சிறகடிக்க ஆசை: வார்த்தையை விட்ட ரோகிணி.. பாயிண்டை பிடித்த மீனா.. விஜயா சொன்ன உருப்படியான முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் வீடு வாங்குவதற்காக லோன் கேட்கிறார். அந்தப் பணம் போதாததால் தங்களுடைய பூர்வீக வீட்டை விற்று அதில் தனக்கு பங்கு கேட்கிறார். இதனால் வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து கடையில் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன் என்று கிளம்பி போகிறார். அந்த நேரம் மனோஜ் வீட்டிற்கு இரண்டு பேர் வருகிறார்கள். அவர்கள் டாக்குமெண்ட் எல்லாம் பார்த்துவிட்டு இந்த வீட்டுடைய ப்ராப்பர்ட்டியையும், கடையோட ப்ராபர்ட்டியையும் சேர்த்து உங்களுக்கு ரெண்டு கொடி பணம்தான் கொடுக்க முடியும் என்று சொல்லி விடுகிறார்கள்.

television siragadikka aasai serial vijay tv

ஆனால் எனக்கு இன்னும் 70 லட்சம் பணம் வேண்டுமே என்று மனோஜ் கேட்க, அதற்கு முடியாது என்று சொல்லி விடுகிறார்கள். அண்ணாமலையும் கேட்டு பார்க்கிறார் அதற்கும் முடியாது என்று லோன் ஆபிஸர்ஸ் போய் விடுகிறார்கள். அடுத்ததாக மனோஜ் அண்ணாமலையிடம் எனக்கு நீங்க தான் அப்பா ஒரு முடிவு பண்ணனும் என்று கேட்கிறார்.

நான் என்ன பண்ண முடியும் என்று அண்ணாமலை கேட்க, நம்ம சொத்த வித்து எங்களோட பங்க கொடுங்க என்று கேட்கிறார். அதற்கு புரியாத அண்ணாமலை என்னது சொத்தா ... என்று கேட்க, அதான் நம்ம வீடு இருக்கில்லப்பா அதை வித்து என்னுடைய ஷேர் மட்டும் கொடுங்க என்று கேட்டதும் முத்துவும், ரவியும் கோபப்படுகிறார்கள் வீடு வித்துட்டா அம்மா அப்பா எங்க போவாங்க நாங்க எங்க போவோம் என்று கேட்க, வித்தா உங்களுக்கும் ஷேர் கிடைக்கும்.

ரவிக்கும் ரெஸ்டாரண்ட் வசிப்பான் முத்து ட்ராவல்ஸ் வச்சிப்பான் என்று சொல்ல, ரொம்ப தாண்டா எங்க மேல உனக்கு அக்கறை என்று ரவி திட்டுகிறார். ஒரு கட்டத்தில் அண்ணாமலை என்னால் வீடு விற்க முடியாது. அதுவும் இல்லாம அது அவங்க அப்பா விஜயாவுக்காக வாங்கி கொடுத்தது. இதுல முடிவெடுக்க வேண்டியது நான் கிடையாது விஜயா தான்.

television siragadikka aasai serial vijay tv

உனக்கு எப்போதும் சப்போர்ட் பண்ணுற விஜயா இப்போ அமைதியா இருக்கா பாரு என்று சொல்கிறார். அப்போது முத்து மற்றும் மனோஜ் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. உடனே முத்து உங்க மாமனார் வீட்டில் வாங்க வேண்டியதுதானே என்று சொன்னதும் ரோகிணி அதிர்ச்சியாகி இருக்கிறார்.

அப்போது விஜயாவும் உங்க மாமாவுக்கு போன் போட்டு கேளுமா என்று ரோகிணியிடம் செல்கிறார். இதனால் தயங்கிய ரோகிணி பிறகு வித்யாவுக்கு போன் போட்டு சிங்கப்பூர் மாமாவிடம் பேசுவது போல நடிக்கிறார். அடுத்ததாக அக்கவுண்ட்ல பணம் எல்லாம் லாக்ல இருக்குன்னு சொல்றாங்க, எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு என்று ரோகிணி சொல்கிறார்.

அதற்கு மனோஜ் அதான் இப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்களே இப்ப நீ தான்பா பொறுப்பு என்று அண்ணாமலை இடம் கேட்கிறார். அதற்கு அண்ணாமலை இந்த விஷயத்தில் நான் முடிவெடுக்க மாட்டேன் விஜயா தான் பார்த்துக்கணும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

television siragadikka aasai serial vijay tv

பிறகு மனோஜ் விஜயாவிடம் வந்து கேட்க வீடு எல்லாம் விற்க்க முடியாது என்பதில் விஜயாவும் உறுதியாக இருக்கிறார். அதோடு நீங்க வீடு வாங்குவதற்கு நீங்க ஏதாவது ரெடி பண்ணிக்கோங்க என்னால முடியாது என்று விஜயா சொல்கிறார். அடுத்ததாக மீனா முத்துவிடம், ரோகிணி அவங்க மாமா கிட்ட பேசினா மாதிரி இல்ல.. எனக்கு டவுட்டா இருக்குது.

அவங்க முகமே ரொம்ப பதட்டமாக இருந்தது. அவங்களே கேள்வி கேட்டு அவங்களே பதில் சொல்ற மாதிரி இருந்தது என்று சொல்ல, அதற்கு முத்து, இந்த பார்லர் அம்மா ஏதோ நாடகம் போடிட்டு இருக்கு என்று சொல்கிறார். அடுத்ததாக ரவியும் ஸ்ருதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது ஸ்ருதி மனோஜ் ரொம்பவும் சுயநலக்காரராக இருக்கிறார். உன் கூட பிறந்ததில் முத்து அப்படி கிடையாது அவர் எதுவாக இருந்தாலும் தானே கஷ்டப்பட்டு முன்னேறனும் என்று நினைக்கிறாரு. நீயும் அப்படித்தான் நினைக்கிற.. ஆனால் மனோஜ் வித்தியாசமாக இருக்கிறார் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+