சிறகடிக்க ஆசை: ஸ்ருதி அம்மா கோபத்தில் கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு.. உடைந்து போன முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் ஸ்ருதி வீட்டில் உள்ளவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று சொல்லி ஸ்ருதியின் அம்மா சுதா அண்ணாமலை குடும்பத்தை அவமானப்படுத்துகிறார்.
அதற்கு முத்து எதிர்த்து பேசி அவமானப்படுத்த அங்கு வரும் அண்ணாமலை யாரும் எதிர்பார்க்காத செயலை செய்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் ஸ்ருதி அவங்க அம்மாவிடம் ஃபோனில் பேசும் போது மாடியில் டெண்டு போட்டு தூங்கினோம். அதை இப்போ கழட்டிட்டு இருக்கேன். எங்களுக்கு முத்து ரூமை தராம பூட்டி வச்சுட்டாரு என்று சொல்ல இதனால் கோபமான சுதா போனை வைத்துவிட்டு வாசுதேவனிடம் இதை சொல்ல நம்மை விட்டுட்டு ஸ்ருதி போனா இப்படித்தான் கஷ்டப்படும் என்று வாசுதேவன் திட்டுகிறார்.
அதோடு அந்த வீடு அண்ணாமலையோடது கிடையாது அவனுடைய பொண்டாட்டி உடையது தான். ஃபர்ஸ்ட் கீழ போஷன் மட்டும் தான் இருந்தது என்கிட்ட கைநீட்டி காசு வாங்கி தான் மேல் போர்சனை அண்ணாமலை கட்டினான். இப்ப என் பொண்ணு அங்க வாழ்றதுக்கு ரூம் இல்லை என்று சொல்லுறான் என்று சொல்ல, அதற்கு சுதா வாங்க நம்ம அங்க போய் சண்டை போடுவோம் என்று கூப்பிட அதற்கு வாசுதேவன் நான் அவன் வீட்டுக்கு வரலை என்று சொல்லிவிடுகிறார்.

சுதா கோபமாக ஸ்ருதி வீட்டுக்கு வருகிறார். அங்கு ஸ்ருதி வாங்க மம்மி சொல்லாமல் வந்து இருக்கீங்க என்று கூப்பிட, நீ சந்தோஷமா இருக்குன்னு தானே நான் இங்கு கொண்டு விட்டேன் ஆனால் நீ இங்க சந்தோஷமா இல்ல வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட, ஏன் அம்மா இப்படி பண்றீங்க என்று தெரியாமல் கேள்வி கேட்கிறார். அதற்கு விஜயா மீனா ரோகிணி எல்லாரும் வாங்க என்று கூப்பிட என் பொண்ணு சந்தோஷமா இருக்குன்னுதானே இங்கே வந்து விட்டேன்.

ஆனால் அவளுக்கு ஒரு ரூம் கூட தராம மாடியில் தங்க வச்சு இருக்கீங்க. உங்க புருஷன் என் வீட்டுக்காரர் கிட்ட கைநீட்டி பணம் வாங்கி தான் இந்த வீட்டை கட்டுனாரு. மூன்று பிள்ளைகளை பெக்க தெரியுதுல. அதுக்கு தகுந்த மாதிரி மூணு ரூம் கட்ட தெரியலையா என்று சண்டை இடுகிறார். அப்போது முத்து வெளியில் இருந்து வீட்டிற்கு வருகிறார். அப்போது எங்க அப்பா என்ன உன் புருஷன் வீட்டுக் காசையா வாங்கினாரு?
இல்ல உங்க அப்பா வீட்டு காசை வாங்கினாரா? ரயில்வே என்ன உங்க புருஷனுக்கு சொந்தமா? எங்க அப்பா அவர் சம்பாதிச்ச காசுதான வாங்கினாரு. நீங்கள் தான் பெரிய வீடா வச்சிருக்கீங்க, பத்து ரூம் இருக்கும் இல்ல ஏன் ஒத்த புள்ள பெத்து போட்டீங்க என்று சுதாவிடம் சண்டை போட உடனே சுதா இந்த ரவுடி இருக்கிற வீட்ல நீ எப்படி சந்தோசமா இருக்க முடியும் வா என்று கூப்பிடுகிறார். அதற்கு முத்து, ரவி நீயும் வெளியே போடா என்று சத்தம் போடுகிறார்.
அப்போது அண்ணாமலை வீட்டிற்கு வந்து சுதாவிடம் வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று கூப்பிடுகிறார். பிறகு சுதா என் பொண்ணுக்கு ரூம் இல்லாமல் மாடில தூங்கி இருக்கா என்று சொல்ல அதற்கு அண்ணாமலை நாங்க தான் ரூம் குடுத்துட்டோமே என்று சொல்ல, அதற்கு ஒரு பிரச்சனை வந்தது உண்மைதான். அதற்க்கு ஸ்ருதி மாமா எங்களுக்கு ரூம் கொடுக்கட்டாரு.

டெண்டு வாங்கியாச்சுன்னு சும்மா போய் படுத்து இருந்தால் அதை சொல்லி முடிக்கிறதுக்குள்ள நீ போன் கட் பண்ணிட்ட அம்மா என்று சொல்ல, அதற்கு முத்து சுதாவிடம் இப்போ உண்மை என்னன்னு தெரிஞ்சிடுச்சா இப்ப பேசுங்க என்று கத்துகிறார். பிறகு அண்ணாமலை என்னதான் இருந்தாலும் வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படி நீ கோபப்பட்டு பேசுவது தப்பு, அவங்க கிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல, ஆனால் முத்து நான் எந்த தப்பும் பண்ணல நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.
பிறகு சுதா அமைதியாக விடுகிறார். அதை தொடர்ந்து முத்து கார் செட்டுக்கு போய் செல்வத்துடன் நடந்துவற்றை சொல்லிக்கொண்டு இருவரும் சேர்ந்து குடிப்பதற்காக பாருக்கு போயிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications