மீனாவுக்கு செஞ்ச துரோகத்திற்கு விஜயாவுக்கு விழுந்த அடி.. ஸ்ருதியால் மனோஜ்க்கு ஆப்பு.. செம அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 26 ஆம் தேதிக்கான எபிசோடு வந்திருக்கிறது.
அதில் மீனாவுக்கு வேலை மேல் வேலை சொல்லிக் கொண்டு இருந்த விஜயாவுக்கு கடைசியில் அதிர்ச்சி கிடைக்கிறது.
அதைத் தொடர்ந்து மனோஜின் டிராமா ஸ்ருதியால் இனி முடிவுக்கு வர இருக்கிறது, என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் மீனா கையில் கத்தியோடு நிற்க, அதை பார்த்து விஜயா ஒரு நிமிடம் பயந்து போய் பிறகு ஆப்பிள் கொஞ்சம் கட் பண்ணி கொண்டு வந்து கொடும்மா என்று பொறுமையாக சொல்லி இருக்கிறார். பிறகு ஸ்ருதி எனக்கு இட்லி வேண்டாம் ஒரு ஆம்லெட் வேண்டும் என்று கேட்கிறார்.
அதற்கு உன் கையால ஒரு ஸ்பெஷல் ஆம்லெட் என்று கேட்க அப்போது ரோகிணிக்கும் சேர்த்து ரெண்டு முட்டையா போடு என்று விஜயா சொல்ல இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த முத்து உங்களுக்கு ஆம்லெட் தானே வேணும் நான் போட்டு தரேன் என்று எல்லோரும் முன்பு ஃப்ரிட்ஜில் இருந்த முட்டையை எடுத்து கீழே போட்டு உடைத்து இது என்ன ஹோட்டலா ஆளாளுக்கு ஆர்டர் கொடுத்துட்டு இருக்கீங்க உங்களுக்கு வேணும்னா நீங்க செஞ்சு சாப்பிடுங்க, இல்லனா செஞ்சு கொடுங்க என்று திட்டுகிறார்.

அதனால் ஸ்ருதி மற்றும் ரோகினி எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று கோபத்தில் கிளம்பி போய் விடுகின்றனர். பிறகு விஜயா மீனாவை அதையெல்லாம் துடைத்து கிளீன் பண்ணு என்று அதட்டுகிறார். அடுத்ததாக வீட்டில் உள்ளவர்கள் எல்லோருக்கும் என்னவெல்லாம் சமைக்க வேண்டும் என்று பெரிய லிஸ்ட் ஒன்றை போட்டு அதற்கு தேவையான எல்லா ஜாமான்களையும் மார்க்கெட்டில் போய் வாங்கிட்டு வா என்று மிரட்டி அனுப்புகிறார்.

மீனா மார்க்கெட்டுக்கு கிளம்பி போக அங்கு தன்னுடைய அம்மாவை பார்த்து பேசுகிறார். இருவரு வீட்டிற்கு போய் பேசிக் கொண்டிருக்கும் போது மீனாவின் அம்மா கழுத்தில் இருந்த செயின் எங்கே என்று கேட்க நடந்த விஷயங்களை எல்லாம் சொல்கிறார். அதற்கு பிறகு மீனா அங்கிருந்து கிளம்பி சூப்பர் மார்க்கெட்டுக்கு வாங்கிட்டு வீட்டிற்கு வர அதற்கு விஜயா இவ்வளவு நேரமா எங்க போய் சுத்திட்டு வர என்று கேள்வி கேட்டு திட்டுகிறார்.

பிறகு எல்லாருக்கும் ஒவ்வொன்னா சமைக்கணும் என்று லிஸ்ட் சொல்ல அதை எல்லாம் மீனாவும் செய்து முடிக்க அங்கிருக்கும் அழுக்கு துணிகளை எடுத்து மீனாவின் முகத்தில் வீசி இதையும் துவைத்து வை என்று கொடுமை படுத்துகிறார். அடுத்ததாக ரவி ஸ்ருதியை அவருடைய ஆபீசுக்கு கொண்டு வந்து விட அப்போது இருவரும் ஒரு கார் வாங்கிடலாம் என்று முடிவெடுக்கின்றனர். அதோடு நாளைக்கு மனோஜ் வேலை செய்யும் ஷோரூமுக்கு போய் கார் புக் பண்ணிடலாம் என்று சொல்கின்றனர் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications