சிறகடிக்க ஆசை: வீடு விஷயத்தில் ஏமாந்த மனோஜ்.. விபரீத முடிவு எடுத்த ரோகிணி! முத்து கண்டுபிடித்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 24 ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் வீடு வாங்குகிறேன் என்று ஏமாந்து போன விஷயம் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வருகிறது. அதனால் ரோகிணி மற்றும் மனோஜ் அழுது ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

புது வீடு வாங்க போறேன் என்று ஒவராக சீன் போட்டு கொண்டிருந்த மனோஜ்க்கும் ரோகிணிக்கும் இன்று பெரிய ஏமாற்றம் கிடைத்திருக்கிறது. இன்று மனோஜ் வாங்கிய வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு வந்து மனோஜ் மற்றும் அவருடைய குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி மிரட்டுகிறார். ஆனால் இதை நம்பாமல் தான் பணம் கொடுத்து நபருக்கு போன் செய்து பார்க்க அந்த நபருடைய போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது.

television siragadikka aasai serial vijay tv

அப்போது மீண்டும் வீட்டு ஓனர் அந்த துபாய்காரன் இந்த வீட்டில் வாடகைக்கு தான் இருந்தான். ஆனா அவன் பெரிய பிராடு, பல வீட்டில் வாடகைக்கு இருந்துட்டு அந்த வீடு என்னுடைய வீடுன்னு இன்னொருதங்க கிட்ட ஏமாற்றி பணம் வாங்கிட்டு தப்பி ஓடிரு தான். இது இப்பதான் எனக்கே தெரிய வந்திருக்கிறது.

நான் இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்பு போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு தான் வந்திருக்கிறேன். நீங்க இந்த வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்ல, அதற்கு முத்து அந்த ஏமாற்றுக்காரனிடம் எங்க அண்ணன் பணம் கொடுத்து ஏமாந்துட்டான் கொஞ்சம் டைம் தாங்க சார் நாங்க கிளம்புறோம் என்று சொல்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது ரோகிணி நாம ஏமாந்துட்டோமா மனோஜ் என்று ரகசியமாக கேட்கிறார். அதற்கு மனோஜ் ஆமாம் என்று சொன்னதும் ரோகிணி மயக்கம் போட்டு விழுந்தது போல நடிக்கிறார். உடனே எல்லோரும் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி பார்க்கின்றனர். அதற்கு பிறகு மனோஜ் கட்டிப்பிடித்து நாம ஏமாந்துட்டோமா மனோஜ்... நம்மளோட பணம் போயிடுச்சா என்று ரோகிணி அழுது கொண்டிருக்கிறார்.

பிறகு எல்லாரும் அவரை சமாதானம் செய்கிறார்கள். அப்போது வீட்டுஉரிமையாளர் மீண்டும் வீட்டை காலி பண்ணுங்கன்னு சொல்ல, மனோஜ் நாங்க ஏமாந்து இருக்கிறோம். 30 லட்சம் கொடுத்து இருக்கிறோம் அது எப்படி வீட்டை காலி பண்ணி போறது என்று கேட்க, இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்துருவாங்க அவங்களே காலி பண்ண வைப்பாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது போலீஸ் வந்து மொத்த குடும்பத்தையும் வீட்டை விட்டு போக சொல்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அந்த நேரத்தில் மனோஜ் வீட்டுக்கு வைத்த பெயரின் போர்டு வருகிறது. அடுத்த கட்டத்தில் எல்லோரும் வீட்டில் இருக்கின்றனர். அப்போது மனோஜிடம் அண்ணாமலை இப்படி ஏமாளியா இருப்பியா? என்று அடிக்கப் போகிறார். அதற்கு முத்து நான் தான் அப்பவே சொன்னேனே.. அவன் வாடகை காரில் போறான் சந்தேகமா இருக்குன்னு சொன்னேன்.

அதுபோல அட்வான்ஸ் பணத்த கொடுக்க போகும்போது கோயிலில் அபசகுனமாய் இருக்குன்னு மீனா சொல்லி இருக்கா அதையும் கேட்டு இருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது என்று முத்து சொல்லிக் கொண்டிருக்க, ரோகிணி நாங்கள் ஏமாந்துட்டோம் என்று நீங்கள் சந்தோஷப்படுறீங்களா? என்று கேட்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு முத்து நீங்க உங்க மலேசியா மாமாவுக்கு நடந்த விஷயத்தை சொல்லி அந்த 30 லட்சத்தை வாங்குங்க என்று சொல்ல, அதற்கு விஜயாவும் அது சரி என்று தலையாட்டுகிறார் அதற்கு ரோகிணி எங்க அப்பாவுக்கு இன்னும் ஜட்ஜ்மெண்ட் கொடுக்கல அப்பா ஜெயிலில் தான் இருக்கிறார் என்று சமாளிக்கிறார்.

கடைசியாக மனோஜை ஏமாற்றிய நபரை பற்றி விசாரிக்குமாறு அண்ணாமலை முத்துவிடம் சொல்கிறார். முத்து மீனாவிடம் முதலில் மனோஜின் நண்பனை தான் விசாரிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+