சிறகடிக்க ஆசை: குடும்பத்தில் நடந்த பிரச்சனை, ரோகிணி பற்றிய உண்மையை சொல்லும் மீனா! அடிதடியில் இறங்கிய முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா உண்மையை மறைப்பதால் முத்துக்கு பிரச்சனை வருகிறது. இதனால் மனம் வருந்தும் மீனா ரோகிணி பற்றிய உண்மைகளை குடும்பத்திடம் சொல்ல போகிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா சொன்ன காரணத்தை பற்றி சீதா முத்துக்கு போன் செய்து சொல்கிறார். அதாவது கிரிஷை தத்து எடுத்தால் விஜயா சும்மா இருக்க மாட்டாங்க, அவங்களுக்கு கோபம் வரும் என்று சொல்லி இருக்கிறார். இதனால் முத்து இதை நம்ப மறுக்கிறார். மீனா எல்லாம் எங்க அம்மாவை பார்த்து பயப்படுற ஆளா? வேற ஏதோ காரணம் இருக்கு என்னன்னு கண்டுபிடிக்கலாம், இருந்தாலும் எனக்காக நீ பேசியதற்கு நன்றி என்று சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து சத்தியாவும் சிந்தாமணியின் மகளும் பைக்கில் ஒன்றாக வருகின்றனர். அதை பார்த்ததும் சிந்தாமணிக்கு ஜோசியர் ஏற்கனவே சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. உடனே பயந்து போய் சிந்தாமணி மகளிடம் ஏன் இப்படி கண்ட பசங்க கூட வர? கார் புக் பண்ணி வர வேண்டியதுதானே என்று கேட்கிறார். அதற்கு நம்ம கம்பெனியில் வேலை பார்க்கிறவங்க தான்
என்று அந்த பொண்ணு சொல்ல, ஆனாலும் சிந்தாமணி யாராயிருந்தாலும் அடுத்தவங்க தான் என்று அதட்டுகிறார்.
ஆனால் இது மீனாவின் தம்பி என்று தெரியாமல் தான் இருக்கிறது. அடுத்ததாக பார்வதி வீட்டிற்கு வந்த சிந்தாமணி விஜயாவுடன் சேர்ந்து கிரிஷை வெளியேற்ற திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு திட்டத்தை கேட்டதும் கடுப்பான பார்வதி விஜயாவை திட்டுகிறார். அதோடு நீ அந்த பையனை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் உன் கை கால் இழுத்துக்கும் என்று சொல்ல, விஜயா பயந்து போய் பிளானை கைவிடுகிறார்.
அடுத்ததாக அருணும் அவருடைய நண்பரும் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த டீ கடைக்கு முத்துவும் அவருடைய நண்பர் செல்வமும் வருகின்றனர். அருணை பார்த்ததும் வேற கடைக்கு போகலாம் என்று முத்து சொல்ல, ஆனால் அருணை பார்த்து பயந்து போனது போல் ஆகிடும்னு செல்வம் சொன்னதும் சரி என்று முத்துவும் அங்கேயே டீ குடிக்க போகிறார்.
அப்போதும் அருண் குழந்தை பெத்துக்க வக்கில்லை அதனாலதான் இன்னொரு குழந்தையை தத்தெடுக்க போகிறாயா? ஹாஸ்பிடல் போய் செக் பண்ணு என்றெல்லாம் அதனுடைய நண்பரை பேசுவது போல பேசிக் கொண்டிருக்க, இதனால் கடுப்பான முத்து அருணிடம் சண்டைக்கு போகிறார். அதற்கு அருணுடைய நண்பர் அவன் என்னதான சொல்லிட்டு இருக்கான் என்று சமாளிக்கிறார்.
ஆனாலும் முத்து அவன் என்னதான் சொல்லுறான் என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை அந்தப் பக்கமாக வர அருண் மற்றும் முத்து இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து சமாதானம் செய்கிறார். அப்போது அருண் ரவுடி பிள்ளையை பெத்து வச்சிருக்க என்று திட்ட, அதனால் கடுப்பான முத்து அருணை அடிக்கப் போகிறார். அப்போது அண்ணாமலை முத்துவை அறைந்து விடுகிறார்.
அடுத்ததாக வீட்டிற்கு முத்து கோபமாக வர அவரிடம் நீ அருணுடன் சண்டை போட்டா என்று அண்ணாமலை கேட்க, காரணம் மீனாதான் என்று முத்து சொல்கிறார். எல்லாரும் என்னாச்சு என்று கேட்க, கிரிஷை முதலில் பார்க்கும்போது என்னை மாதிரியே இருக்குனு அந்த பையனை தத்தெடுக்கணும்னு சொன்னது மீனாதான். ஆனால் இப்போ அவனை தத்தெடுக்க வேண்டாம் என்று சொல்லுகிறார். அதனால் தான் அதற்கான காரணத்தை கேட்க சொல்லி நான் சீதாவிடம் சொன்னேன்.
சீதா அருணிடன் சொல்லி இருக்கிறா. அவன் என்னை அசிங்கப்படுத்தி பேசுறான் என்று வருத்தப்பட்டு பேசுகிறார். இதனால் தான் உண்மையை மறைப்பதால் தான் இத்தனை பிரச்சனை என்று புரிந்து கொள்ளும் மீனா உண்மையை சொல்லப் போகிறார் அப்போது ரோகிணி சொல்லவிடாமல் தடுக்க பார்க்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications