சிறகடிக்க ஆசை: விஜயாவால் மீனா பூக்கடைக்கு வந்த பிரச்சனை.. முத்து கொடுத்த சர்ப்ரைஸ்.. இது செம காதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனா பூக்கடை மீது விஜயா கம்ப்ளைன்ட் செய்ததால் பூக்கடையை கார்ப்பரேஷன் ஆபீஸிலிருந்து தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். ஆனால் மீனாவிற்கு முத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி மற்றும் ரவி மீண்டும் வீட்டிற்கு வந்ததால் ஸ்ருதியின் குடும்பத்தினர் மீண்டும் எப்படி ஸ்ருதியை கூட்டிட்டு வருவது என்று பிளான் போட்டு இருக்கின்றனர். நாளைக்குகாண எபிசோடில் அண்ணாமலை வீட்டிற்கு வந்த ஸ்ருதியின் அம்மா சுதா விஜயாவை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக விஜயாவிடம் 100 ரூபாய்க்கு பூ கொடுங்க,

Siragadikka aasai serial April 17th to 20th promo and fans reaction

நீங்க இங்கே பூ வியாபாரம் தானே பண்ணுறீங்க என்று பணத்தை கொடுக்க விஜயா வருத்தத்தோடு வேறு வழி இல்லாமல் பூவை முழம் போட்டு 100 ரூபாய்க்கு கொடுத்துவிட்டு இந்த அம்மாவை சம்மந்தி என்று நாம மரியாதை கொடுத்தால் இவங்க இந்த பூக்கடையை வச்சு நம்ம அவமானப்படுத்துறாங்க, இந்த பூக்கடை இருந்தா தானே நாம் அவமானப்படனும் இனி இந்த பூக்கடை இருக்கக்கூடாது என்று பிளான் போடுகிறார்.

அதைத் தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கார்ப்பரேஷன் ஆபீஸில் இருந்து வந்து மீனாவின் பூக்கடை வண்டியை இது மக்கள் நடமாட்டத்திற்கு டிஸ்டர்பன்ஸ் ஆக இருக்கிறது என்று சொல்லி தூக்கி கொண்டு போகின்றனர். அப்போது மீனா அவர்களிடம் கெஞ்சி கூத்தாடுகிறார்.

ஆனால் இதையெல்லாம் மாடியில் நின்று விஜயா மற்றும் ரோகிணி இருவரும் பார்த்து சந்தோஷப்படுகின்றனர். இனி இந்த கடை இருக்காது என்று அவர்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதை தொடர்ந்து முத்து வீட்டுக்கு புது ஸ்கூட்டி ஒன்று வாங்கிட்டு வந்து மீனாவிடம் அதை கொடுத்து நீ சுயமா முன்னேறி ஜெயிக்கணும் என்பதற்காக உனக்கு பூக்கடை வச்சு தந்தேன்.

ஆனால் அது சிலருடைய சூழ்ச்சியால் இல்லாமல் போயிட்டு... அதற்காக அப்படியே விட்டுவிட முடியாது. அந்த வண்டி போனால் என்ன? இந்த வண்டியை வச்சு இனி எந்த இடத்துக்கு வேணுமென்றாலும் உன்னால் பூ கொண்டு வந்து கொடுக்க முடியும் என்று சொல்ல, மீனாவும் முத்துவும் பைக்கில் சந்தோஷமாக போகின்றனர்.

இதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இப்படியான ப்ரோமோ வெளியாகியிருக்கும் நிலையில் இது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே முத்து மற்றும் மீனா இருவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் தன்னுடைய மனைவிக்காக முத்து செய்யும் சர்ப்ரைஸ் பலருடைய பாராட்டைப் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+