Siragadikka Aasai: மனோஜால் விஜயாவுக்கு வந்த பிரச்சனை! சிக்கும் ரோகிணி, முத்து எடுக்கும் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025, டிசம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் செய்த செயலால் விஜயா குடும்பத்திற்கு பெரிய பிரச்சனை வந்திருக்கிறது. இனி இந்த பிரச்சனைகளில் இருந்து முத்து குடும்பத்தை எப்படி காப்பாற்ற போகிறார் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து மீனாவிடம் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். அப்போது முத்தத்தை பற்றி அவர் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்க அதை ரவியும், ஸ்ருதியும் ஒளிந்து நின்று கேட்டு முத்துவை பாராட்டுகின்றனர். அப்போது முத்து நான் முத்தத்தை பற்றி இவ்வளவு பேசுவதற்கு காரணம் இன்னைக்கு என் காரில் வந்த ஒரு தாத்தா தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போது ரவி ஸ்ருதி இருவருக்கும் இடையில் சின்னதானாக காதல் வாக்குவாதங்கள் ஏற்படுகிறது. பிறகு அவர்கள் அங்கு இருந்து சென்று விடுகின்றனர். பிறகு முத்துவும் மீனாவும் ரொமான்ஸ் செய்கின்றனர். மறுநாள் காலையில் மனோஜ் ரோகிணி மற்றும் அவருடைய நண்பன் எல்லோரும் சேர்ந்து புது வீட்டிற்கு தேவையான பொருள்களுக்கு ஆர்டர் கொடுத்த பில்டரை பார்க்க போகின்றனர்.
அங்கு அந்த பெண்ணுக்கு திடீர் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு அவர் கோமாவில் இருப்பதாக அங்கிருந்தவர் சொல்ல அதைக் கேட்டு மனோஜ் மற்றும் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர். நிர்வாகத்தை எல்லாம் அங்கு இருக்கும் மேனேஜர் தான் கவனித்துக் கொள்கிறார் என்று சொல்கின்றனர். அந்த மேனேஜர் ஏற்கனவே மனோஜ் அசிங்கப்படுத்தி பேசியதால், அவர் மனோஜின் ஆர்டரை கேன்சல் பண்ணிவிட்டு வேற ஒருவருக்கு மாற்றிவிட்டார்.
இதனால் மனோஜ்க்கு முப்பது லட்சம் கடன் வருகிறது. இனி என்ன செய்யலாம் என்று மனோஜும் ரோகிணியும் அதிர்ச்சியுடன் யோசித்து கொண்டு இருக்கின்றனர். மறுபக்கத்தில் முத்து அண்ணாமலை விஜயா எல்லோரும் வீட்டில் இருக்கும்போது அங்கு ஒருவர் தன்னுடைய ஆட்களுடன் வருகிறார். அவர் மனோஜ் எங்கே என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து என்னாச்சு எதற்காக கேட்கிறீர்கள் என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போது மனோஜ் அங்கு வருகிறார்.
மனோஜ் அந்த ஆளை பார்த்ததும் சார் என்ன வீட்டுக்கே வந்துட்டீங்க என்று பயந்தபடியே கேட்க, அதற்கு அவர் நீங்க 30 லட்சம் நஷ்டமாக இருப்பீங்க என்பதற்கு நான் விட்டுட்டு போக முடியாது, எனக்கு பணம் வேணும் என்று மிரட்டுகிறார். அப்போதுதான் மனோஜ் தன்னுடைய ஆஃபீஸை டெவலப் பண்ணுவதற்காக 30 லட்சம் கடன் வாங்கி வைத்திருக்கிறேன் என்று எல்லோரிடமும் சொல்கிறார். அதை கேட்டு மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
சிறகடிக்க ஆசை: ரோகிணி விஷயத்தில் முத்துக்கு கிடைத்த ஆதாரம்.. அண்ணாமலை எழுப்பிய சந்தேகம்.. தவிக்கும் மீனா
அப்போது பணம் கொடுத்தவர் எனக்கு இந்த வீட்டில் இருந்து யாராவது நாங்க அந்த பணத்துக்கு பொறுப்பு என்று கையெழுத்து போட்டு தரணும் என்று சொல்ல, முத்து அப்படி எல்லாம் தர முடியாது என்று மிரட்டி கொண்டிருக்கிறார். அண்ணாமலை நான் போடுறேன் என்று கையெழுத்து போட போகிறார். விஜயா நீங்க கொஞ்சம் யோசிச்சு செய்யுங்க என்று சொல்ல, ஆனாலும் அண்ணாமலை கையெழுத்து போடப் போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications