சிறகடிக்க ஆசை: வீட்டுக்கு வந்த முதல் நாளே ஸ்ருதி செய்த வேலை.. ஷாக்கான விஜயா.. இந்த அவமானம் தேவையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஸ்ருதி வீட்டிற்கு வந்த முதல் நாளே செய்த செயலை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார். இத்தனை நாட்களாக மீனாவை படுத்திய பாட்டிற்கு விஜயாவிற்கு சரியான பாடம் கிடைத்திருக்கிறது.
பணக்கார மருமகளுக்கு ஆசைப்பட்ட விஜயாவுக்கு கிடைத்த அவமானத்தை பார்த்து ரோகினி சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் விஜயா சொன்ன மாதிரியே ஸ்ருதியின் அம்மா ரவி மற்றும் ஸ்ருதியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். அப்போது முத்து இருக்கக் கூடாது என்று ஸ்ருதியின் அம்மா கூறி இருப்பதால் விஜயா ஸ்ருதி ரவி வீட்டிற்கு வருகிற நேரத்தில் முத்துவை வேலைக்கு அனுப்பி விட வேண்டும் என்று எவ்வளவோ ட்ரை பண்ணுகிறார்.
ஆனால் அதே நேரத்தில் முத்து தனக்கு வயிறு சரியில்லை என்று சொல்லி பாத்ரூமுக்கு போகிறார். பிறகு முத்து ரூம் கதவை விஜயா பூட்டி வைத்து விடுகிறார். அப்போது ஸ்ருதி மற்றும் ரவி ஸ்ருதி அம்மாவோடு வீட்டிற்கு வர அவர்களை ஆரத்தி எடுத்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டிற்குள்ளே வந்ததும் ஸ்ருதியிடம் விஜயா நீ முதல் முதலா இந்த வீட்டுக்கு வந்து இருக்க விளக்கேத்து என்று சொல்லி தீப்பெட்டியை கொடுக்க அப்போது ஸ்ருதி தீ பத்த வைக்க தெரியாமல் திணறுகிறார். அப்போது அண்ணாமலை ஒழுங்கா பத்தவை, இது கூட தெரியாதா? என்று கேட்க அதற்கு ஸ்ருதி இதெல்லாம் நான் செஞ்சதே இல்ல.
ஸ்மோக்கிங் பண்ற பழக்கமும் கிடையாது என்று சொல்கிறார். பிறகு விஜயா அந்த தீப்பெட்டியை வாங்கி பத்த வைத்து தீக்குச்சியை ஸ்ருதி கையில் கொடுத்து அதை வைத்து ஸ்ருதி தீ பத்த வைக்கிறார். பிறகு பால் பழத்தை ரவியிடம் கொடுத்த விஜயா இதை நீ குடித்துவிட்டு உன் பொண்டாட்டி கிட்ட கொடு என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி ஏன் பொண்டாட்டி முதல்ல சாப்பிட்டுட்டு புருஷனுக்கு தர கூடாதா என்று சொல்லி அதை வாங்கி குடிக்கிறார்.
பிறகு விஜயா, அதான் கிச்சன் என்று காமிக்க அதற்கு ஸ்ருதி அது ரவியோட டிபார்ட்மென்ட். எனக்கு சம்பந்தமே இல்லை என்று சிரித்துக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார். அடுத்ததா இரவு நேரத்தில் உங்களுக்கு இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் ரெடி பண்ணி வச்சிருக்கேன் என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி அதான் எங்களுக்கு ஏற்கனவே முடிஞ்சிடுச்சு என்று சொல்கிறார். இதை கேட்டு விஜயா ஷாக் ஆகிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications