சிறகடிக்க ஆசை: மீனாவை அசிங்கப்படுத்தும் முத்து.. அண்ணாமலை கேட்ட கேள்வி.. இப்படியா பண்ணுவாங்க?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 13ஆம் தேதிக்கான எபிசோடில், காணாமல் போயிருந்த முத்து வீட்டிற்கு வருகிறார். ஆனால் மீனாவை கஷ்டப்படுத்துகிறார். மீனாவிடம் சொன்ன வார்த்தையால் மீனா கதறி அழுகிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவை காணவில்லை என்று மீனா ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனாவும் முத்துவும் உதவி செய்யும் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டி வருகிறார்கள். அவர்களிடம் விசாரிக்கும் போது அவர்கள் காலையில் தங்களுக்கு சாப்பாடு வாங்கி தந்து விட்டுப் போனதாக சொல்கிறார்கள்.

பிறகு அவர்கள் போனதும் இவர்களுக்கு சாப்பாடெல்லாம் வாங்கி கொடுத்துட்டு போயிருக்கிறார். ஆனால் எனக்கு ஒரு வார்த்தை கூட பேசலையே என்ன நடந்தது என்று தெரியலையே என்று மீனா குழம்பிக் கொண்டிருக்கிறார். பிறகு முத்து குடிக்க போயிருப்பாரோ என்று சந்தேகத்தில் பாருக்கு சென்று பார்க்கிறார்கள்.
அங்கு முத்து இல்லை. குடிக்க வந்தவர்கள் எல்லோரும் மீனாவை ஒரு மாதிரியாக பார்த்து அவரிடம் காசு கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். பிறகு சத்யா மீனாவை கூட்டிக்கொண்டு வீட்டில் வந்து விடுகிறார்.வீட்டிற்கு வந்ததும் அண்ணாமலை இன்னும் அவன் வரவில்லையா என்று கேட்கிறார். ஆமாம் மாமா என்று சொல்லிவிட்டு மீனா பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மீனாவிடம் அவருடைய அம்மாவும் சீதாவும் போன் பண்ணி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் முத்து வீட்டிற்கு வருகிறார். முத்துவை பார்த்ததும் அண்ணாமலை நீ எங்க போயிருந்த? எதுக்காக வீட்டுக்கு ஒரு போன் பண்ணி கூட சொல்லல? உனக்காக மீனா சாப்பிடாமல் உன்னை ஒவ்வொரு இடமாக தேடிகிட்டு அலையுறா என்று முத்துவைத் திட்டி இரண்டு அடியும் போடுகிறார்.
முத்து நான் சவாரிக்கு போயிருந்தேன் போனில் சார்ஜ் இல்லை. தூரம் சவாரி போய் வந்தேன் என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் அழுது இருப்பா.. என்று முத்துவை மீனாவை சமாதானப்படுத்த சொல்கிறார். பிறகு மீனாவும் முத்துவிடம் எதற்காக போனை ஆப் பண்ணி வச்சிருந்தீங்க?
உங்க போன் ஆப் ஆயிருந்தா கூட வேற யார் போனில் இருந்தாவது நீங்க என்கிட்ட தகவல் சொல்லி இருப்பங்க. அதற்கு முத்து, இன்னைக்கு உன்னை விட அதிகமா 8,000 சம்பாதிச்சிட்டேன் என்று சொன்னதும் மீனா அப்படி என்றால் உங்களுக்கு பிரச்சனை போன் இல்லை என் மீது தானே? நீங்களும் மத்த ஆம்பளைங்க போல தான் இருக்கீங்க.

நான் விளையாட்டா சொன்னதை நீங்க இப்படி சீரியஸா எடுத்து இருக்கீங்க என்று திட்டி விட்டு பிறகு சாப்பிட கூப்பிட நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்று சொன்னதும் மீனா சாப்பிடாமல் தூங்க சொல்கிறார். பிறகு முத்து அவரை சமாதானப்படுத்தி சாப்பாடு ஊட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications