Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial April 10 Episode) சிறகடிக்க ஆசை சீரியலில், ரசிகர்கள் எதிர்பார்த்ததுபடியே மீனாவே தேர்தலில் ஜெயித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு எதிர்பாராத சம்பவம் நடந்திருக்கிறது. மறுபக்கத்தில் சிந்தாமணி மீனாவை அழிக்க ரோகிணியுடன் புது திட்டம் போட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலில் ( Siragadikka Aasai serial today episode) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் முத்து மீனா அவர்களுடைய நண்பர்களுடன் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல சிந்தாமணியும் தன்னுடைய ஆட்களுடன் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் இரண்டு மூன்று பேர் முகத்தை மூடியபடி வாக்குச்சாவடிக்கு போக, அவர்களை முத்து தடுத்து நிறுத்தி யார் இவர்கள் என்று பார்க்கும்போது அங்கு சில ஆண்கள் தான் பெண் வேடமிட்டு வந்திருக்கின்றனர். உடனே இவர்கள் கள்ள ஓட்டு போட வந்திருக்கிறார்கள் என்று அவர்களை அடித்து துரத்துகின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

பிறகு தேர்தல் முடிந்த உடனே அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு கட்டமாக வாக்குகள் எண்ணப்படும்போது முதல் கட்ட முடிவில் சிந்தாமணி தான் லீடிங்கில் இருப்பதாக அதிகாரி சொல்கிறார். இதைக் கேட்டதும் சிந்தாமணியின் ஆட்கள் ரொம்ப குஷியாகி, "நீங்க தான் கண்டிப்பா ஜெயிப்பீங்க அக்கா" என்று சொல்லி அங்கவே கொண்டாட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்.

முத்துவின் ஆறுதல்

அதுக்கப்புறம் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதில் மீனாவை விட சிந்தாமணி 75 ஓட்டுகள் அதிகம் எடுத்திருக்கிறார் என்று அதிகாரி அறிவிக்கிறார். இதைக் கேட்டதும் மீனாவின் முகம் உடனே வாடி போய்விடுகிறது. அந்த நேரத்தில் முத்து, "இது கடைசி இல்லை... இன்னும் மாறலாம்" என்று சொல்லி மீனாவை சமாதானப்படுத்தி தைரியம் கொடுக்கிறார்.

தேர்தல் முடிவு

பின்னர் இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டதாக அதிகாரி சொல்லி, ரிசல்ட்டை வாசிக்கப் போவதாக அறிவிக்கிறார். அதில் மீனாவை விட அதிக வாக்குகள் பெற்று சிந்தாமணி ஜெயித்துவிட்டார் என்று கூறுகிறார். இதைக் கேட்டதும் சிந்தாமணி மற்றும் அவருடைய ஆட்கள் மிகுந்த சந்தோஷத்தில் மலர் தூவி ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாட ஆரம்பிக்கிறார்கள்.

தேர்தலில் ஜெயித்த மீனா

ஆனால் அதே நேரத்தில் உள்ளே இருந்து இன்னொரு அதிகாரி வெளியே வந்து, சிந்தாதிரிப்பேட்டை வாக்குப்பெட்டி மட்டும் இன்னும் எண்ணப்படாமல் இருக்கிறது என்று சொல்கிறார். அந்த பெட்டியில் உள்ள வாக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து எண்ண ஆரம்பிக்கிறார்கள். அதில் பெரும்பாலான வாக்குகள் மீனாவுக்கே வந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

மீனாவிற்கு வெற்றி

பிறகு வெளியே வரும் அதிகாரி, அந்த வாக்குகளும் சேர்த்து பார்த்தபோது சிந்தாமணியை விட 12 ஓட்டுகள் அதிகம் பெற்று மீனா தான் வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கிறார். இதைக் கேட்டதும் முத்து ரொம்ப சந்தோஷமாக சிந்தாமணி முன்னாலேயே குத்தாட்டம் போட்டு மீனாவின் வெற்றியை கொண்டாடுகிறார். அங்கிருந்த ஸ்ருதி, ஸ்வேதா, சீதா எல்லாரும் மீனாவுக்கு வாழ்த்து சொல்லி மகிழ்கிறார்கள்.

தன்னுடன் போட்டியிட்டு ஜெயித்ததால் சிந்தாமணி ரொம்பவே மனஸு உடைந்து கோபமாக கிளம்பி செல்கிறார். முத்து உடனே தன் அப்பா அண்ணாமலைக்கு போன் பண்ணி, மீனா ஜெயிச்ச விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகிறார்.

விஜயாவின் நாடகம்

மீனா வீட்டுக்கு வருவதற்குள் அண்ணாமலை தன்னுடைய நண்பர்கள் எல்லாருக்கும் போன் பண்ணி, "மீனா ஜெயிச்சுட்டா" என்று பெருமையாக சொல்லி மகிழ்கிறார். வீட்டுக்கு வந்ததும் மீனா அண்ணாமலை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, "இந்த வெற்றிக்கு காரணம் நீங்கதான்" என்று சொல்கிறார். முதலில் விஜயா ஆசிர்வாதமாக வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க பிறகு ஸ்வேதா வந்து பேசியதும் விஜயா அவருக்காக நாடகம் போட்டு ஆசீர்வாதம் பண்ணுகிறார்.

அதற்கு மீனாவின் அம்மா அண்ணாமலையிடம், "நீங்க இல்லையென்றால் அவள் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்திருக்க முடியாது, அவளுக்கு பூ வியாபாரம் செய்ய வாய்ப்பு கொடுத்ததும் நீங்கதான், இன்றைக்கு தேர்தலில் நிற்கவும் காரணம் நீங்கதான்" என்று சொல்லி சந்தோஷப்படுகிறார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஜயா உள்ளுக்குள் வயிற்றெரிச்சலில் கொதித்துக்கொண்டே இருக்கிறார்.

சிந்தாமணியின் பிளான்

இதே நேரத்தில் சிந்தாமணி வீட்டில் தனியாக உட்கார்ந்து சோகமாக இருக்கிறார். அப்போது ரோகிணி வந்து, "என்ன ஆன்ட்டி இப்படி தனியா இருக்கீங்க?" என்று கேட்கிறார். அதற்கு சிந்தாமணி, "நான் தோற்றதால என்கூட இருந்த எல்லாரும் என்னை விட்டு போயிட்டாங்க" என்று வருத்தப்படுகிறார். ஆனாலும் அதோடு விடாமல், "அந்த மீனாவை நான் பழி வாங்காமல் விடமாட்டேன்" என்று சொல்லி தனது அடுத்த திட்டத்தைக் குறித்து நினைத்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+