சிறகடிக்க ஆசை: வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஜீவா.. ஸ்டேஷனுக்கு வந்த முத்துவுக்கு கிடைத்த ஷாக்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 27ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஜீவாவிடம் பணத்தை கேட்டு மனோஜ் மற்றும் ரோகிணி போலீஸ் ஸ்டேஷனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு முத்து மற்றும் மீனாவும் வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்த மீனா தன்னுடைய வண்டியை பார்த்து அழுது கொண்டிருக்கிறார். இதை பார்த்து அங்கு வந்த லேடி கான்ஸ்டபிள் என்னம்மா என்ன பண்ணுற என்று கேட்க, அதற்கு மீனா இது என்னுடைய வண்டிங்க நான் தெரியாமல் நோ பார்க்கிங்கில் விட்டுட்டு கடைக்குள் போயிருந்தேன்.

வண்டிக்குள் பூவெல்லாம் இருக்கு தயவு செய்து வண்டியை கொடுங்க என்று கேட்க, அதற்கு அந்த கான்ஸ்டபிள் எஸ்ஐ வந்த பிறகு அவர் கிட்ட தான் பேசணும் என்று சொல்ல, மீனா முத்துக்கு சொல்லலாமா? வேண்டாமா? என்று யோசித்து ஒரு இடத்தில் அப்படியே உடைந்து போய் அழுது கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஜீப்பில் மனோஜ் ரோகிணி ஜீவா மற்றும் போலீஸ் எல்லாரும் ஸ்டேஷனுக்கு வந்து இறங்குகின்றனர்.
அப்போது மீனா அவர்களை பார்க்காமல் எதிர் பக்கமாக நின்று கொண்டு முத்துவுக்கு போன் பண்ணி கொண்டு இருக்கிறார். முத்துவிடம் பைக்கை போலீஸ் தூக்கிட்டு வந்துவிட்ட விஷயத்தை சொல்ல, முத்து முதலில் திட்டுகிறார். பிறகு எந்த ஸ்டேஷனில் இருக்கா? நான் அங்கே வருகிறேன் என்று கிளம்பி வருகிறார். போலீஸ் ஸ்டேஷனில் ஜீவாவை போலீஸ் விசாரிக்க, அதற்கு ஜீவா பணத்தை எல்லாம் தர முடியாது, இவன்தான் என்னை ஏமாத்திட்டான்.
நீ கனடாக்கு போ பின்னாடியே நான் வரேன்னு சொல்லி வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். இவன் கூட ஆறு மாசம் சேர்ந்து வாழ்ந்ததற்கு அந்த பணம் சரியா போச்சு என்று சொல்ல, ரோகிணி எப்படி பேச உனக்கு அசிங்கமா இல்லையா? நீ பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவ என்று கோபப்படுகிறார்.
அதற்கு போலீஸ் பொறுமையாக பேச சொல்ல, ஜீவா பணத்தை தர முடியாது. எதுவா இருந்தாலும் என் லாயர் கிட்ட பேசிக்கோங்க என்று லாயரை போன் பண்ணி வர வைக்கிறார். லாயரை வைத்துக் கொண்டும் பணத்தை கொடுக்க முடியாது என்று சொல்கிறார். அப்போது லாயர் மனோஜ் ஓட பெர்மிஷனுடன் தான் அந்த பணம் ட்ரான்ஸ்பர் ஆகி இருக்கு அவரே கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறார் என்று ஆதாரத்தை காட்ட மனோஜ் நான் இவளை நம்பி கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டேன் என்று சொல்ல ரோகிணி கோபப்படுகிறார்.
அதற்கு ஜீவா நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க ஆனால் பணத்தை கொடுக்க முடியாது என்று உறுதியாக சொல்கிறார். ஒரு வருஷம் இவரோட சேர்ந்து வாழ்ந்து இருக்கிறேன். அதற்காக காம்போசீசன் தான் இந்த பணம் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் வெளியே முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கும்போது முத்துவுக்கு தெரிந்த ஒரு கான்ஸ்டபிள் வருகிறார்.
அவரிடம் முத்து தன்னுடைய பைக்கை போலீஸ் தூக்கிட்டு வந்த விஷயத்தை சொல்ல அதற்கு அந்த கான்ஸ்டபிள் எஸ்ஐ வரட்டும் பணத்தை கட்டிட்டு வண்டியை எடுத்துட்டு போங்க என்று சொல்லி காத்திருக்க சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் ஜீவாவை வக்கீல் தனியா கூட்டிட்டு வந்து நீங்கள் இப்படி எல்லாம் பேசாதீங்க உங்களுடைய கேரக்டரை நீங்களே தரம் தாழ்த்துகிறீர்கள் என்று சொல்கிறார்.
அதை தொடர்ந்து மனோஜிடம் நீங்க என்ன சொல்றீங்க என்று லாயர் கேட்க, அதற்கு மனோஜ் எனக்கு என்னுடைய பணம் வேணும். அந்த பணத்தை தந்தால் தான் அவர் ஸ்டேஷனிலிருந்து வெளியே போக முடியும் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிரேம்ஜியுடன் காதலா? 40 வயது வரை அவர் கல்யாணம் பண்ணாத காரணம்.. ஓபனாக பேசிய சோனா! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications