயத்தை செய்தால் எனக்கு பெரிய அளவில் கான்ஃபிடன்ட் இருக்காது. என் கூட இருக்கிறவர்கள் ஒரு சிலர் இது நல்லா வருது உன்னால் நல்ல நடிக்க முடியும் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது என்னை பார்த்து பல பேர் நீங்கள் அருமையாக நடிக்கிறீங்கன்னு பாராட்டும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

இன்னும் என்னுடைய திறமையை நான் அதிகமாக காட்டுவேன். உங்களை அதிகமாக சந்தோஷப்படுத்துவேன் என்று அந்த வீடியோவில் கண்கலங்க வெற்றி வசந்த் பேசி இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+