சிறகடிக்க ஆசை: மனோஜ்காக முத்து எடுத்த முடிவு! ரோகிணியை லெப்ட் ரைட் வாங்கிய மீனா! ஜாடிக்கேற்ற மூடி தான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 31ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரையும் சேர்த்து வைப்பதற்காக முத்துவும், மீனாவும் முயற்சி செய்கின்றனர். ஆனால் அது அவர்களுக்கு பிரச்சனையாக வருகிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜும் ரோகிணியும் சாப்பிடாமல் இருப்பதால் முத்துவும் மீனாவும் அவர்களை சாப்பிட வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு மனோஜ் வீட்டிற்கு வராததால் முத்து மனோஜ் ஷோரூமுக்கு பிரியாணி வாங்கிக் கொண்டு போகிறார்.

அங்கு மனோஜிடம் நீ ஏன் வீட்டுக்கு வரல? நீயா வரலையா அல்லது யாரும் சொல்லி வரலையா? என்று கேட்க, மனோஜ் இல்ல நான் தான் வரல, எனக்கு வேலை நிறைய இருக்கு என்று சமாளிக்கிறார். அதற்கு முத்து எனக்கு உன்னை பத்தி நல்லாவே தெரியும். நீ சாப்பிடாமல் இருந்திக்க மாட்டே. மீனா உனக்கும் சேர்த்து சமைக்கிறேன்னு சொன்னா. நான் தான் வெளியில வாங்கிட்டு வந்தேன்.
நீ இந்த பிரியாணியை சாப்பிடு என்று சொல்ல, முதல்ல மனோஜ் பிகு பண்ணுகிறார் ஆனால் முத்து நான் உன் கூட பிறந்தவன் எத்தனை வருஷமா உன்னை பாக்குறேன் நீ சாப்பிடாமல் தூங்க மாட்ட முதலில் இதை சாப்பிடு என்று சொல்கிறார். அதோடு ரோகிணியும் சாப்பிடல ஆனா மீனா ரோகிணியை சாப்பிட வச்சுடுவ நீ இதை சாப்பிடு என்று சொன்னதும் மனோஜ் சாப்பிடுகிறார்.
பிறகு சாப்பிட்டு முடித்ததும் நீ என் கடையை உன் பேருக்கு எழுதி வாங்குவதற்காக தான் எனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தியா? என்று கேட்க, அதற்கு நீ திருந்தவே மாட்டியா எனக்கு உழைச்சு தான் வாழ தெரியும். உன்னை மாதிரி ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்ய தெரியாது. எனக்கு கார் ஓட்டி சம்பாதிச்சாலே போதும் இந்த வேலையெல்லாம் எனக்கு வேண்டாம் என்று மனோஜை திட்டிவிட்டு முத்து அங்கிருந்து கிளம்பி வருகிறார்.
அதுபோல மீனா ரோகிணிக்கு சாப்பாடு கொடுக்கிறார். முதலில் ரோகிணி வேண்டாம் என்று சொன்னாலும் பிறகு சாப்பாட்டை வாங்கி சாப்பிட ஆரம்பிக்கிறார். அப்போதும் மீனா அங்கிருந்து கிளம்பும்போது இப்போ உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே, இதுவரைக்கும் அத்தை இந்த வீட்டில் உங்களை மட்டும் தான் திட்டிட்டு இருப்பாங்க.
இப்ப உங்கள போலவே என்னையும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க என்பது உங்களுக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கும் என்று சொல்ல, அதற்கு மீனா நீங்க சாப்பிடலைன்னு நான் வருத்தப்பட்டேன். எனக்கு இதுவும் தேவை... இன்னமும் தேவைதான். யார் யாருக்கு உதவி செய்யணும்னு ஒரு லிமிட்டு இருக்குது.
உங்களுக்கெல்லாம் நல்லது நடக்கும் என்று நினைத்தால் எனக்கு தான் கெட்ட பேரு. நீங்க சாப்பிட்டா சாப்பிடுங்க இல்லன்னா போங்க என்று வெளியே வரும்போது, உங்க புருஷன் தானே எங்களை வீட்டில் மாட்டிவிட்டது என்று மீண்டும் ரோகிணி கேட்க, நீங்க பண்ணுனதை தான் வீட்டில் சொன்னாரு, அவர் எதுவும் புதுசா உங்க மேல கம்ப்ளைன்ட் செய்யல என்று பதிலடி கொடுத்துவிட்டு மீனா வெளியே வரும் போது விஜயா எங்கடி போற ஏற்கனவே ஸ்ருதியை உன் பக்கம் சேர்த்துகிட்ட, இப்போ ரோகிணியையும் உன் பக்கமா சேர்க்க பிளான் பண்ணுறியா என்று திட்டுகிறார்.
அதற்கு மீனா எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நான் தனியாவே இருந்துக்குவேன் என்று சொல்லிவிட்டு வருகிறார். பிறகு முத்து வீட்டிற்கு வந்து செருப்பை எடுத்து தன்னைத்தானே அடித்துக் கொள்கிறார். அப்போது மீனா என்ன ஆச்சு என்று விசாரிக்க மனோஜ் சாப்பாடு வாங்கி கொடுத்ததற்கு அவன் ஷோரூம் எழுதி வாங்குறதுக்காக சாப்பாடு வாங்கி கொடுக்கிறியான்னு கேட்கிறான் என்று சொல்ல,
அப்போ என்னையும் செருப்பால அடிங்க என்று மீனா சொல்கிறார். பிறகு ரோகிணி சொன்ன விஷயத்தை மீனாவும் சொல்கிறார். இருவரும் ஜாடிக்கேத்த மூடி தான் ரெண்டு பேருடைய புத்தியும் ஒரே போல தான் இருக்கிறது என்று முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த நாள் மீனா தன்னுடைய அம்மாவிடம் ரோகிணி பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சீதா நான் ரோகிணிக்கு போன் பண்ணி பேச போறேன் எங்க மாமாவுக்கும் சேர வேண்டிய பணத்தில் தான் நீங்க ஏமாற்றி ஷோரூம் திறந்தீங்களா என்று கேட்க போறேன். உன்னை எத்தனை தடவை அவமானப்படுத்தி இருக்காங்க நான் இதை கேட்காமல் விடமாட்டேன் என்று தகராறு செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த சத்தியா ரோகிணி எப்படியும் மாட்டுவாங்கன்னு எனக்கு ஏற்கனவே தெரியும். அவங்க சிட்டி இடம் இரண்டு முறை கடன் வாங்கி இருக்காங்க என்று ரோகிணி பற்றிய அடுத்த உண்மையை உடைக்கிறார். இதனால் மீனா அதிர்ச்சியில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications