அட்ஜெஸ்ட்மென்ட் கேட்ட பிரபலம்.. சிறகடிக்க ஆசை “ஸ்ருதி” செய்த செயல்.. இப்படியும் பழிவாங்கலாம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கேரக்டரில் நடித்து வரும் நடிகை ப்ரீத்தா பேட்டி ஒன்றில் தான் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும்போது வந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார்.
சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அங்கு நடிக்க வரும் புது நடிகைகளிடம் சிலர் அட்ஜஸ்மென்ட் விஷயத்தில் தவறாக நடக்க முயற்சி செய்ததை பல நடிகர், நடிகைகள் வெளிப்படையாக வெளியே பேசி இருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் மட்டும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை நடக்கிறது என்று சொல்லிவிட முடியாது. எல்லா இடங்களிலும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது ஆனால் சினிமாவில் இருக்கும் நடிகைகள் தைரியமாக இந்த விஷயத்தை வெளியே சொல்கிறார்கள்.

அந்த வரிசையில் விஜய் டிவியில் முன்னணி இடத்தில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகை ப்ரீத்தாவும் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். பிரீத்தாவின் வீட்டில் யாருமே சினிமாவிற்கு சம்பந்தப்பட்டவர்கள் இல்லை என்றாலும் பிரீத்தா வீட்டில் அடம்பிடித்து நான் நடிக்க தான் போவேன் என்று சொல்லி நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது பிரபலம் ஒருவர் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் விஷயம் ஓகேவா என்று கேட்க, அதற்கு பிரீத்தா அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு கிடையாது என்று முகத்துக்கு நேராக சொல்ல, அதற்கு அந்த பிரபலம் அப்போ நீ எதற்கு நடிக்க வர அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியலன்னா நீ நடிக்கிறதுக்கு தகுதியே இல்லை என்று சொல்லி இருக்கிறார். உடனே கோவப்பட்டு பிரீத்தா வீட்டிற்கு போய்விட்டாராம்.
பிறகு சில மாதங்கள் கழித்து அவருக்கு சில சீரியல்களில் நடிக்க போன் பண்ணி கூப்பிட்டு இருக்கிறார்கள். அதன்படி ஆடிஷனில் கலந்து கொண்ட பிரீத்தா சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கேரக்டர் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இந்த சீரியலுக்குப் பிறகு இவரை அதிகமாக ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய பிரீத்தா என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் நடிக்க முடியும் என்று சொன்ன நபருக்கு நான் இப்போது சாதித்து காட்டி பதிலடி கொடுத்திருக்கிறேன். அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசிய நபர் என்னை சமூக வலைதளத்தில் ஃபாலோ பண்ணிக் கொண்டுதான் இருந்திருக்கிறார். என்னுடைய வளர்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார். நான் சமீபத்தில் தான் அவரை பிளாக் செய்தேன்.
அட்ஜஸ்ட்மென்ட் இல்லை என்றால் எதுவும் செய்ய முடியாது என்று என்னிடம் சொன்ன நபர் இன்று என்னுடைய திறமையின் மூலமாக எனக்கு இருக்கும் ரசிகர்களை பார்த்து இருப்பார் என்று அந்த பேட்டியில் ப்ரீத்தா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications