சிறகடிக்க ஆசை: குடும்பத்திடம் மகிழ்ச்சி செய்தியை சொன்ன மீனா.. மனோஜை தேடி வந்த பேங்க் ஆபீஸர்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் சீதா காலேஜ் டாப்பராக பாஸ் ஆகி இருப்பதை தெரிந்து மீனா சந்தோஷப்படுகிறார். அதே நேரத்தில் மனோஜ்க்கு அடுத்த பிரச்சனையும் வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் எபிசோடு ஆரம்பத்தில் சீதா காலேஜ் டாப்பராக பாஸாகி இருப்பதை சொன்னதை கேட்டு மீனா சந்தோஷப்பட்டு முத்துவை கட்டிப்பிடித்து கொள்கிறார். பிறகு அண்ணாமலையிடம் வந்து அதை சொல்ல அண்ணாமலையும் சந்தோஷப்படுகிறார். அப்போது விஜயா வந்து யார் பாஸ் ஆகிட்டாங்க? என்ன ஏது என்று விசாரிக்க சீதா பற்றி சொன்னதும் என்னதான் பாஸ் ஆனாலும் கை முழம் தான போடப்போகுது, எப்படியோ அவளும் பூக்கட்டி விற்கத்தானே போற என்று அவமானப்படுத்தி பேசுகிறார்.

Siragadikka aasai serial

முத்து தண்ணீர் கொடுத்து வயிறு எரியும் குடிங்க என்று பல்பு கொடுக்கிறார். பிறகு மனோஜ் மற்றும் ரோகிணி வந்ததும் அவர்களிடமும் இந்த விஷயத்தை சொல்ல ரோகிணி நல்ல விஷயம் என்று பாராட்டுகிறார். ஆனால் மனோஜ் அதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? என்று கேட்க, அதற்கு முத்து அதுதான் பெரிய விஷயம்.. அந்த பொண்ணு அவளா வேலை செஞ்சு இவ்வளவு கஷ்டத்திலும் இவ்வளவு மார்க் எடுத்து பாஸாகி இருக்கா உன்னை மாதிரி அப்பாவோட வருமானத்தில் சொகுசா வாழ்ந்துகிட்டு படிக்கல என்று ஆப் செய்கிறார்.

பிறகு ரவியும் ஸ்ருதியும் வந்து இந்த விஷயத்தை கேள்விப்பட்டு சந்தோஷப்படுகின்றனர். ஸ்ருதி ரவியிடம் பிரியாணி கேட்க அதெல்லாம் எதுக்கு என்று விஜயா சொல்ல, அதற்கு ஸ்ருதி சீதா பாஸ் ஆனதை நாம எல்லாரும் செலிப்ரேஷன் பண்ணனும் என்று விஜயாவை நோஸ்கட் செய்கிறார். பிறகு மீனாவின் அம்மா போன் போட்டு கோவிலுக்கு வர சொல்ல மீனாவும் முத்துவும் கிளம்பி போகின்றனர்.

Siragadikka aasai serial

கோவிலில் எல்லோரும் சந்தோஷமாக போட்டோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது சீதா தன்னுடைய அப்பாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். பிறகு மீனா வந்ததும் மீனா வாழ்த்து சொல்லி ஸ்வீட் கொடுக்கிறார். சீதா மீனாவிற்கு நன்றி சொல்லி அழ மீனா ஆறுதல் சொல்கிறார். தான் போட்டு இருந்த பட்டமளிப்பு கோட்டை மீனாவுக்கு போட்டுவிட்டு சீதா அழகு பார்க்கிறார்.

அதோடு சீதா மீனா அக்கா நல்லா படிப்பா எங்க ரெண்டு பேருக்காக தான் அவளோட படிப்பை விட்டுட்டு வேலை செய்ய ஆரம்பிச்சா.. நாங்க இன்னைக்கு படிக்கிறதுக்கு காரணம் மீனா அக்கா தான் என்று கண்கலங்கி சொல்ல முத்து யோசிக்கிறார். (ஒருவேளை மீனாவும் வரும் காலத்தில் முத்துவால் படித்து பெரிய ஆளாகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது) என்று இன்றைய எபிசோடில் தெரிகிறது.

அதே நேரத்தில் வழக்கம் போல முத்து சத்யாவை ஜாடைமாடையாக திட்டி முத்து விட்டு கிளம்புகிறார். பிறகு மனோஜும் ரோகிணியும் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனோஜ் 2000 ரூபாய் சாப்பாட்டுக்கு செலவழித்தது பற்றி ரோகிணி பேசிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial

அந்த நிலையில் பேங்க் ஆபீஸர் கடைக்கு வந்து மனோஜிடம் உங்களுக்கு கிரெடிட் கார்டு கொடுக்கப் போறோம் எந்த டாக்குமெண்ட்டும் தேவையில்லை என்று பேச அதைக் கேட்டு மனோஜ் ரொம்பவும் சந்தோஷப்படுகிறார். ஆனால் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+