பிச்சைக்காரனாக வந்த மனோஜ்.. வார்த்தையை விட்ட விஜயா.. அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி.. ரோகிணி எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். அதில் கோவிலில் பிச்சைக்காரராக பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மனோஜை மீனாவும், முத்துவும் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து இருக்க வீட்டிற்குள் பல பிரச்சனைகள் வெடிக்கிறது.
மறுபக்கத்தில் ஸ்ருதி தன்னுடைய அம்மா வீட்டில் இருந்து தான் மீண்டும் ரவி வீட்டுக்கு போகிறேன் என்று அவருடைய அம்மா அப்பாவிடம் சண்டை போட்டிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோவிலில் மீனா மனோஜ் பிச்சை எடுப்பதை பார்த்து என்ன ஆச்சு? இங்கே இருக்கிறீங்க என்று கேட்க, அதற்கு மனோஜ் ஒன்றும் பேசாமல் இருக்கிறார். உடனே மீனா முத்துக்கு ஃபோன் போட்டு வர சொல்கிறார். மறுபக்கத்தில் வீட்டுக்கு போன ஸ்ருதி அவருடைய அப்பா அம்மாவிடம் சண்டை போடுகிறார்.

நீங்க பார்த்த மாப்பிள்ளை பிஜு என்னை வழி மறைச்சு பிரச்சனை பண்ணுனான். முத்து தான் என்னை காப்பாற்றினார் என்று சொல்ல, அதற்கு அவர்கள் இது முத்து போட்ட ப்ளான்னா தான் இருக்கும். அவன் தான் பிஜூவை வர சொல்லி இருப்பான் என்று சொல்ல, அதற்கு கோபமான ஸ்ருதி சம்பந்தமில்லாமல் பேசாதீங்க... இன்னைக்கு தான் முத்துவும் பிஜுவும் சந்திச்சு இருக்காங்க.
இதுக்கு முன்பு அவங்க இருவரும் பார்த்துக் கொண்டது கூட கிடையாது. எனக்கு உங்க மேல தான் சந்தேகமா இருக்கும் என்று சொல்ல, வாசுதேவன் கோபப்படுகிறார். அதற்கு ஸ்ருதி நீங்க மீனாவை பற்றி தப்பா பேசி இருக்கீங்க அதனாலதான் முத்து உங்கள கோபப்பட்டு அடிச்சாரு. மீனா என்னை சொந்த சிஸ்டர் போல தான் பாத்துக்கிட்டாங்க. மிடில் கிளாஸ் ஃபேமிலி என்றால் காசுக்கு தான் ஆசைப்படுவாங்களா? என்று ஸ்ருதி கோபப்பட்டு நான் இங்க வந்து இருக்கவே கூடாது.
ரவி பாவம்.. உங்க சண்டையால நாங்க ஏன் பிரிஞ்சு இருக்கணும்? நான் வீட்டுக்கு வரல என்றதும் ரவி வீட்டுக்கு போகாம ரெஸ்டாரண்டில் தான் தங்கி இருக்கிறான் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் மனோஜ் கத்தி கத்தி பிச்சை எடுத்து தொண்டை அடைச்சு போய் விடுகிறது. அப்போது அங்கு வரும் முத்து மனோஜை வா வீட்டுக்கு போகலாம்? ஏன் இப்படி பண்ணுற? உன்னை இப்படி பார்த்தா அம்மா கஷ்டப்படுவாங்க என்று கூப்பிட,

அதற்கு மனோஜ் நான் கனடா போகணும் காசு வேணும். இது சாமியார் சொன்ன பரிகாரம் என்று சொல்ல, அதற்கு முத்து எந்த சாமியாரும் இந்த பரிகாரம் சொல்ல மாட்டாங்க என்று அவரை இழுத்து காரில் ஏற்று போகிறார். மனோஜின் டிரஸ் எங்கே என்று கேட்க டிரஸ் என்னுடைய பார்க் நண்பரிடம் இருக்கிறது என்று அவருக்கு போன் போட அவர் போனை எடுக்காததால் பிச்சைக்கார டிரஸில் வீட்டிற்கு மனோஜ் கூட்டிக்கொண்டு வருகின்றனர்.

வீட்டு வாசலில் மனோஜுடன் மீனாவும் முத்துவும் வந்து நிற்க அதற்கு விஜயா பிச்சைக்காரனை எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா என்று முத்துவை திட்டுகிறார். அதோடு மனோஜிடம் உனக்கு கை, கால் எல்லாம் நல்லா தானே இருக்கு உழைச்சி சாப்பிட வேண்டியது தான? எதுக்கு பிச்சை எடுக்கிற, உன்னை சொல்லி தப்பு இல்ல உன்ன பெத்து உன்னை பிச்சை எடுக்க அனுப்புனா உங்க அம்மாவை தான் சொல்லணும் என்று விஜயா பேசிக்கொண்டே மீனா பழைய சோறு இருந்தா போட்டு அனுப்பு என்று சொல்கிறார்.
அப்போது மனோஜ் அம்மா... என்று கூப்பிட அதற்கு இப்படி கூப்பிடாத என்று விஜயா காதை பொத்துகிறார். ஆனால் மனோஜ் தலையில் போட்டிருந்த துண்டை எடுக்க விஜயா அப்படியே ஷாக் ஆகி அமர்ந்துவிட, அதற்குப் பிறகு ஏன்டா உனக்கு இந்த நிலைமை நான் உன்னை ராஜா மாதிரி தானே வளர்த்தேன்? எதுக்கு இப்படி பண்ணுன என்று பேச கனடாவில் நல்ல வேலை இருக்குது நீங்களும் காசு தர மாட்டேன்னு சொல்லிட்டீங்க இதுக்கு சாமியார் பரிகாரம் சொன்னார்.

அதனால தான் இப்படி பண்ணினேன் என்று சொல்ல அப்போது ரூமில் இருந்து வெளியே வந்த ரோகிணி அதிர்ச்சி அடைந்து மனோஜ் பக்கத்தில் போக, முத்து பார்லர் அம்மா அவன் கிட்ட போகாத தள்ளியே நில்லு.. இன்னொரு பிச்சைக்காரன் கிட்ட இருந்து தான் இந்த டிரஸ்ஸை வாங்கி போட்டு இருக்கான் என்று சொல்ல ரோகிணியும் தள்ளி நின்று அழுது கொண்டிருக்கிறார். அதுபோல விஜயா ஒரு பக்கத்தில் தன்னுடைய மகனின் நிலைமையை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications