பணம் கேட்ட மனோஜ்க்கு விஜயா கொடுத்த அதிர்ச்சி.. இப்படி பேசுவாங்கனு எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 13-ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் கனடா போவதற்காக பணம் வேண்டும் என்று கேட்ட மனோஜ்க்கு விஜயா அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ரோகிணி பேச்சைக் கேட்டு நம்பி அப்பாவிடம் பணம் கேட்ட மனோஜ் அவமானப்பட்டதை பார்த்து முத்து அதிர்ச்சி அடைகிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி தன்னிடம் பணம் கேட்ட மனோஜை உங்க அம்மா அப்பாவிடம் பணம் கேளு என்று அனுப்பி வைத்ததால் மனோஜ் வீட்டில் வந்து அண்ணாமலை மற்றும் விஜயாவை கூப்பிட்டு வைத்து தான் கனடாவிற்கு வேலைக்கு போவதற்காக தனக்கு 14 லட்சம் பணம் வேண்டும் என்று நைஸ் பண்ணி கொண்டு இருக்க, அதை பார்த்து வழக்கம் போல முத்து கவுண்டர் கொடுத்து கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial April 13th promo and episode full update

மனோஜ் பேசுவதை கேட்டு ஒரு கட்டத்தில் கோபமான விஜயா உனக்கு இன்னும் எவ்வளவு பணம் நாங்க தரணும்? ஏற்கனவே இந்த வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்திருக்கு இன்னும் அதற்கு மேல பணத்தை வாங்கி இந்த வீட்டை இழக்க நாங்கள் தயாராக இல்லை. இந்த வீடு எங்க அப்பா எனக்காக தந்தது. இந்த வீட்டில் தான் எங்க அப்பாவோட உசுரு இருக்கு. உனக்கு இந்த வீட்டை தந்துட்டு நாங்க நடுத்தெருவுக்கு போக முடியாது.

உனக்கு பணம் வேணும்னா நீ படிச்சிருக்கல்ல அதுக்கு வேலைக்கு போய் சம்பாதிச்சு வெளிநாட்டுக்கு போய்க்கோ என்று திட்டிக் கொண்டிருக்க, இதையெல்லாம் நம்ப முடியாத முத்து நான் பார்ப்பது நிஜமா கணவான்னு தெரியலையே என்று சொல்ல, மீனா பக்கத்தில் இருந்து முத்துவை கிள்ளுகிறார். உடனே முத்து வலியில் துடித்து ஆமா நான் பார்ப்பது நிஜம் தான். எனக்கு இப்பதான் தெரிகிறது.

ஆனால் இதை நம்ப முடியலையே என்று சொல்லிக் கொண்டு இருக்க அந்த நேரத்தில் ரோகிணி விஜயாவிடம் அவர் வேலைக்கு போவதற்காக தானே அடுத்த பணம் கேட்கிறார் என்று சப்போர்ட்டுக்கு வர அவ்வளவு அக்கறை என்றால் நீ உங்க அப்பா கிட்ட பணம் வாங்கி கொடு என்று விஜயா ரோகிணியை திட்ட, அதற்கு ரோகிணி அப்பாவோட நிலைமை தான் உங்களுக்கு இப்போ தெரியுமே அத்த என்று சொல்ல,

இப்போ உங்க அப்பாவால பணம் கொடுக்க முடியலன்னா அவர் எப்போ ஜெயிலில் இருந்து வெளியே வருகிறாரோ அப்போ பணம் வாங்கி கொடு அதுவரைக்கும் மனோஜ் இங்கே ஏதாவது வேலைக்கு போகட்டும். எங்ககிட்ட ஒரு பைசா கூட இவனால வாங்க முடியாது என்று சொல்லிவிட, மனோஜ் தன்னுடைய நிலைமையை தன் பார்க் நண்பரிடம் சொல்லி அவரிடம் 14 லட்சம் ரூபாய் வட்டிக்கு கேட்கிறார்.

அதற்கு அவர் நான் அவ்வளவு பணம் இருந்தா எதற்கு பார்க்கில் இப்படி சுத்திக்கிட்டு இருக்க போறேன். நான் ஏதோ கிடைக்கிற கொஞ்சம் பணத்தை வைத்து வட்டிக்கு கொடுத்து பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து நாளைக்கு என்று வெளியான வீடியோவில் கோவில் ஒன்றில் மனோஜ் பிச்சைக்காரர் போல வேஷம் போட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த கோவிலுக்கு மீனா வருகிறார். மீனாவை பார்த்ததும் மனோஜ் முகத்தை மூடிக்கொள்ள மீனாவிற்க்கு சந்தேகம் வந்து மனோஜை பார்க்க வருகிறார். பணத்துக்காக பிச்சைக்காரராக மாறி இருக்கும் மனோஜ் வீட்டில் மாட்டுவாரா இல்லையா என்று அடுத்த வாரம் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+