சிறகடிக்க ஆசை: சீதாவிடம் ஸ்ருதி கேட்ட உதவி.. முத்து போட்ட கண்டிஷன்.. சத்யா கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் சத்யாவை சந்திப்பதற்காக மீனா போகக்கூடாது என்று முத்து சொல்லி இருக்கும் நிலையில் அதை மீறி மீனா போயிருக்கும் நிலையில் பல பிரச்சனைகளும் வெடிக்கிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சிட்டி மிரட்டிய நபர்களிடம் முத்து சிட்டியிடம் இருந்து வாங்கிய பொருட்களை கொடுத்துவிட்டு உங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா எனக்கு போன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு வெளியே வந்து சத்யாவிடம் இவன் கூட எல்லாம் சேர்ந்து சுத்திகிட்டு இருக்காத, ஒரு நாள் இவனால தான் உனக்கு ஒரு பிரச்சனை வரப்போகுது. கண்டிப்பாக உன்னை பிரச்சனையில் மாட்டி விட போறான்.

Siragadikka aasai serial

அப்பதான் உனக்கு அவனை பற்றி தெரிய போகுது என்று சொல்ல அதற்கு சத்யா அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீங்க போங்க என்று சொல்ல, சிட்டி இவ்வளவு நாளும் நம்மால அசிங்கப்படுத்திட்டு இருந்தாரு இப்போ நம்ம பிசினஸ்லயும் பிரச்சனை பண்ண தொடங்கிட்டாரு இதே வேற யாராவது இருந்தா நடக்கிறதே வேற.. உனக்காகத்தான் உன் மாமாவா நான் மன்னிச்சு விட்டுட்டு இருக்கிறேன் என்று சிட்டி மிரட்டுகிறார்.

அடுத்து அதைத் தொடர்ந்து சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு ஸ்ருதி வந்து பாஸ் ஆனதிற்காக ஒரு வாட்ச் கிப்ட் கொடுத்துவிட்டு இந்த ஹாஸ்பிடலில் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை சொல்ல முதலில் சீதா அதில் இருக்கும் கஷ்டங்களை பற்றி சொல்ல ஆனால் ஸ்ருதி தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதை பார்த்து சரி என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி சந்தோஷப்படுகிறார்.

Siragadikka aasai serial

அதோடு இந்த விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் குறிப்பா உங்க அக்கா மீனாவிடம் கூட சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில் சத்யாவிடம் அவருடைய அம்மா கை எப்படி இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருக்க கையெல்லாம் நல்லா ஆயிடுச்சு என்று சத்தியா சொன்னதும் நான் உனக்கு கை சரியானதும் கோயிலில் கூழ் ஊற்றுகிறேன் என்று வேண்டி இருக்கிறேன் என்று கோயிலுக்கு கூப்பிடுகிறார்.

முதலில் வர மறுக்கும் சத்தியா பிறகு சம்மதிக்கிறார். அதோடு அக்காவையும் மாமாவையும் கூப்பிடுவேன் என்று அம்மா சொன்னதும் அந்த ஆளை மட்டும் கூப்பிடாத அக்கா வேணா வரட்டும். அந்த ஆளு வந்த நான் வரமாட்டேன் என்று சத்யா சொல்லிக் கொண்டு இருக்க, அந்த நேரத்தில் மீனா வந்து விடுகிறார். மீனாவிடம் அம்மா நடந்த விஷயத்தை சொல்ல மீனா சத்யாவிடம் கோபப்படுகிறார். அதற்கு சத்யா எனக்கு அந்த ஆளை புடிக்கல, அவர் வந்தா நான் இருக்க மாட்டேன்.. நீ கண்டிப்பா வரணும் என்று சொல்லி விடுகிறார்.

Siragadikka aasai serial

சத்யா பேசுவதை கேட்டு என்ன பண்ண என்று மீனாவின் அம்மா மீனாவிடம் கேட்க, மீனா இதற்கு என்ன கேட்டா நான் என்ன பண்ண.. அதான் துரை சொல்லிட்டு போயிட்டாரே.. என்று கிளம்பி வருகிறார். வீட்டில் மீனா துணி மடித்துக் கொண்டிருக்கும் போது முத்து வர முத்துவிடம் சத்யா கை சரியானதும் கோவிலில் கூழ் ஊத்துறதா அம்மா வேண்டிக்கிட்டாங்க இப்போ கைது சரியாயிடுச்சு அதான் அம்மா நம்ம ரெண்டு பேரையும் வரச் சொன்னாங்க என்று சொல்ல,

அவ்வளவு சீக்கிரமாக அவனுக்கு கை சரியாயிடுச்சா? அப்போ நான் மெதுவா தான் ஒடச்சிருக்கேன் போல என்று கேட்க, மீனா மீண்டும் நம்ம ரெண்டு பேரையும் வர சொன்னாங்க என்று சொன்னதும் முத்து நம்ம ரெண்டு பேரையுமா? உன்னை மட்டுமா என்று கேட்க மீனா என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க முத்து உண்மையை கண்டுபிடித்து விடுகிறார். உன் தம்பி என்னை வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கிறேன் அப்படித்தானே..

Siragadikka aasai serial

என்னை வரக்கூடாதுன்னு சொன்ன இடத்துக்கு நீயும் போகக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். பிறகு மீனாவின் அம்மா கோவிலில் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது மீனா இன்னும் வராததால் சத்யா அந்த ஆளு தான் வரக்கூடாதுன்னு சொல்லி இருப்பாரு என்று பிரச்சனை செய்ய, மீனாவின் அம்மா போன் பண்ணி மீனாவை ஏன் இன்னும் வரல என்று கேட்க,

மீனா வேறு வழியில்லாமல் முத்து சொன்னதைப் பற்றி சொல்ல மீனாவின் அம்மா சத்யாவிடம் போனை கொடுத்து விட சத்தியா நீ வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு அவர் யாரு... இங்க நீ வந்தாகணும் என்று மிரட்டுகிறார். மீனா என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கும் போது ஸ்ருதி மீனாவிடம் என்ன டல்லா இருக்கீங்க என்று கேட்க, மீனா தன்னுடைய தம்பியின் பிறந்தநாள் பற்றியும் அம்மாவின் வேண்டுகோள் பற்றியும் சொல்கிறார்.

அதற்கு ஸ்ருதி இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு. உங்க தம்பியை பார்க்க நீங்க போக கூடாதா? நீங்க முத்துவிடம் வேலைக்கு ஒன்னும் இருக்கலையே.. அவரிடம் பெர்மிஷன் வாங்கிட்டு தான் எங்கேயும் போகணுமா? என்று ஏத்தி விட மீனா என்ன முடிவெடுக்க என்ற குழப்பத்தில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+