“சிறகடிக்க ஆசை”யில் இனி கதை இதுதான்.. அப்போ 30 ஆயிரம், இப்போ 3 ஆயிரம்.. “ஜீவா” உடைத்த ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜீவா கேரக்டரில் நடிகை அட்சய பாரதி நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தான் எப்படி சீரியலில் நடிக்க வந்தேன். இனி இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி பேசி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் முதல் காதலியாகவும் அவரை ஏமாற்றிக்கொண்டு கனடாவுக்கு ஓடிப் போன ஜீவா மீண்டும் சீரியலுக்கு வந்திருப்பதால் சீரியலில் வேகம் எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் அட்சய பாரதி சீரியல் பற்றி பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், என்னுடைய சொந்த ஊரு ஓசூர் தான்.

ஆனால் நான் காலேஜ் சென்னையில் படித்தேன். இப்போ குடும்பத்தோடு பெங்களூரில் இருக்கிறோம். சின்ன வயசுல இருந்து எனக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும். காலேஜ் முடித்த சமயம் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வீட்டில் அது பற்றி சொன்னபோது நடிப்பதற்கு ஒதுக்கவில்லை. அதனால் இன்ஜினியரிங் படித்தேன். வீட்டில் அப்பா அம்மா ஆசைப்பட்ட மாதிரியே இன்ஜினியரிங் டிசைனிங் கோர்ஸ் முடிச்சுட்டு இன்ஜினியரிங் டிசைனராக வேலைக்கு போயிட்டு இருந்தேன்.
மூணு வருஷம் வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தேன். ஆனால் எனக்கு கிடைச்ச வாய்ப்பை நழுவ விட்டது உறுத்திக்கிட்டே இருந்தது. வாய்ப்பு கிடைக்கலன்னா கூட சரின்னு இருந்திருக்கலாம் ஆனா கிடைச்ச வாய்ப்பு போயிடுச்சே என்று வீட்டில் அடிக்கடி நான் புலம்பிக் கொண்டே இருந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் என்னுடைய ஆசையை புரிய வைத்தேன். அவங்களும் ஒரு வழியா என்னை புரிஞ்சிக்கிட்டாங்க.
அதற்குப் பிறகு 2001ல் பிப்ரவரியில் வேலையை விட்டு விட்டேன். கிடைச்ச சின்ன சின்ன வாய்ப்புகளை எல்லாம் பண்ணினேன் முதலில் செந்தூரப்பூவே சீரியலில் ஃபிரண்டு கேரக்டர் தான் கிடைத்தது. அதை மிஸ் பண்ணாம நடிச்சேன். அதற்கு பிறகு பொன்னி சீரியலில் ஒரு கேரக்டர் கிடைத்தது. இப்போது சிறகடிக்க ஆசை, முத்தழகு, சின்ன மருமகள் போன்ற பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் சிறகடிக்க ஆசை சீரியல் இப்போ உள்ள கெட்டப் டைரக்டர் சார் தான் முடிவு பண்ணினாரு. மேனேஜர் நீங்க கன்னடா ரிட்டன் ஆளே அடையாளம் தெரியாத மாதிரி இருக்கணும்னு சொன்னாங்க. முதலில் ஹேர் கலரிங் பண்ண சொன்னாங்க. நானும் சரி என்று சொன்னேன். பிறகு முடியை ஷார்ட்டாக வெட்ட வேண்டும் என்று கேட்டார்கள் நான் இரண்டு ப்ராஜெக்ட் பண்றதால முடியாதுன்னு சொல்லு விக் வைக்கலாம் என்று நான் இப்போது வைத்திருக்கும் இந்த விக்கை தேர்ந்தெடுத்து சொன்னாங்க.
ஆனா இந்த விக்கை பார்த்ததும் சீரியலில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா என்னை டோரா என்று கலாய்ச்சிட்டு தான் இருந்தாங்க. ப்ரோமோ ரிலீஸ் ஆனதுல இருந்து எல்லோரும் இந்த ஹேர் ஸ்டைலை கிண்டல் பண்றாங்க. ஆனா அந்த ட்ரோலை நானும் ஜாலியா எடுத்துக்கிறேன். நான் முதலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மாசம் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரைக்கும் சம்பாதிச்சிட்டு இருந்தேன்.
இப்போ நடிக்க வந்த பிறகு தினமும் 3000 சம்பளம் கொடுத்தாங்க அதுபோல சிறக்கடிக்க ஆசை சீரியல் டீம்ல எனக்கு மனோஜ் தான் ரொம்ப குளோஸ். அவர் உண்மையாவே நல்ல மனுஷன். அவர் ஒரு விஷயத்தை ஃபாலோ பண்றது மட்டும் அல்லாமல் நமக்கும் ஐடியா கொடுப்பார். மனோஜ் மாதிரி ஒரு பிரெண்ட் கிடைச்சதுக்கு நான் லக்கினு தான் சொல்லணும்.
இனி சீரியலில் நிறைய ஆச்சரியங்களும் எதிர்பாராத திருப்பங்களும் வரப்போகுது. எல்லாம் நடக்கப் போகிறது. இதற்கு முன்னாடி நான் நடிச்ச சீரியல் எனக்கு கொடுத்த ரீச்சை விட சிறகடிக்க ஆசை சீரியல் கொடுத்த ரீச் பெருசு என்று அதில் நடிகை அட்சய பாரதி பேசி இருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications