சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றிய விசாரணையை தொடங்கிய முத்து.. விஜயாவிடம் ரகசியத்தை சொன்ன ஸ்ருதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 6-ம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி பற்றிய உண்மைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக முத்து டிடெக்டிவ் ஆபீஸ் பற்றி விசாரிக்கிறார். அதே நேரத்தில் மனோஜ் விஜயாவிற்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து செல்வத்திடம் நான் டிடெக்டிவ் ஆபீஸ் பற்றி விசாரிக்க சொன்னேன் விசாரிச்சியா என்று கேட்க, அதற்கு செல்வம் விசாரிச்சேன் ஆனா நீ எதற்காக அதை விசாரிக்கிற எதுவும் பொண்ணு பார்க்க போறியா என்று கேட்க, இல்ல பார்லர் அம்மா ஏதோ ஒரு திருட்டு வேலை பண்ணிக்கிட்டு இருக்கு அதை பற்றி விசாரிக்க போறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக மீனாவை பாலோ செய்யும் நபர் அங்கு வருகிறார். அவரிடம் நீ காதலை சொல்லப்போன அந்த பொண்ணு என்ன சொல்லுச்சு என்று கேட்க, அந்த நபர் நான் நீங்க சொன்ன மாதிரியே பேசிட்டேன். ஆனால் அந்த பொண்ணு என்ன சொல்லப்போகுதுன்னு தெரியல.. பயத்துல ஓடி வந்துட்டேன் என்று சொல்ல,
அதற்கு முத்து நீ பூ, பழம் வாங்கிட்டு அந்த பொண்ணோட வீட்டுக்கு போ அங்க அந்த பொண்ணோட அப்பா இருப்பாங்க. அவரிடம் நான் உங்க மகளை தான் லவ் பண்ணுறேன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் என்ன பேசு என்று சொல்லி அனுப்புகிறார். அடுத்ததாக விஜயாவின் போட்டோவை மனோஜ் கொண்டு வந்து காட்ட அதை பார்த்து விஜயா கோபப்படுகிறார்.
இத்தனைக்கும் காரணம் மீனாதான் என்று வழக்கம்போல மீனா மீது பழியை போடுகிறார். மீனா வேணுன்னு தான் கீழே எண்ணையை கொட்டி என்னை வழுக்கி விழ வைத்து, என் மீது மாவை கொட்டி போட்டோ எடுத்து இப்படி வித்துட்டு இருக்குறா என்று சொல்லிக் கொண்டிருக்க மனோஜும், மீனாதான் ஏதோ பிளான் பண்ணி இருக்கிறா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ஸ்ருதி, மீனா மீது தப்பு கிடையாது பிரச்சனைக்கு காரணம் நான் தான். நான் உங்க போட்டோவை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வச்சேன். அப்புறம் சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டேன் அதில் இருந்து யாரோ பிரிண்ட் போட்டு இருக்காங்க என்று சொல்கிறார். அதற்கு முத்து அப்போ இனி நாமலே இந்த போட்டோவை பிரிண்ட் போட்டு வித்துரலாம்.
ஒரு நாளைக்கு நிறைய லாபம் கிடைக்கும். இந்த போட்டோவை வச்சிருக்கவங்க கிட்ட காபி ரைட் கேக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்க விஜயா கோபப்படுகிறார். அண்ணாமலை விஜயாவை கிண்டல் செய்து பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக மனோஜ் மற்றும் ரோகிணி ஷோரூம் வருகிறார்கள்.

அப்போது விஜயாவின் போட்டோவிற்க்கு அங்கிருக்கும் நபர் ஒருவர் பூ போட்டு கொண்டிருக்க அதற்கு மனோஜ் திட்டுகிறார். அந்த நேரத்தில் மனோஜுக்கு போன் வருகிறது. அதில் அவருடைய பார்ட்னர் அவருக்கு பணம் அனுப்பி இருப்பதாக சொல்கிறார்.

அதே நேரத்தில் மனோஜின் பார்க் நண்பர் வருகிறார். அவர் அவருக்கு தெரிந்தவர் ஒருவர் மூலமாக ஒரு வீடு விலைக்கு வருகிறது அதை வாங்குறியா என்று கேட்கிறார். இதனால் மனோஜ் அம்மா போட்டோ கடைக்கு வந்த பிறகு தன் எனக்கு லாபம் கிடைச்சி இருக்கிறது, வீடு வாங்கவும் யோகம் வந்து இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications