சிறகடிக்க ஆசை: மீனாவால் வீட்டை விட்டு போன முத்து.. விஜயாவுக்கு வந்த பிரச்சனை! உதவி செய்த சத்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 12ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா சொன்ன வார்த்தையால் கோபத்தில் இருந்த முத்து வீட்டைவிட்டு போய்விடுகிறார். இதனால் மீனா முத்துவை ஒவ்வொரு இடமாக தேடி கொண்டிருக்கிறார். அதுபோல விஜயாவிற்கும் புது பிரச்சனை வருகிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா காலையில் எழுந்ததும் முத்துவை தேடி பார்க்க முத்து காணவில்லை. இதனால் மொட்டை மாடி, கிச்சன் என எல்லா இடத்திலும் தேடிக்கொண்டு முத்துக்கு போன் பண்ண அவர் போனை எடுக்கவில்லை. இதனால் மீனா சோகமாக இருக்கிறார்.

அந்த நேரத்தில் காபி கேட்டு வந்த ஸ்ருதி மீனா சோகமாக இருப்பதை பார்த்து என்னவென்று விசாரிக்க, முத்து போன் எடுக்கவில்லை என்று ஃபீல் பண்ணுகிறார். அதற்கு சவாரி வந்து இருக்கும் அதனால போய் இருப்பாரு. செல்போனில் சார்ஜ் இல்லாமல் கூட இருக்கலாம் என்று ஸ்ருதி சமாதானம் செய்கிறார்.
பிறகு அங்கு வந்த விஜயா என்ன சாப்பாடு செய்ய போற என்று மீனாவிடம் நச்சரித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனா அமைதியாக பதில் சொல்லி இருப்பதை பார்த்து விஜயா போனதும் ஸ்ருதி, எப்படித்தான் நீங்க இவ்ளோ பொறுமையா இருக்கீங்களோ? என்னால எல்லாம் இப்படி இருக்க முடியாது.
உங்ககிட்ட பேசுற மாதிரி ஆன்ட்டி என்கிட்ட பேசினா நான் அவங்களை திட்டி விட்டுடுவேன் என்று சொல்கிறார். மீண்டும் மீனா முத்துவுக்கு போன் பண்ணி பார்க்கிறார். ஆனாலும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் நேராக கார் செட்டுக்கு சென்று அங்கு செல்வத்திடன் விசாரிக்கிறார்.
அப்போது அவர் இங்கே வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருந்த நபர் பாண்டிச்சேரிக்கு நண்பர் கூப்பிட்டு இருந்தானே அங்கே போயிருப்பானோ என்று உளறி விடவும் செல்வம் சமாளிக்கிறார். ஆனால் மீனா பாண்டிச்சேரிக்கு எல்லாரும் எதுக்கு போவாங்கன்னு எனக்கு தெரியும் என்று சொல்கிறார்.

இறுதியில் நாங்க முத்து பற்றி விசாரிச்சு தகவல் கிடைத்தால் உங்களிடம் சொல்றோம் என்று சொன்னதும் மீனா அங்கிருந்து போகிறார். மறுபக்கத்தில் விஜயா பார்வதி வீட்டிற்கு போகிறார். அங்கு பார்வதி விஜயாவின் போட்டோவை வைத்து பூஜை செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து கோபப்பட்ட விஜயா அதை எல்லாம் கழட்டி எறிந்து இது பாரு இது என்னுடைய போட்டோ தான்.
அந்த பணக்கார பைத்தியம் செய்த வேலை என்று ஸ்ருதியை திட்டுகிறார். பிறகு மனோஜ் வீடு வாங்கிய விஷயத்தையும் ரோகிணி வந்த நேரம் தான் எனக்கு எல்லாமே நல்லதா நடக்குது என்று சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு பார்வதி நான் கூட்டிட்டு வந்த மருமகள் ஆச்சே நல்லா தான் இருப்பா என்று அவரும் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் இங்கே கிளாஸ் எடுப்பேன் அதுக்கு பிறகு மனோஜ் வாங்கிய புது வீட்டிற்கு கிளாஸ் எடுக்க போயிருவேன். அங்கு வர்ற ஸ்டூடண்ட் வந்தாலே போதும், இன்னும் அதிகமான ஸ்டூடண்ட் சேர்ந்து ஒரு அகடாமி வைத்து விடலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்க அதை விஜயாவின் டான்ஸ் கிளாஸில் இருக்கும் காதலர்கள் கேட்டு விடுகிறார்கள்.
பிறகு அவர்கள் இவங்க டான்ஸ் கிளாஸ் மாத்திட்டா நம்ம வீட்டில் டான்ஸ் கிளாஸுக்கு விட மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். நாம ரெண்டு மாசத்தில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து மீனா சத்யாவுக்கு போன் பண்ணி மாமாவை காணவில்லை அவர் எங்கெல்லாம் போயிருக்காருன்னு தேடி பாத்துட்டு வரலாம் என்று கூப்பிடுகிறார். அதற்கு சத்யா நான் உன் வீட்டுக்கு வந்தா மாமியார் ஏதாவது சொல்லுவாங்க என்று சொன்னது, சரி நான் வெளியே வந்து உன்னை கூப்பிடுகிறேன் என்று வெளியே போய் மீனா சத்யாவுக்கு போன் செய்கிறார்.
இருவரும் முத்து போய் இருக்கும் இடங்கள் எல்லாம் தேடிப் பார்க்கிறார்கள். அப்போது வழியில் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டி பார்க்கிறார்கள். அவர்களிடம் விசாரிக்க அவர்கள் காலையில் எங்களுக்கு உணவு வாங்கி தந்துட்டு போனார் என்று சொல்கிறார்கள். ஆனால் இரவு ஆகியும் முத்துவை காணவில்லையே என்று மீனா வருத்தப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications