Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை ஸ்ருதி யார் தெரியுமா? ஆலியா மானசாவின் உறவு! வாய்ப்புக்காக இத்தனை கஷ்டங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கேரக்டரில் நடிக்கும் நடிகை ப்ரித்தா ரெட்டி குறித்து தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம். நடிகை ப்ரித்தா ரெட்டி யார் அவர் எப்படி சீரியல்களில் அறிமுகம் ஆகி இருந்தார். அதிலும் சிறகடிக்க ஆசை சீரியலுக்காக அவர் செய்த கடினமான உழைப்பு பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. தொடர்ச்சியாக பல மாதங்களாகவே இந்த சீரியல் விஜய் டிவியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதனால் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்திருக்கின்றனர். அதிலும் பலருடைய திட்டுக்களையும் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு கேரக்டராக ஸ்ருதி இருந்து வருகிறார்.

siragadikka aasai Serial actress Pritha Reddy character of Shruthi Biography

ஸ்ருதி இந்த சீரியலில் வந்த பிறகு சீரியலில் எதிர்பாராத வேகம் எடுத்தது. ஆனாலும் பணக்கார வீட்டு பெண்ணாக இருக்கும் ஸ்ருதி யார் எப்படி இந்த சீரியலில் நுழைந்தார் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் ஸ்ருதியின் நிஜபெயர் ப்ரித்தா ரெட்டி தான். இவருடைய சொந்த ஊர் விழுப்புரம் தானாம். அதுபோல அவருடைய அப்பாவும் அம்மாவும் விவசாயிகள் தானாம்.

விவசாயம் செய்து கிராமத்தில் வாழ்ந்து வந்த பிரித்தாவிற்கு சின்ன வயதிலிருந்து ஒரு நடிகையாக ஆகணும்னு தான் ஆசை வந்திருக்கு. அதற்கு காரணம் அவருடைய குடும்பத்தில் ஒரு போட்டோகிராபர் இருந்திருக்கிறார், அவர் ஒரு பிரபலமான நபராக இருந்ததால் அவரிடம் பல பிரபல நடிகர்கள் நடிகைகள் வந்து போட்டோ எடுக்க வருவார்களாம்.

அப்போது அந்த நடிகர்கள் நடிகைகளோடு போட்டோ எடுப்பதற்காக அதிகமான மக்களும் அங்கே கூடி விடுவார்களாம். இதையெல்லாம் குழந்தையாக இருக்கும்போது பார்த்து வந்த பிரித்தாவிற்கு தானும் இதுபோல ஒரு செலிபிரிட்டியாக வேண்டும் தன்னோடும் குறைந்தபட்சம் ஒரு ஐந்து, ஆறு பேராவது போட்டோ எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு இருக்கிறார்.

அதன்படி தான் இவர் கல்லூரி படிப்பை முடித்ததுமே சினிமாவில் சேர வேண்டும் என்பதற்காக பல இடங்களுக்கு வாய்ப்பு தேடி போயிருக்கிறார். ஆனால் அங்கு இவருக்கு எந்த வாய்ப்பும் சரியாக அமையவில்லையாம். அதோடு அம்மா அப்பாவுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று படிப்பு செலவையும் இவரே பார்த்து இருந்திருக்கிறார்.

அதாவது அந்த நேரத்திலேயே பார்ட் டைம் வேலை பார்த்து தன்னுடைய படிப்பை முடித்து இருக்கிறார். அப்போது சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையில் தன்னுடைய கவனத்தை செலுத்தி இருக்கிறார். ஆனால் அங்கேயும் இவருக்கு பிரச்சனை இருந்திருக்கிறது. அதாவது சிலர் இவரிடம் நேரடியாகவே அட்ஜஸ்மெண்ட் குறித்து கேட்டிருக்கிறார்கள்.

siragadikka aasai Serial actress Pritha Reddy character of Shruthi Biography

அதோடு ஒரு இயக்குனர் இவரிடம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு தயாராக இல்லாமல் இருந்தால் எதற்காக இங்கே வருகிறீர்கள் என்றெல்லாம் பேசி இருந்தாராம். அதற்கு ஸ்ருதி அப்படி அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் தனக்கு வாய்ப்பு வரணும் என்று இல்லை என்று இவரும் தன்னுடைய வேலையில் கவனத்தை செலுத்தி இருக்கிறார். அப்போதுதான் இவருக்கு விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த சீரியல் முடிவடைய போகும்போது இனி அடுத்து என்ன செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் இவருக்கு சன் டிவியில் இனியா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் நடிக்க ஆலியா மானசாவின் கணவரின் தங்கையாக இவர் நடித்துக் கொண்டிருப்பார். அந்த சீரியலிலும் நன்றாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலுக்காக வாய்ப்பு வந்திருக்கிறது.

ஆனால் இவர் கொஞ்சம் குண்டாக இருக்கிறார் என்றும் சிறகடிக்க ஆசை ஸ்ருதி கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் ஒல்லியாக வேண்டும் என்றும் இயக்குனர் சொன்னதால் 10 கிலோ எடையை குறைத்து இவர் இந்த சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர் கஷ்டப்பட்டு உழைத்ததாலோ என்னவோ இப்போது மக்கள் மனதிலும் இவர் ஸ்ருதியாக இடம் பிடித்து விட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+