சிறகடிக்க ஆசை: முத்துவின் மனதை மாற்றிய செல்வம்.. டீச்சர்களால் மனோஜிடம் சிக்கிய ரோகிணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 22ஆம் தேதி எபிசோடில் முத்து மீனாவிடம் சண்டை போட்டு இருப்பதற்கு செல்வம் அட்வைஸ் செய்து முத்துவின் மனதை மாற்றுகிறார். மறுபக்கத்தில் ரோகிணி தன்னுடைய மகனுக்கு ஸ்கூலில் சேர்ப்பதற்கு விசாரித்த போது மனோஜிடம் சிக்கி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனாவின் அம்மாவும் சீதாவும் முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் முத்துவிற்கு ஒரு சவாரி வருகிறது. உடனே நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு காரை எடுத்து கிளம்பி விடுகிறார். பிறகு முத்துவின் நண்பன் செல்வம், சீதா மற்றும் மீனாவின் அம்மாவை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.

Siragadikka aasai serial

மறுபக்கத்தில் ஒரு ஸ்கூலில் இருந்து இரண்டு டீச்சர்ஸ் வந்து மனோஜ் கடையில் இருக்கும் ரோகிணியிடம் அட்மிஷன் நோட்டீஸ் கொடுக்கின்றனர். ரோகிணி அவர்களிடம் ஸ்கூல் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் வந்து நீங்க குழந்தைகளை ஸ்கூலில் சேர்க்க சொல்றது சரிதான் ஆனால் எங்களுக்கு குழந்தை இருக்கனுமே என்று கேட்க, அதற்கு அவர்கள் குழந்தை இல்லாமலேயே இவ்வளவு விவரம் கேட்கறீங்க இப்போ அட்மிஷன் போட்டு வச்சுக்கோங்க என்று சொல்கிறார்கள்.

ரோகிணி நான் பிறகு உங்களிடம் பேசுகிறேன் என்று நோட்டீஸ் வாங்கி வைத்து விடுகிறார். பிறகு மனோஜ் மற்றும் ரோகிணி பேசிக் கொண்டிருக்கும்போது மனோஜ் உனக்கு அடிக்கடி குழந்தை கனவில் வருதுன்னு சொல்லுறியே அதற்கு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன். நாம இது பற்றி ஏன் ஒரு ஜோசியரிடம் போய் பேசக்கூடாது என்று கேட்க, அதற்கு ரோகிணி குழந்தை பிறக்கனும்னா டாக்டரிடம் தான் பார்க்கணும் என்று சொல்ல, அதற்கு மனோஜ் நான் சொல்றது, செம சாமியார் ரொம்ப சக்தி வாய்ந்தவர் அவரிடம் போய் வரலாம் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial

அதற்கு ரோகிணி வேண்டாம் என்று சொல்ல சரி அப்போ நாம கோவா போயிட்டு வரலாம் என்று ரொமான்ஸாக பேச சரி என்று சொல்லி போய் கஸ்டமரை பாரு என்று விரட்டி விடுகிறார். அடுத்ததாக மீனா தன்னுடைய பூ கட்டும் தோழிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் எப்படி முத்துவை சமாதானம் செய்வது என்று பல ஐடியா சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் உன் மேலயும் தப்பு இருக்கிறது மீனா, நீ அண்ணன் வேண்டாம் என்று சொல்லியும் மீறி ஏன் போன என்றும் தோழிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் மீனாவின் அம்மா போன் பண்ணுகிறார். போனை எடுத்த மீனா எங்களுக்குள்ள சண்டை எல்லாம் முடிஞ்சிடுச்சு நைட்டு சமாதானம் ஆகிவிட்டார் என்று சமாளிக்க அதற்கு மீனாவின் அம்மா, நீ ஏன் என்கிட்ட பொய் சொல்ற? என்று அவர் வந்து முத்துவை பார்த்ததும் முத்து பேசியது எல்லாவற்றையும் சொல்கிறார். அதே நேரத்தில் முத்து சவாரிக்கு வந்த இடத்தில் அவசரமாக ஒரு பெண் வண்டியில் ஏறுகிறார்.

அழுது கொண்டே அந்த பெண் இருப்பதை பார்த்து ஏன் அழுகுறீங்க சொல்லுங்க எதுனா உதவி நான் செய்கிறேன் என்று முத்து கேட்க, அதற்கு அந்தப் பெண் என்னுடைய கணவருக்கும் என்னுடைய அண்ணனுக்கும் ரொம்ப வருஷமா பிரச்சனை இருக்கு. இப்போ அண்ணன் காய்ச்சலில் முடியாமல் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார். அவர பார்க்க கெஞ்சியும் என் புருஷன் விடல. அவரு போக கூடாதுன்னு சொல்லிட்டாரு.

Siragadikka aasai serial

அதனால அவருக்கு தெரியாம தான் போறேன் என்று அந்தப் பெண் சொல்ல முத்து மீனாவை நினைக்கிறார். பிறகு சவாரி முடித்துவிட்டு வந்து நின்று தனியாக நின்று இதையே யோசித்துக் கொண்டிருக்கும் முத்துவிடம் அவருடைய நண்பர் செல்வம் என்னவென்று விசாரிக்க, முத்து நடந்த விஷயத்தை சொல்கிறார். அதற்கு செல்வம் மீனா மீது தப்பில்லை. நீ செஞ்ச எல்லாத்துக்கும் மீனா தலையை மட்டும் தான் ஆட்டனுமா?

உன்னுடைய இஷ்டத்துக்கு தான் இருக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கிறதா? என்று கேட்க நான் அப்படி கொடுமையானவனா? என்று முத்து கேட்கிறார். அதற்கு மீசை சத்யா பற்றிய உண்மைகளை வீட்டில் சொன்னால் அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சொல்லாமல் மறைக்கிற ஆனால் மீனாவை கஷ்டப்படுத்துற மாதிரியே நீ செய்து கொண்டிருக்கிற,

Siragadikka aasai serial

மீனா எப்பவாது உன்னை உங்க அம்மாவிடமோ மனோஜிடமோ பேசக்கூடாதுனு சொல்லி இருக்காங்களா என்று கேட்க முத்து இல்லை என்று சொல்கிறார். மாடியில் ரோம் கட்ட வேண்டும் என்று யோசிக்கிற, இரண்டு கார் வச்சிருக்க எல்லாத்துக்கும் மீனாதான் காரணம் என்று செல்வம் கேட்கிறார். முத்து செல்வம் சொன்னதை எல்லாம் கேட்டு யோசித்து கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+