சிறகடிக்க ஆசை: மீனா குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சி கொடுத்த சிந்தாமணி.. முத்து எடுத்த முடிவு! பல அதிரடி சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 17-ஆம் தேதிக்கான எபிசோடில், மீனா மற்றும் முத்துக்கு தன்னுடைய தம்பி சத்யா காதலிப்பது சிந்தாமணியின் மகள் என்ற உண்மை தெரிய வருகிறது. அதே நேரத்தில் சிந்தாமணி தன்னுடைய புருஷனிடம் சத்யா பற்றிய பல உண்மைகளையும் போட்டு உடைக்கிறார். இதனால் இவர்களுடைய கல்யாணத்திற்கு பெரிய பிரச்சனை வருகிறது. மறுபக்கம் ரோகிணி மனோஜின் வாழ்க்கையில் பஞ்சாயத்தை ஏற்படுத்தி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial April 17 Episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், சிந்தாமணிக்கு சத்யாவும் தன்னுடைய மகளும் காதலிக்கும் விஷயம் தெரிகிறது. அதே நேரத்தில் மீனா வெற்றி பெற்றதற்காக சிந்தாமணி மகள் ரேகாவும், சத்யாவும் கேக் வாங்கிக் கொண்டு வந்து முத்துவின் கார் செட்டில் வைத்து கட் பண்ணி வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
அப்போது தாங்கள் ரெண்டு பேரும் காதலிக்கிறோம் என்று ரேகா மீனாவிடம் சொன்னதும் முத்து எங்களுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் உன்கிட்ட சத்யா காதலை சொல்றதுக்கு முன்னாடியே எங்ககிட்ட சொல்லிட்டான் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ரேகா சந்தோஷப்படுகிறார். அப்போது மீனா உங்க காதலுக்கு உங்க அப்பா சம்மதிப்பாரா? என்று கேட்க, எங்க அப்பா கூட பிரச்சனை இல்ல ஆனா எங்க அம்மா தான் பிரச்சனை பண்ணுவாங்க என்று சொன்னதும், நான் உங்க அம்மாவிடம் வந்து பேசுறேன் என்று மீனா சொல்கிறார்.

ரேகா சொன்ன உண்மை
அதற்கு ரேகா நீங்க வந்து பேசினா கண்டிப்பா எங்க அம்மா சம்பாதிக்கவே மாட்டாங்க என்று சொன்னதும், மீனா அதிர்ச்சி அடைகிறார். எங்க அம்மாவை உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று ரேகா சொல்ல, யார் என்று மீனா கேட்க, அதற்கு ரேகா நீங்க யாரை தேர்தலில் தோற்கடிச்சிங்களோ அதே சிந்தாமணி தான் என்னோட அம்மா என்று சொன்னதும் மீனா அதிர்ச்சி அடைந்து இந்த கல்யாணம் நடக்காது உங்களுடைய பேச்சை இனிமே நிறுத்திக்கோங்க என்று கோபப்படுகிறார்.

முத்து எடுத்த முடிவு
அதற்கு முத்து மீனாவை சமாதானப்படுத்துகிறார். அப்போது நான் தேர்தலில் எதிர்த்து நிற்கிறேன் என்றதுமே ஆள் வச்சி கத்தியால் குத்த வச்சாங்க, ஆனா இவங்க வீட்டு பொண்ணு என் தம்பியை கல்யாணம் பண்ண போறானு தெரிஞ்சா அவங்க என்ன வேணாலும் பண்ணுவாங்க என்று மீனா பயப்படுகிறார். ஆனாலும் முத்து ரேகாவிடம் உங்க அம்மா சம்மதிக்கவில்லை என்றால் நீ வீட்டை விட்டு வெளியே வர ரெடியா என்று கேட்க, ரேகாவும் நான் சத்யா இல்லாமல் வாழ முடியாது கண்டிப்பாக வந்து விடுவேன் என்று சொன்னதும் சரி உங்க கல்யாணத்தை நாங்கள் நடத்தி வைக்கிறோம் என்று முத்து வாக்கு கொடுக்கிறார்.
ரோகிணிக்கு தெரிந்த ரகசியம்
மறுபக்கத்தில் மனோஜும் அமெரிக்க பெண்ணான ஹரிணியும் ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும்போது ஹரிணிக்கு வாமிட் வருகிறது. உடனே அவர் ஆட்டோவை விட்டு வெளியே இறங்கி வாமிட் பண்ணிக் கொண்டிருக்கும் போது மனோஜ் தலையை பிடித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

சிந்தாமணி உடைத்த ரகசியம்
பிறகு மனோஜ் சோடா வாங்கி வர போன நேரத்தில் ரோகிணி ஹரிணியிடம் வந்து பேச்சு கொடுத்து தன்னுடைய பார்லர் அட்ரஸையும் கொடுக்கிறார். அப்போது மனோஜ்க்கு எங்கேஜ்மென்ட் முடிந்து விட்ட உண்மைகளையும் ரோகிணிக்கு தெரிகிறது. உடனே அதிர்ச்சியாகி அங்கிருந்து போகிறார். கடைசியாக சிந்தாமணி தன்னுடைய புருஷனை சந்தித்து தன்மகள் ரேகா சத்யாவை காதலிக்கும் விஷயத்தை போட்டு கொடுக்கிறார்.
அதோடு சத்யாவால் தான் அவருடைய அப்பாவே தற்கொலை பண்ணிக்கிட்டாரு. சத்யா ஒரு திருடன், ஆரம்பத்தில் பைக்கை திருடுனான் அப்புறம் அவனோட சொந்த மாமியாரிடம் பணத்தை திருடுனான் என்றெல்லாம் போட்டுக் கொடுக்க இதைக் கேட்டு ரேகாவின் அப்பா அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.













Click it and Unblock the Notifications