முத்து, மீனாவை துரத்த பிளான் போடும் விஜயா.. அண்ணாமலை எடுத்த முடிவு.. இப்பவாவது இதை சொன்னாரே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் விஜயா ரோகினியும், ஸ்ருதியும் தன்னோடு இருக்க வேண்டும் என்றால் முத்துவும் மீனாவும் இந்த வீட்டை விட்டு வெளியேற்றி விட வேண்டும் என்று பிளான் போடுகிறார்.
அதே நேரத்தில் முத்து வீட்டிற்குள் மீனாவை எல்லோரும் வேலை வாங்குவதை பார்த்து கோபத்தில் திட்டி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பார்வதி வீட்டுக்கு போன விஜயா அவரிடம் ஸ்ருதி அம்மா 50 பவுன் நகை எடுத்துட்டு வந்து கொடுத்தாலும் அதுல மீனா ஏழரை கூட்டிட்டா என்று நடந்த விஷயத்தை பேசிக் கொண்டிருக்கிறார். ஸ்ருதி அம்மாகிட்ட மீனா ஒன்னும் இல்லாம தான் இந்த வீட்டுக்கு வந்தான்னு சொன்னேன். அதுக்காக அவ அழுது புலம்பி ஒரு டிராமா போட்டு நகையெல்லாம் கழட்டி கொடுத்துட்டா.

அதற்கு அந்த முத்துவும் நான் உயிரோட இருக்குற வரைக்கும் இந்த வீட்டில சந்தோஷமாக இருக்க முடியாது என்று சொல்லிட்டான். இவங்க நடந்து கொள்வதை பார்த்தால் ஸ்ருதி வீட்டை விட்டு கிளம்பிடுவான்னு பயமா இருக்கு. அதனால நான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு பார்வதி என்ன முடிவு என்று கேட்க, அந்த மீனாவையும் முத்துவையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம்னு இருக்கேன். அதற்கான வேலையை இன்னிலிருந்து நான் தொடங்கப் போறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
மறுநாள் காலையில் மீனா சமைத்துக் கொண்டு இருக்க கிச்சனுக்கு விஜயா, ஸ்ருதி வீட்டில் கரண்ட் இல்ல, அதனால ஸ்ருதி குளிக்க தண்ணி வேண்டும் சுடுதண்ணி போட்டு கொடு என்று கூறுகிறார். அதற்கு மீனா சுடுதண்ணி வச்சு கொடுக்க, அதை ரூமில் வைத்து விடு என்று வேலை வாங்குகிறார்.

அடுத்ததாக மனோஜ்க்கு சுடுதண்ணி வேண்டும் ரோகிணிக்கு சுடு தண்ணி வேணும் என்று அடுக்கிக்கொண்டே போக முத்து இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் கோபமான முத்து இந்த வீட்டில மீனா வேற யாருக்கும் வேலை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அப்பாவுக்கு மட்டும்தான் மீனா வேலை செய்வால் என்று திட்ட,

அதனால் கோபமான மனோஜ் எனக்கு பச்ச தண்ணியே போதும் எனக்காக யாரும் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு எக்சர்சைஸ் செய்யப் போகிறார். அந்த நேரத்தில் முத்து யாருக்கும் தெரியாமல் சுடு தண்ணியை எடுத்துட்டு போய் அங்கிருக்கும் பாத்ரூமில் இருந்த பக்கெட்டில் ஊற்றி வைத்துவிடுகிறார்.
அது தெரியாம எக்சர்சைஸ் செய்து விட்டு வந்த மனோஜ் அந்த தண்ணியை எடுத்து தன் மீது ஊத்த மேல் எல்லாம் பொத்து விடுகிறது. இதனால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அதற்கு விஜயா ரோகினி இருவரும் மீனாவிடம் வாக்குவாதம் செய்கின்றனர். அதற்கு ரவி இனி சும்மா சும்மா மீனாவை வேலை வாங்கிட்டு இருந்தா இப்படித்தான் செய்வேன் என்று வார்னிங் கொடுக்கிறார்.
அதனால் கோபமான கோபமாக இருக்கும் விஜயா அண்ணாமலை வீட்டுக்கு வந்ததும் நடந்த விஷயத்தை சொல்ல, அதற்கு முத்து இந்த வீட்ல மீனா மட்டும்தான் மருமகளா இருக்காளா? எல்லாரும் மாத்தி மாத்தி அவளை வேலை வாங்கிட்டே இருக்காங்க என்று விளக்கம் கொடுத்துவிட்டு போய்விடுகிறார். பிறகு விஜயா இந்த முத்து மற்றும் மீனாவால் வீட்டில் பிரச்சனைதான், வீடு குப்பை மேடை ஆயிடுச்சு.

அதனால நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை என்னவென்று கேட்க நானும் மூன்று மருமகளுடன் சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா அது நடக்காது போல. அதனால முத்துவையும், மீனாவையும் தனி குடித்தனம் வச்சிடலாம், அவங்க அப்போ அப்போ இங்க வந்துட்டு போகட்டும் என்று சொல்ல அண்ணாமலை அதிர்ச்சியாகி இருக்கிறார்.

ஆனாலும் இதை வெளியே காட்டிக்காமல் நீ உன்னோட முடிவை சொல்லிட்டா, நான் என்னோட முடிவு கொஞ்ச நாட்கள் கழித்து சொல்றேன் என்று சொல்ல, இதற்கு விஜயா நீங்க கோபப்படுவீங்க என்று நினைத்தேன். ஆனா இப்படி இருக்கிறது எனக்கு சந்தோசம் தான். யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications