அடேங்கப்பா! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? அதிகம் யாருக்கு தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்து வரும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களின் ஒரு நாள் சம்பள விபரங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இரவு 9:00 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ச்சியாக டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு அதிகமான வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்திருக்கின்றனர்.

அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்களோடு சிறகடிக்க ஆசை சீரியல் கலகலப்பு மற்றும் சண்டை சச்சரவுகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் இனி ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்ட ரகசியம் குடும்பத்திற்கு எப்போது தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் மீனா மற்றும் முத்துவை வீட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் என்று விஜயாவும் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இப்போது முத்து மற்றும் சிட்டிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை மீனாவிற்கு தெரிய வந்திருப்பதால் மீனா சிட்டி இடம் இனி என் புருஷனிடம் பிரச்சனை பண்ணுனா உன்னை நடுத்தெருவில் வைத்து செருப்பால் அடிப்பேன் என்று மிரட்டி விட்டு வந்திருப்பதால் சிட்டி மீனா மற்றும் முத்துவை பிரித்து வைக்க வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக கதையில் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் முத்துவை விஜயா இவ்வளவு வெறுப்பதற்கு காரணம் என்ன என்பது பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை கிராமத்தில் கொண்டாடும்போது முத்து அப்பாவும் அம்மாவும் என்னை இங்கே கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்க ஆனால் நான் தப்பு செய்யல.
பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்று ஏற்கனவே நடந்த விஷயத்தை சொல்ல வர அப்போது அண்ணாமலை அதை தடுத்து நிறுத்தி இருப்பார். அதோடு இந்த நேரத்தில் நாம் எல்லாரும் சந்தோஷமா இருக்கோம். பழையதை பேசி இங்கே பிரச்சனை பண்ண வேண்டாம் என்று அதை முடித்து வைத்திருப்பார். இதனால் பிளாஷ் பேக்கில் என்ன நடந்தது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இப்படியாக அடுத்தடுத்து சீரியலில் பெரிய ட்விஸ்ட் வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பள விவரங்களும் இப்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதாவது அதில் இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் முத்து மற்றும் மீனாவிற்கு 12000 ரூபாயும்,
அண்ணாமலைக்கு 8,000- விஜயா விற்கு 8000 - ரோகினி மனோஜ்க்கு 6000 ரூபாயும் ரவி, ஸ்ருதிக்கு 5000 ரூபாயும் அதுபோல சத்தியா, சீதா போன்றோருக்கு 3000 ரூபாயும் ஒரு நாள் சம்பளமாக கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில் முத்து மற்றும் மீனா இவர்கள் இருவரும் தான் அதிகமான சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் தமிழில் கிடைத்த வெற்றியின் காரணமாக தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த சீரியலில் கதாநாயகி மீனாவாக நடித்துக் கொண்டிருக்கும் கோமதி பிரியாவும் இதன் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் இந்த சீரியலில் அண்ணாமலையாக நடிக்கும் நடிகர் ஆர் சுந்தர்ராஜன் சீனியர் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும் நிலையில் அவருக்கு கதாநாயகியை விட சம்பளம் குறைவாக இருக்கிறது. இது உண்மைதானா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications