சிறகடிக்க ஆசை: மனோஜ் வீட்டின் சொந்தக்காரர் வந்தாச்சு! முத்துக்கு தெரிந்த உண்மை! அண்ணாமலை கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் புதியதாக வாங்கிய வீட்டின் சொந்தக்காரர் வந்து இது என்னுடைய வீடு என்று அதிர்ச்சி கொடுக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து ஜீவாவை பிக்கப் செய்து கொண்டு காரில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னும் எவ்வளவு நாட்கள் இங்கே இருப்பீங்கன்னு முத்து கேட்க, இரண்டு வாரம் இருப்பேன் என்று ஜீவா சொல்கிறார். போன முறையே ரிஜிஸ்ட்ரேஷனுக்காக தான் வந்தேன்.

ஆனா ரெண்டு திருட்டு பசங்களால பண்ண முடியாம போயிடுச்சு என்று சொல்லிவிட்டு பிளாட்டில் முத்துவை வெயிட் பண்ண சொல்லி ரெடி ஆகிட்டு வந்துடுறேன் என்று ஜீவா கிளம்புகிறார். மறுபக்கத்தில் விஜயா மற்றும் அண்ணாமலை இருவரும் வெளியே வாக்கிங் போய்க் கொண்டிருக்கின்றனர். அப்போது அண்ணாமலை அந்த வீட்ல இருக்கும்போது நான் வாக்கிங் கூப்பிட்டா நீ வரவே மாட்ட இப்ப மட்டும் வந்திருக்க என்று கேட்கிறார்.
அதற்கு விஜயா அந்த வீட்டில் வண்டிங்க போயிட்டு இருக்கும், ஒரே புகை ஸ்மெல்லா இருக்கும். அதெல்லாம் எனக்கு செட்டாகாது. ஆனா இங்க எவ்வளவு அமைதியா இருக்கு பாத்தீங்களா? என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்து ஓடுகிறார். எப்ப பார்த்தாலும் மனோஜை மட்டும் தான் நீ தூக்கி வச்சு பேசுவியா என்று அண்ணாமலை திட்டுகிறார்.

அதற்கு அவன் பணக்காரன் ஆகிவிட்டான். அவன் என்ன எல்லாம் பண்ணுறான் பாத்திங்களா.. நீங்க இந்த மாதிரி இருந்திருந்தால் நான் இந்த இடத்தில் 4 வீடு வாங்கி இருக்கலாம் என்று விஜயா சொல்ல, அப்படி இருந்தா உன்னை சமாளிச்சு இருக்கவே முடியாது என்று அண்ணாமலை சொல்கிறார். அதோடு அண்ணாமலை அட்வைஸ் செய்து கொண்டே இருப்பதால் விஜயா உங்க கூட வருவதற்கு நான் முன்னாடியே போயிடுவேன் என்று விஜயா கிளம்பி போகிறார்.
பிறகு அண்ணாமலை அங்கிருக்கும் இளநீர் கடையில் இளநீர் வாங்கி குடிக்கிறார். அப்போது இளநீர் கடைக்காரர் நீங்க இங்க புதுசா இருக்கீங்களே வீடு எதுவும் வாங்கி இருக்கீங்களா என்று கேட்கிறார். அதற்கு அண்ணாமலை ஆமா என் பையன் அந்த முனையில் இருக்கிற வீட்டை வாங்கி இருக்கிறான் என்று சொல்ல, அந்த இளநீர் கடைக்காரர் அந்த வீடா.. என்று யோசிக்கிறார்.

பிறகு அண்ணாமலை போனதும் இளநீர் கடைக்காரர் ஒருவருக்கு போன் பண்ணி பேசுகிறார். மறுபக்கத்தில் ஜீவாவை கூட்டிக்கொண்டு முத்து ரெஜிஸ்டர் ஆபீசுக்கு வருகிறார். முத்து வரும் நேரத்தில் ரோகிணியும் மனோஜும் அவருடைய நண்பரோடு ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வருகின்றனர். முத்து வெளியில் இருப்பதை பார்த்து மனோஜ் நண்பர் முத்துவையும் உள்ளே கூப்பிட அதற்கு மனோஜ் அவனை எதுக்கு கூப்பிட்டிங்க என்று கேட்கிறார்.
பிறகு முத்து வந்தவுடன் இங்கு என்னடா பண்ணுற என்று மனோஜிடம் கேட்க, அதற்கு எவ்வளவு பணம் ரிஜிஸ்டர் ஆபீசுக்கு ஆகும் என்று கேட்க வந்தேன். நீ அப்பாகிட்ட சொல்லி வீடு விக்க முடியாதுன்னு சொல்லிட்ட.. இன்னும் மூணு மாசத்துல நான் இந்த வீட்டை வாங்கி ரிஜிஸ்டர் பண்ணுறதுக்கு வருவேன் என்று சவால் விடுகிறார்.
அதற்கு முத்து நான் மறந்துவிடுவேன் நீ எனக்கு whatsapp அனுப்பு அதை எடுத்து பாத்துக்குறேன் என்று நக்கல் செய்கிறார். பிறகு ஜீவா மனோஜ் மற்றும் ரோகிணியை பார்த்து கடுப்பாகி ரெஜிஸ்டர் ஆபீஸ்ல இருந்து வெளியே வருகிறார். வெளியே வந்ததும் முத்துவை கார் எடுக்க சொல்லி யாரை பார்க்கக்கூடாது நினைச்சேனோ அவங்களை பாத்துட்டேன்.
இதுக்கு மேல எங்கேயும் போக வேணாம் வீட்டுக்கு போங்க, அப்செட்டா இருக்கு.. என்று சொல்லி வீட்டிற்கு வருகிறார். பிறகு வீட்டிற்கு வந்ததும் அங்கிருக்கும் ஒரு பெட்டியை எடுத்து முத்துவிற்கு கூலிங் கிளாஸ்சும் மீனாவிற்கு சென்ட் பாட்டில் எடுத்து கொடுக்கிறார். அப்போது முத்து என்னுடைய மனைவி நீங்க அவளுக்காக கொடுத்தீங்கன்னு சொன்னா நம்ப மாட்டா.. நீங்க எனக்கு கொடுக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்று போட்டோ எடுத்துக் கொள்கிறார்.

அடுத்ததாக மனோஜ் வீட்டிற்கு ஒரு நபர் காரில் வந்து இறங்குகிறார். அப்போது அவரை பார்த்ததும் மனோஜ் ரோகிணியும் நீங்க எங்க வீட்டிற்கு நேம் போட்டு கொண்டு வந்திருக்கீங்களா என்று கேட்க, யார் வீட்டுக்கு யார் நேம் போர்டு வைக்கிறது. இது என்னுடைய வீடு என்று அந்த நபர் சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகிறார்கள்.
அதற்கு மனோஜ் நீங்க என்ன பேசுறீங்க இந்த வீடு நாங்க விலைக்கு வாங்கிட்டோம் என்று சொன்னதும் யார்கிட்ட வாங்கினீங்க என்று கேட்க, அதற்கு மனோஜ் வீடு வாங்கிய நபரின் பெயரை சொன்னதும் அந்த நபர் என்னுடைய வீட்டில் வாடகைக்கு தான் இருந்தான். அவன் உங்ககிட்ட ஏமாற்றி விட்டான் என்று சொல்ல, மனோஜ் நான் போன் பண்ணி பார்க்கிறேன் என்று அந்த நபருக்கு போன் பண்ணி பார்க்கும் போது போன் சுவிட்ச் ஆஃப்இல் இருக்கிறது. இதனால் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications