சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுகிறாரா கோமதி பிரியா? அவருக்கு பதில் ஆலியா மானசா? பழனியப்பன் விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை கோமதிப்பிரியா நடித்த வருகிறார். இவர் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக சில தகவல்கள் பரவி வருகிறது. அதோடு இவருக்கு பதிலாக நடிகை ஆலியா மனச நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த சீரியலில் செல்வம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் லொள்ளு சபா பழனியப்பன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தை பெற்று வருகிறது. சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்திருக்கிறார்கள். அதிலும் கோமதி பிரியாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கோமதி பிரியா இந்த சீரியலில் மீனாவாக பலருடைய மனதை கவர்ந்திருக்கிறார். கோமதி பிரியா இந்த சீரியலில் பூ கட்டும் பெண்ணாக நடிப்பதால் இவருக்கு பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

கோமதி பிரியா பற்றிய செய்தி
தற்போதைய சூழ்நிலையில் சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் அதிகமான நடிகைகள் வெளிமாநிலத்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் கோமதி பிரியா மதுரையை சார்ந்த பொண்ணு தான். மதுரையில் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த கோமதி பிரியா சென்னைக்கு படிக்க வந்த இடத்தில் பார்ட் டைம் வேலை பார்த்து தன்னுடைய படிப்பு செலவுக்கு பயன்படுத்தி இருக்கிறார்.
சீரியலில் இருந்து விலகல்
அப்போது விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் ஆடியன்ஸாக வந்திருந்தார். பிறகு சீரியலில் நடிப்பதற்கு ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது இவருக்கு விஜய் டிவியில் பாவம் கணேசன் சீரியலும் கலர்ஸ் தமிழில் ஓவியா சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலமாக இப்போது சிறகடிக்க ஆசை சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சிறகடிக்க ஆசை சீரியலின் டப்பிங் சீரியலில் இவர்தான் நடித்து வந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார்.
வதந்தி செய்தி
இந்த நிலையில் இப்போது சிறகடிக்க ஆசை சீரியலிலும் இவர் விலகப் போவதாக சில youtube சேனல்களில் செய்திகள் பரவி வருகிறது. அதோடு கோமதி பிரியாவிற்கு பதிலாக ஆலியா மானசா சிறகடிக்க ஆசை சீரியலில் இனி மீனாவாக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து கோமதி பிரியா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த சீரியலில் செல்வமாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பழனியப்பன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
பழனியப்பன் விளக்கம்
அதில் சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து கோமதி பிரியா விலகப் போகிறார் என்றும் அவருக்கு பதிலாக ஆலியா மனசா நடிக்க வருகிறார் என்றும் சில youtube சேனல்களில் தவறான தகவல்கள் பரப்பி வருகிறார்கள். சில youtube சேனல்களில் இப்படித்தான் சிலரை பற்றி வதந்திகள் பரப்பி வருகிறார்கள். அதற்கு நாம் விளக்கம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னிடம் பலர் போன் செய்தும் மெசேஜ் செய்து இது பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கோமதி பிரியா சிறகடிக்க ஆசை சீரியலை விட்டு விலகவில்லை அவர்தான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்று பழனியப்பன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications