சிறகடிக்க ஆசை சீரியலில் நடந்த அதிசயம்.. திரைப்படங்களில் கூட இப்படி இல்லையே! இன்றைய செம எபிசோடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த சீரியலில் பார்க்கலாம். அந்த வகையில் சாமியார் சொன்னதற்காக பிச்சை எடுக்க போன மனோஜ் மீனாவிடம் மாட்டிக்கொள்கிறார். இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் மீசை மற்றும் மரு வைத்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாத மாறு வேஷம் என்று சொல்லிக் கொண்டிருந்த கதையை இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலில் உடைத்திருக்கிறார்கள்.

பிச்சைக்கார வேஷத்தில் மனோஜ் படும் பாடு இன்றைய எபிசோடில் சிறப்பாக இருந்தது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai serial April 15th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் தன்னுடைய நண்பரோடு ஒரு சாமியாரை பார்க்க போயிருக்கிறார். அப்போது சாமியார் குறித்து மனோஜ் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்க கோபமான நண்பர் உனக்கு உதவி செய்ய வந்தா நீ இப்படி பேசிட்டு இருந்தா எதுவும் செய்ய மாட்டேன் என்று மிரட்டுகிறார்.

பிறகு சாமியாரிடம் உள்ளே சென்றதும் சாமியாரும் மனோஜை பார்த்து உனக்கு பிரச்சனையே உன்னுடைய வாய்தான், நீ வெளிநாட்டுக்கு போவதற்காக முயற்சி செஞ்சிகிட்டு இருக்க, அதற்கு பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறா... உனக்கு பணம் கிடைக்கணும்னா கோவிலில் போய் பிச்சை எடு என்று சொல்ல மனோஜ் முதலில் அதிர்ச்சி அடைகிறார்.

அதற்கு சாமியார் அது ஒரு பரிகாரம் தான். ஒரு நாள் முழுக்க வாயில் பச்ச தண்ணி கூட படாமல் நீ பிச்சை எடுத்து அந்த பணத்தை கோயில் உண்டியலில் போட்டு விட்டால் நீ நினைச்சது நடக்கும் என்று சொல்ல, அதற்கு சரி என்று மனோஜூம் நண்பர் உதவியோடு முகத்தில் கரியை பூசி முழு பிச்சைக்காரராகவே மாறுகிறார். பிறகு ஒரு கோவிலில் வந்து பிச்சை எடுக்க வருகிறார்.

அங்கிருந்த பிச்சைக்காரர்கள் இங்கு உட்கார கூடாது என்று மனோஜிடம் பிரச்சனை செய்ய, அதற்கு மனோஜ் நான் ஒரு பரிகாரத்திற்காக தான் பிச்சை எடுக்க வந்திருக்கிறேன் என்று சொல்ல, அதைக் கேட்டு பிச்சைக்காரர்கள் சிரிக்கிறார்கள். பிறகு இன்னைக்கு ஒரு நாள் தான் இங்க உட்காரனும் நாளைக்கு எல்லாம் இங்க வரக்கூடாது என்று மனோஜ்க்கு இடம் கொடுக்கின்றனர். பிறகு மனோஜை கத்தி பிச்சை எடுக்க சொல்லி ட்ரைனிங் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

Siragadikka aasai serial April 15th promo and episode full update

அப்போது மனோஜ்க்கு பசிக்கிறது அதனால் பக்கத்தில் ஏதாவது ஹோட்டல் இருக்கிறதா என்று பிச்சைக்காரரிடம் விசாரிக்க, அதற்கு பிச்சைக்காரர் ஹோட்டல் எல்லாம் பக்கத்தில் கிடையாது. ஆர்டர் பண்ணுனா கொண்டு வந்து தந்துருவாங்க என்று ஒரு பிரியாணியை அவர் ஆர்டர் செய்து கொடுக்க, மனோஜ் பிரியாணியை வாங்கி சாப்பிடலாம் என்று போகும்போது அவருடைய நண்பர் ஃபோன் பண்ணி இன்று முழுக்க நீ பச்சை தண்ணி கூட குடிக்க கூடாது ஞாபகம் இருக்கட்டும் என்று வார்னிங் கொடுக்கிறார்.

உடனே மனோஜ் பிரியாணியே வைத்துவிட்டு மீண்டும் பிச்சை எடுக்க வந்து உட்கார்ந்து விடுகிறார். அந்த நேரத்தில் கோவிலுக்கு மீனா வருகிறார். மீனா முதலில் மனோஜை கடந்து சென்று விடுகிறார். பிறகு மீனாவிற்கு சந்தேகம் வந்து மனோஜை நோக்கி வர மனோஜ் மீனாவை பார்த்ததும் தலையில் துண்டு போட்டுக் கொண்டு முகத்தை மறைத்தபடி இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Siragadikka aasai serial April 15th promo and episode full update

சீரியல்களிலும் திரைப்படங்களிலும் முகத்தில் மீசை மற்றும் மரு வைத்தால் மாறுவேஷம் என்றும் அவர்களை அவருடைய உறவினர்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று காட்டிக் கொண்டிருந்த சினிமாவில் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலில் முகம் முழுக்க கரியை பூசி பிச்சைக்காரராக மாறி இருக்கும் மனோஜை மீனா கண்டுபிடிப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+