சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றிய உண்மையை கண்டுபிடித்த விஜயா.. சபதம் எடுத்த மனோஜ்.. ரவி கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 21ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி மலேசியா மாமாவிடம் பேசாமல் வித்யாவிடம் தான் பேசினார் என்ற உண்மை விஜயாவிற்கு தெரிய வருகிறது. ஆனால் எதிர்பார்க்காத இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜும் ரோகிணியும் ஸ்ருதி ரவியிடம் பண உதவி கேட்கிறார்கள். அதற்கு ரவி எங்களிடம் இப்போ 70 லட்சம் எடுக்க முடியாது என்று சொல்கிறார். அதற்கு ரோகிணியும் மனோஜும் ஸ்ருதியின் அப்பாவிடம் பணம் கேட்டு வாங்கி தருமாறு சொல்கிறார்கள்.

siragadikka aasai serial vijay tv

அதோடு நாங்கள் கடனாதான் கேட்கிறோம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் ரவி என்னால் அப்படி கடன் கேட்க முடியாது. எனக்காகவே நான் கேட்க மாட்டேன் உனக்காகவா நான் கேட்கணும்? நீ எனக்காக இதுவரைக்கும் ஒரு சட்டை கூட வாங்கி தந்தது கிடையாது. முத்துவாவது எனக்குன்னு ஏதாவது செஞ்சு இருக்கிறான்.

ஆனால் நீ எனக்கு நீ எதுவுமே செய்தது கிடையாது என்று கேள்வி கேட்க அதற்கு மனோஜ் நான் வீடு வாங்க வேண்டும் எப்படியாவது பணம் வாங்கி தா என்று கேட்கிறார். அதற்கு ஸ்ருதி நான் எங்க அப்பாவிடம் எந்த பணமும் கேட்க மாட்டேன் என்று சொல்கிறார்.

அதுபோல ரவியும் பணத்துக்காக என்னை இவங்க அப்பா அம்மாட்ட அடமானம் வைக்க சொல்லுறியா? என்று பணம் வாங்க மறுத்து விடுகிறார்கள். இதனால் மனோஜும் ரோகிணியும் வீட்டிற்குள் வந்து நம்ம வீடு வாங்குவது இவங்களுக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது இந்த வீட்டை வாங்கிட வேண்டும். இவங்க எல்லாரும் நம்ம மீது பொறாமையில் இருக்கிறாங்க. அவங்க முன்னாடி நம்ம நல்லா வாழ்ந்து காட்டணும் என்று சபதம் எடுக்கிறார்..

அடுத்ததாக ரோகிணி தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது மலேசியா மாமாவிடம் நீ பேசுவதாக சொல்லிவிட்டு நீ வித்யாவிடம் தான் பேசுனியா? இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சுடுச்சு என்று தூங்கிக் கொண்டிருந்த ரோகிணியை எழுப்பி விஜயா நீ ஏமாற்றுவியா என்று திட்டி தீர்த்து ரோகிணியை தர தர என இழுத்து அங்கிருக்கும் ஸ்விம்மிங் பூலில் தள்ளி விடுவது போல கனவு கண்டு அலறுகிறார்.

siragadikka aasai serial vijay tv

ரோகிணி கத்துவதை பார்த்து மனோஜும் பயந்து விடுகிறார். பிறகு கனவு என்று ரோகிணி சமாளித்து விடுகிறார். மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா எனக்கு இப்படி ஒரு வீட்டில் வாழ வேண்டும் என்று ஆசை கிடையாது. ஆனால் கிராமத்தில் தின்னை வீட்டில் எல்லோரும் குடும்பமாக ஒன்றாய் இருக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை சொல்கிறார்.

அதற்கு முத்து நாம வயசான காலத்தில் பாட்டி ஊருக்கு போகிற வேண்டும். அங்கதான் நீ நினைச்ச மாதிரி வாழலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுபோல ஸ்ருதியும் ரவியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஸ்ருதி எனக்கு அப்பார்ட்மெண்ட் வீட்டில் வாழணும் நான் எப்பவுமே இதுபோல பங்களாவில் வளர்ந்து தனியா வளர்ந்ததால் எனக்கு இந்த வீட்டில் இருக்கிற ஆசை கிடையாது.

நிறைய பிரண்ட்ஸோட இருக்கணும், நிறைய செலபரேட் பண்ணனும் என்று தன்னுடைய ஆசை சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக முத்துக்கு ஜீவா போன் பண்ணி நான் நாளைக்கு இந்தியா வரேன் என்று சொல்கிறார். உடனே முத்து நான் ஏர்போர்ட்ல வந்து பிக்கப் பண்ணிறேன் என்று சொல்கிறார்.

அதோடு நான் போன முறை வந்த போது ரிஜிஸ்ட்ரேஷன் விஷயமாக வந்தேன் ஆனால் என்னிடம் 30 லட்சம் ரூபாயை ரெண்டு பிராடுகள் கட்டாயப்படுத்தி வாங்கிட்டாங்க என்று ஜீவா சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+