முதலமைச்சர் ஸ்டாலினோட நான் நடிச்சிருக்கேன்.. ரஜினிகாந்த் பெஸ்ட்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை பளிச்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிகை பாக்கியலட்சுமி, பார்வதி கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்போது தற்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலினோடு நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை அடைந்திருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாக இருக்கின்றனர். அதில் விஜயாவின் தோழியாக வரும் பார்வதிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும், ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.

அப்போதெல்லாம் 12 வயதிற்கு மேலேயே நடிகைகள் கதாநாயகியாக மாறிவிடுவார்களாம் அந்த நேரத்தில் ஒல்லியாக இருந்தால் அதற்கு ஸ்டீராய்டு ஊசி போட்டு உடல் எடையை கூட்டி அவர்கள் கதாநாயகியாக மாறி இருக்கிறார். அதுபோலத்தான் கதாநாயகியாக வேண்டும் என்று பாக்கியலட்சுமி ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டாராம். அது அவருக்கு பிறகு பக்க விளைவுகளை ஏற்படுத்தி உடல் எடையை அதிகரித்து இருக்கிறது.
ஆனால் அந்த நேரத்தில் அவரும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தற்போது தான் அவர் உடல் எடை அதிகரித்து இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் குறித்து பாக்கியலட்சுமி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் நான் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தேன். அந்த திரைப்படங்களில் நடித்த அனுபவங்கள் மறக்க முடியாது.

அதிலும் தற்போது முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலின் நடித்த திரைப்படத்திலும் நான் நடித்திருக்கிறேன். அந்த படத்தில் கார்த்திக் ஜோடியாகவும், சீதாவிற்கு பிரண்டாகவும் நடித்திருந்தேன். அதுபோல தாயா தாரமா என்ற படத்தில் நான் நடித்திருந்தேன். அந்த படத்தில் ஆனந்தபாவுக்கு ஜோடியாக நடித்தேன். அதில் அவரோடு ஜோடியாக நான் டான்ஸ் எல்லாம் ஆடி இருக்கிறேன்.

அதுபோல ரஜினி நடித்த ஒரு திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நான் நடித்திருக்கிறேன். மலையாளத்தில் மோகன்லாலுடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். அதில் இவர்கள் இருவரில் யார் பிடிக்கும் என்றால் எனக்கு இருவருமே பிடிக்கும் அவர்களில் அதிகமாக யார் பெஸ்ட் என்று சொன்னால் ரஜினியை தான் சொல்வேன். எனக்கு ரஜினியோடு நடிப்பது ரொம்பவும் பிடித்தது. அவர் எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான். ரஜினிக்கு என்னுடைய மகன் ரசிகராக இருக்கிறார் என்று அந்த பேட்டியில் பாக்கியலட்சுமி பேசியிருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications