சிறகடிக்க ஆசை: ஸ்ருதியால் வம்பில் சிக்கும் மீனா.. முத்து பேச்சை மீறியதால் வந்த வினை! விஜயா செய்த சதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் முத்து பேச்சை மீறி தன்னுடைய தம்பி பிறந்த நாளுக்காக கோயிலுக்கு போன மீனா பற்றி விஜயா முத்துவிடம் போட்டுக் கொடுத்த வீட்டில் பிரச்சனை வெடிக்கிறது.
அந்த வகையில் அடுத்த வாரத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் ஒரு புது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே சத்யா மீது கோபத்தில் இருக்கும் முத்து மீண்டும் சத்தியா சிட்டியோடு சுத்தி கொண்டு இருப்பதை பார்த்து கோபப்படுகிறார். ஆனாலும் சத்யாவிடம் நீ இந்த சிட்டியோடு சுற்றாத அவனால் பெரிய பிரச்சனையில் சிக்க போற என்று அட்வைஸ் செய்ய அதற்கு சத்தியா திமிராக எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை நீங்க சொல்லும் அட்வைஸ் நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று பேசுகிறார்.

இதனால் முத்து சத்யா மீது கோபமாக இருக்கிறார். ஆனால் ஏற்கனவே சத்யா செய்த திருட்டு விஷயம் மற்றும் சிட்டியோடு சுற்றிக் கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றி மீனாவிடம் இன்னும் முத்து சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார். சத்யா மீது குடும்பத்தினர் வைத்திருக்கும் நம்பிக்கை உடைந்து போக வேண்டாம் என்று முத்து நினைக்கிறார். ஆனாலும் முத்துவுக்கு மீனா சத்யாவை சந்திப்பதும், அம்மா வீட்டுக்கு போவதோ பிடிக்கவில்லை.

இந்த நிலையில் சத்யாவின் பிறந்தநாளுக்காக என்னுடைய அம்மா கோயிலில் கூல் காய்ச்சி ஊத்துறாங்க அதற்கு போயிட்டு வரேன் என்று மீனா கேட்க, அதற்கு முத்து அவன் பிறந்த நாளுக்காக எல்லாம் நீ கூல் ஊத்த போக கூடாது என்று சொல்ல, மீனா இதைப்பற்றி நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் வந்த ஸ்ருதி நீங்க முத்துகிட்ட வேலைக்கு ஒன்றும் இருக்கல, அவரிடம் பர்மிஷன் கேட்டுக்கிட்டு எங்கேயும் போகிறதுக்கு. உங்களுக்கு புடிச்சிருந்தா நீங்க போங்க என்று ஒரு மீனாவின் மனதை மாற்றிவிட இதையெல்லாம் கேட்டு விஜயா சிரித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் மீனாவும் கோயிலுக்கு கிளம்பி போய் விடுகிறார். பிறகு சிறிது நேரம் கழித்து முத்து வீட்டிற்கு வந்து மீனாவை தேட விஜயா நீ என்னதான் சொன்னாலும் அவ எடுத்த முடிவுலதான் திமிரா இருக்கிறா.. நீ அவ தம்பிக்காக கோயிலுக்கு போகக் கூடாதுன்னு சொல்லி இருக்கிறா ஆனா அவ உன் காதில் பூவை சுத்திட்டு கூழ் ஊத்த போயிட்டா என்று சொல்ல முத்து கோவமாக கோயிலுக்கு வருகிறார்.

அங்கு மீனா கூல் ஊற்றி கொண்டு இருக்க அந்த கூல் கப்பை முத்து வாங்க அதை பார்த்து மீனா அதிர்ச்சியாகி இருக்கிறார். இனி முத்து மீனாவிற்கு சண்டை அடுத்த வாரத்தில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவேளை தன்னுடைய பேச்சை கேட்கவில்லை என்று முத்து மீனாவை அவருடைய அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இந்த முறை முத்துவை மீனா புரிந்து கொள்ளப் போகிறாரா? அல்லது தன்னுடைய தம்பிக்காக முத்து மீது கோபப்படுகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒருவேளை மீனா முத்து மீது கோபப்பட்டு தன்னுடைய அம்மா வீட்டிலேயே இருக்கும்போது சிட்டியால் சத்யா புது பிரச்சனையில் சிக்க வாய்ப்பு இருக்கிறது.
அப்படி சிக்கும்போது தான் சத்யாவிற்கு முத்து பற்றிய உண்மைகள் தெரிய வந்து சிட்டியின் வில்லத்தனமும் தெரிய வாய்ப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை கருத்தில் சொல்லுங்க.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications