சிறகடிக்க ஆசை: ரோகிணியின் பழைய வாழ்க்கையை தோண்டும் விஜயா.. முத்து கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மனோஜை கேள்வி கேட்ட ரோகிணியின் பழைய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விஜயா பிளான் போடுகிறார். அதுபோல வீட்டிற்கு முத்து புது பொருள் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்திருக்கும் நிலையில் அதை வைத்து பஞ்சாயத்து நடக்கிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா ரோகிணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மனோஜ் ஜீவாவோடு லிவிங்கில் இருக்கும்போது குழந்தை ஏதுவும் உண்டாச்சா? என்று கேட்டதால் கோபமான விஜயா ரோகிணியின் பழைய வாழ்க்கையை பற்றி பேசுகிறார். இதனால் அதிர்ச்சியான ரோகிணி நாம இப்போ அமைதியா இருந்தா தப்பா போயிடும்னு விஜயாவை மடக்கி கேள்வி கேட்கிறார்.

அதாவது உங்க பையன் ஜீவாவோட லிவ்விங்கில் இருந்தது உண்மைதானே? அதுதானே நான் கேட்டேன்? கர்ப்பமாகவில்லை என்றால் இல்லை என்று சொல்ல வேண்டியது தானே அதற்காக எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டும் என்று கேட்க, அதற்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் விஜயா மனோஜை கூட்டிக்கொண்டு தனியாக வந்து இந்த ரோகிணி இப்படியெல்லாம் பேசுவானு நான் நினைக்கல, எனக்கு இவளை உங்க கல்யாணத்துக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தெரியும்.
ஆனால் அதற்கு முன்பு இவ எப்படி எல்லாம் இருந்தான்னு தெரியாது.. அதை பற்றி நாம தெரிஞ்சுக்கணும் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து மீனா அண்ணாமலையை சாப்பிட கூப்பிட ரோகிணியும் மனோஜும் வருகின்றனர். அப்போது அண்ணாமலை முத்துவை பற்றி கேட்க, மீனா அவர் வேலைக்கு போயிருக்கிறார் என்று சொல்ல விஜயாவும் மனோஜும் முத்துவை கிண்டலாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் முத்து கட்டைகளுடன் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறார். இதை பார்த்த எல்லோரும் என்னவென்று விசாரிக்க முத்து என்னுடைய பிரண்டு வெளிநாட்டுக்கு போக இருப்பதால் கட்டிலை கம்மி விலையில் காசு கொடுத்து வாங்கிட்டேன் என்று சொல்ல அதற்கும் வழக்கம் போல விஜயா நக்கல் பேச ரோகிணி இந்த கட்டில் போட இங்கு எங்க இடம் இருக்கு என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அதற்கு முத்து நான் இது மாடியில் போடுவதற்காக வாங்கிட்டு வந்தேன்.
நாங்க ரூம் கட்டுர வரைக்கும் இந்த கட்டில் கீழே தான் இருக்கும் என்று சொல்ல விஜயா முத்துவை பழமொழி சொல்லி கிண்டல் செய்கிறார். அதற்கு முத்து விஜயாவை பாடி கிண்டல் செய்கிறார். அடுத்ததாக ஸ்ருதியும் ரவியும் வீட்டிற்கு வர அங்கு கட்டில் இருப்பதை பார்த்து ஸ்ருதி கட்டிலில் ஏறி குதித்து சந்தோஷப்படுகிறார். அதோடு இந்த கட்டில் ரொம்பவும் விலை உயர்ந்தது இது பர்மா கட்டில் இது ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும் என்று பாராட்டிக் கொண்டிருக்க, விஜயாவின் முகம் மாறுகிறது.
பிறகு மனோஜ் கட்டிலை பற்றி ஒன்றுமே தெரியாமல் ஏதோ பேசி ஸ்ருதியிடம் பல்பு வாங்குகிறார். பிறகு ரவி கப்புல்ஸ் ஈவண்ட் நடக்க போவதாகவும் எல்லோரும் ஜோடியாக கலந்து கொள்ளலாம் என்று சொல்ல மனோஜும் ரோகிணியும் நாங்க தான் எப்படியும் இதில் ஜெயிப்போம் முத்து மீனா இது கலந்து கொண்டாலும் ஜெயிக்க முடியாது அவங்களுக்கு கேட்கப்படும் கேள்விகளே தெரியாது, அவங்களுக்கு புரியாம எப்படி பதில் சொல்ல முடியும் என்று கேவலப்படுத்துகின்றனர்.

அதற்கு முத்துவும் மீனாவும் பதிலடி கொடுக்கின்றனர். ஆனாலும் நாங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை, டைம் வேஸ்ட் பண்ண விரும்பவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். பிறகு இதில் ஜெயிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று ரவி சொன்னது முத்துவும் மீனாவும் நாங்கள் இதில் கலந்து கொள்ள போகிறோம் என்று மனோஜ்க்கு அதிர்ச்சி கொடுக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications