முத்துவின் பாட்டியிடம் உண்மைகளை உடைத்த மீனா.. விஜயாவுக்கு வைத்த ஆப்பு.. குடும்பத்திற்குள் வந்த பூகம்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 28ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ரவி மற்றும் ஸ்ருதிக்கு திருமணம் நடைபெற்றது, பிறகு வீட்டில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் மீனா முத்துவின் பாட்டியிடம் போட்டு கொடுத்து விடுகிறார்.
அதனால் முத்துவின் பாட்டி வீட்டிற்கு வந்து விஜயாவை லெப்ட் ரைட் வாங்கி விடுகிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் முத்து ரோகினி இடம் உங்க அப்பா மட்டும் இன்னும் இந்த பக்கம் வரலையே என்று கேள்வி கேட்க, அதற்கு விஜயா அதெல்லாம் நீ எதுக்கு கேள்வி கேட்க என்று ரோகினிக்கு சப்போர்ட் பண்ண அதற்கு அண்ணாமலை எனக்கும் இந்த சந்தேகம் வந்துச்சு.
ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகுது ஆனா அவங்க அப்பா இன்னும் வரல ஒரு போன் கூட பேசினது கிடையாதே என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி அதிர்ச்சியாகி நிற்கிறார். பிறகு சுதாகரித்துக் கொண்டு அவர் பிசியா இருக்கிறார் அங்கிள். பிசினஸ்க்காக வெளியூருக்கு போய் இருக்கிறார். அதனால் தான் பேசல என்று சொல்ல அதற்கு விஜயா என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் வர தான போறாங்க என்று சமாளிக்கிறார்.

அந்த நேரத்தில் மனோஜ் ஏதோ மசாலா வாசனை வருது என்று சொல்ல, முத்து ஆமா கரெக்ட்டா கண்டு பிடிச்சிட்ட, நீ மோப்ப நாயா போலீஸ் வேலைக்கு சேர்ந்திடு என்று சொல்லி தன்னுடைய கையில் இருந்த கவரில் இருக்கும் தந்தூரி சிக்கனை காட்ட மனோஜ் நாக்கு ஊற, யாருக்கு என்று கேட்க இது என் பொண்டாட்டிக்காக வாங்கிட்டு வந்தேன் என்று முத்து சொன்னதும் கோபமான விஜயா என்னங்க இதெல்லாம் வெளியிலிருந்து எல்லாம் வாங்கிட்டு வரான்.

அதுவும் அவன் பொண்டாட்டிக்கு மட்டும் தனியா என்று கேள்வி கேட்க அதற்கு முத்து இந்த வீட்டுல என் பொண்டாட்டி எல்லாருக்கும் பார்த்து பார்த்து பிடித்ததை எல்லாம் செஞ்சு கொடுக்கிறா ஆனா அவளுக்கு என்ன வேணும்னு நீங்க யாரும் கேக்கலையே அது தான் நான் அவளுக்கு புடிச்சதை வாங்கிட்டு வரேன் என்று சொல்லி ரூம்க்கு மீனாவை கூப்பிடுகிறார். பிறகு அண்ணாமலையிடம் ஒரு நல்ல புருஷன் பொண்டாட்டி கேட்காமலே அவளுக்கு பிடித்ததை வாங்கி தருனும் தானே? என்று கேட்க,

அதற்கு அவரும் நீ செஞ்சது தான் கரெக்ட் என்று சொல்ல முத்து மீனாவை கூட்டிக்கொண்டு சென்று அவர் தந்தூரி சிக்கன் சாப்பிடுவதை அழகு பார்க்கிறார். பிறகு நேத்து நைட்டு நீ எவ்வளவு கஷ்டப்பட்டா என்பது எனக்கு தெரியும். அந்த பக்கமா படுத்துட்டு நீ அழுதுட்டு இருந்த, அது எனக்கு தெரியக்கூடாதுன்னு நீ நெனச்ச தானே என்று கேட்க அதற்கு மீனா பீல் பண்ணி சந்தோஷப்படுகிறார்.

அடுத்த நாள் காலையில் முத்து வேலைக்கு கிளம்புகிறார். அந்த நேரத்தில் வீட்டு வாசலில் மீனா கோலம் போட்டு கொண்டு இருக்க, ஒரு குடுகுடுப்பைக்காரர் வருகிறார். அவர் முத்துவை பார்த்ததும் நீங்க தங்கமான ஆளு என்று பாராட்டி பேச அதனால் சந்தோஷமான முத்து எல்லாரும் என்னைக் கோபக்காரங்கன்னு சொல்லுவாங்க. நீ தான் நல்லவிதமா பேசுற அதனால இந்த அம்பது ரூபாய வச்சிக்கோ என்று கொடுக்கிறார்.௺
அதை தொடர்ந்து அந்த குடுகுடுப்புக்காரன் மீனாவை பார்த்து நீ இந்த வீட்டுக்கு வந்த குலவிளக்கு ஆனா என்ன உன் வாயால தான் உனக்கு பிரச்சனை என்று சொல்ல, அதைக் கேட்டு சந்தோஷமான முத்து கரெக்டா சொன்னீங்க என்று கொடுத்த ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டு 100 ரூபாயை கொடுக்கிறார்.
பிறகு அந்த குடுகுடுப்புக்காரர் அதோடு போகாமல் முத்துவிடம் நீங்க கோபத்தை மட்டும் குறைச்சிக்கிட்டா இந்த கோட்டையை ஆகலாம் என்று சொல்ல உடனே கோவமான முத்து தான் கொடுத்த 100 ரூபாயை பிடுங்கிக் கொண்டு மீண்டும் அம்பது ரூபாயை கொடுத்து இது உனக்கு போதும் என்று துரத்தி விடுகிறார்.

அதற்கு பிறகு மீனா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது முத்துவின் பாட்டி போன் செய்து ரவிக்கு ஒரு நல்ல இடம் வந்திருக்கு பொண்ணு வீட்டுக்காரங்களை கூட்டிட்டு ஊருக்கு வரேன் என்று சொல்ல, அதற்கு மீனா வேண்டாம் பாட்டி என்று ஏற்கனவே ரவிக்கு திருமணமான விஷயம் அண்ணாமலை கைது செய்யப்பட்டது, நெஞ்சு வலி வந்தது, ஆபரேஷன் நடந்தது என எல்லா விஷயத்தையும் சொல்கிறார். இதனால் பதறிப்போன பாட்டி சென்னைக்கு கிளம்பி வந்து விஜயாவை லெப்ட் ரைட் வாங்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications