சிறகடிக்க ஆசை: விஜயாவிற்கு ஆப்பு வைக்க வந்த ஸ்டூடண்ட்.. முத்து உடைத்த உண்மை.. அதிர்ச்சியில் அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் விஜயாவின் டான்ஸ் கிளாஸ்க்கு புது காதல் ஜோடிகள் வந்திருக்கின்றனர். அதில் விஜயாவின் மாணவன் வீட்டிற்கு வந்து குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயாவின் டான்ஸ் கிளாஸில் காதல் ஜோடிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு விஜயா பரதம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறார். அந்த காதல் ஜோடிகள் விஜயாவிற்கு ஐஸ் வைக்க விஜயா ரொம்பவும் சந்தோஷப்படுகிறார். மறுபக்கத்தில் ஸ்ருதியை சமாதானப்படுத்த ரவி ரெஸ்டாரண்டுக்கு கூப்பிடுகிறார்.

முதலில் வர மறுக்கும் ஸ்ருதி பிறகு ரெஸ்டாரண்டுக்கு கிளம்ப முடிவு எடுக்கிறார். அந்த நேரத்தில் முத்து க்ரிஷ் பிறந்தநாள் பங்க்ஷனுக்கு தான் போனது பிறகு அங்கு அவருடைய பாட்டி அவர் பற்றி சொன்ன உண்மைகள் என எல்லா விஷயத்தையும் சொல்ல மனோஜ் க்ரிஷின் அம்மா தனக்கு ஒரு மகன் இருப்பதை மறைத்து இன்னொரு கல்யாணம் பண்ண போறா அவளை கல்யாணம் பண்ண போற கேனை யாருன்னு தெரியல என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் விஜயாவின் டான்ஸ் கிளாஸில் விஜயாவை இனி எல்லோரும் மாஸ்டர் என்று கூப்பிட வேண்டும் என்று பார்வதி சொல்ல எல்லோரும் விஜயாவை அப்படியே கூப்பிட விஜயாவும் சந்தோஷப்படுகிறார். பிறகு கிளாஸ் முடிந்ததும் டான்ஸ் கிளாஸ் மாணவன் பைக்கில் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து விடுகிறார். அதோடு விஜயாவின் பேக்கை மேலே எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க விஜயா தன்னை பெரிய மாஸ்டர் என்று குடும்பத்திடம் பில்டப் கொடுக்க முத்து வழக்கம் போல விஜயாவிற்கு பல்பு கொடுக்கிறார்.
அதோடு இவன் ரொம்ப வழியுறானே என்று திட்டுகிறார். அதற்கு விஜயா என்னுடைய மாணவனை யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு முத்து வீட்டில் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து கிரிஷ் பற்றி பேச தொடங்க அதனை படிக்கட்டில் நின்று ரோகிணி ஒட்டு கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்து கொடுத்த ஐடியா.. சிந்தாமணி குடும்பத்திற்கு செக் வைத்த சத்யா.. ஆட்டத்தை தொடங்கிய ரோகிணி -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications