சிறகடிக்க ஆசை டுவிஸ்ட்.. ரோகிணி மீது சந்தேகப்படும் முத்து.. விஜயாவிற்கு கிடைத்த அதிர்ச்சி..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் பல பிரச்சினைகளைத் தாண்டி ரோகிணி மற்றும் மனோஜுக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு வருகின்றனர்.

அந்த நேரத்தில் மீனாவை அவமானப்படுத்திய விஜயாவிற்கு அவமானங்கள் கிடைக்கிறது.

அதைத் தொடர்ந்து போலீஸ் வீட்டிற்கு வந்த நிலையில் இன்றைய எபிசோட் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial August 4th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் ரோகிணி மற்றும் மனோஜுக்கு மீனாவும் விஜயாவும் சேர்ந்து ஆரத்தி எடுக்கின்றனர். பிறகு விஜயா மீனாவிடம் ஆரத்தி எடுத்துட்டு போய் ரோட்டில் கொட்டிட்டு வா என்று அதிகாரமாக சொல்ல, பாட்டி அதை நீ தான் செய்யணும் என்று சொல்லி விஜயாவிடம் தட்டை கொடுக்க விஜயா அவமானப்பட்டு நிற்கிறார்.

அதைத்தொடர்ந்து மனோஜும் ரோகிணியும் மேலே வந்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்க முத்து மனோஜை இடித்து தள்ளி விட்டு வீட்டிற்குள் வருகிறார். அதற்கு மனோஜ் முத்து, உன் உடம்பில் அவ்வளவுதான் வலுவு இருக்குதா? என்னனா பத்தாவது மாடியில் இருந்தா உன்னை தள்ளினேன் என்று கேள்வி கேட்கிறார்.

பிறகு இருவரும் உள்ளே வந்ததும் ரோகிணியிடம் விஜயா விளக்கேற்ற சொல்லி நீ விளக்கேத்துற நேரம் இந்த வீடு பிரகாசமாக இருக்கிறது என்று சொல்ல, அதற்கு முத்து அப்படின்னா வைக்கொல் போர் எடுத்து வந்து தான் கொளுத்தி விடணும் என்று நக்கல் அடிக்கிறார். பிறகு விளக்கேத்தி முடித்ததும் இருவருக்கும் பாலும் பழமும் கொடுக்க அப்போது போலீஸ் வீட்டிற்கு வந்து நிற்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அப்போது போலீஸ் முத்துவிடம் பிஏ போட்டோவை காட்டி இந்த ஆளு உங்களுக்கு தெரியுமா? உங்க கார்ல தான் வந்தானா? என்று கேட்க, ஆமாம் சார் என்னுடைய கார்ல தான் வந்தான். ஒரு பொண்ண பத்தி தப்பு தப்பா பேசிட்டு வந்தான் அதனால அவனை அடிச்சு ஓட விட்டேன் என்று சொல்கிறார்.

பிறகு அந்த ஆள் கோமா ஸ்டேஜில் இருப்பதாக சொல்ல ரோகிணி சந்தோஷப்படுகிறார். மேலும் விசாரணைக்கு கூப்பிட்டா ஸ்டேசனுக்கு வர மாதிரி இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு கான்ஸ்டபிள் சார் அந்த நபர் கடைசியா போன் செய்த நம்பர் கிடைத்திருக்கிறது என்று சொல்லி அந்த நம்பருக்கு இன்ஸ்பெக்டர் போன் சொல்லி பண்ண சொல்கிறார்.

அப்போது கான்ஸ்டபிள் போன் பண்ணுனதும் ரோகிணியின் போன் அடிக்க, அதனால் கான்ஸ்டபிள் இந்த பொண்ணோட நம்பர் தான் அது என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சடைகின்றனர். பிறகு போட்டோவை காட்டி இவனை உனக்கு தெரியுமா? என்று கேட்க, எனக்கு அப்பாயின்மென்ட் கேட்டு ஒரு போன் வந்தது எனக்கு கல்யாணம் அதனால அப்பாயின்மென்ட் கொடுக்க முடியாது என்று சொல்லிட்டேன். அதன் பிறகு தொடர்ந்து போன் வந்துகிட்டே இருந்தது நான் கட் பண்ணிட்டேன் என்று சமாளிக்கிறார்.

அதைத்தொடர்ந்து போலீஸ் அங்கிருந்து கிளம்பி சென்று விட முத்து எங்கேயோ இடிக்கிறதே என்று சந்தேகப்பட ரோகிணி ஷாக்காகி நிற்கிறார். அப்போது வித்யா எதையோ சொல்லி சமாளித்துவிட்டு நான் போய் ஹாஸ்பிடலில் போய் என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு உனக்கு சொல்றேன் பயப்படாம இரு என்று கிளம்பி போகிறார்.

ரெஸ்டாரண்டில் இருக்கும்போது சுகி போன் போட்டு பசிக்குது இன்னைக்கு உன்னோட சாப்பாடு சாப்பிட முடியாது. நீ உன் அண்ணன் கல்யாணத்துல இருப்ப என்று கேட்க நான் ரெஸ்டாரண்ட் வந்துட்டேன் சமைச்சு அனுப்புறேன் என்று சொல்ல, இன்னைக்கு சீக்கிரம் வேலை முடிஞ்சிடுச்சு நானே வரேன் என்று சொல்லி போனை வைக்கிறார். அடுத்ததாக ரூமில் ரோகிணி தவித்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு ஹாஸ்பிடல் போன வித்யா ரோகிணிக்கு போன் செய்து அவன் கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டான். இப்போதைக்கு கண் முழிக்க வாய்ப்பு இல்லைன்னு டாக்டர் சொன்னாரு. அதனால நீ கவலைப்படாம சந்தோஷமா இரு. உன்னுடைய அடுத்த வாழ்க்கையை தொடரு என்று சொல்ல, ரோகிணி சந்தோஷப்பட்டு வெளியே ஓடிவந்து ஆன்ட்டி என்று விஜயாவை கட்டிக் கொள்ள எல்லோரும் புரியாமல் முழிகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+