சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன செய்தி.. மீனாவுக்கு தெரிந்த உண்மை.. இனி குடும்பம் உடைய போகுது!
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 9ம் தேதிக்கான எபிசோடில் புது வீடு வாங்க போகும் மகிழ்ச்சி செய்தியை ரோகிணி சொன்னதும் விஜயா சந்தோஷத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் மீனா வருத்தமாக இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் தனக்கு கிடைத்த லாபத்தில் விஜயாவுக்கு தங்கத்தில் காப்பு வாங்கி கொடுக்கிறார். அதை பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார். அதோடு தாங்கள் புதியதாக வீடு ஒன்று வாங்கப் போவதாகவும் மனோஜ் மற்றும் ரோகிணி சொன்னதும் விஜயா சந்தோஷத்தில் மனோஜையும் ரோகிணியையும் கட்டிப்பிடித்து கொண்டாடுகிறார்.

இதைத் தொடர்ந்து மீனா மொட்டை மாடியில் தனியாக நின்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அங்கே வந்து முத்து என்னவென்று கேட்கிறார். அதற்கு மீனா, ரோகிணி தனியாக வீடு எடுக்க வாங்க போவதாக சொல்கிறார். அதுபோல ஸ்ருதியும் அவங்க அம்மா வீட்டுக்கு போய்விட்டா இந்த குடும்பம் பிரிந்துவிடும் என்று கவலைப்படுகிறார்.
உடனே முத்து நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும் நான் இப்பவே போய் மனோஜிடம் வீடு வாங்க கூடாது என்று சொல்லப் போறேன் என்று சொல்ல, அதற்கு மீனா தடுக்கிறார். அப்போ காலையில் சொல்லவா என்று முத்து கேட்டதும் வேண்டாம் நீங்க எப்பவும் சொல்ல வேண்டாம் சொன்னால் நீங்க பொறாமையில் பேசுறதா சொல்லுவாங்க. அங்க என்ன நடக்கிறதோ அது நடக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார்.
அதைத் தொடர்ந்து முத்து மீனாவிடம் முத்தம் கேட்க, மீனா முதலில் மறுத்தாலும் கடைசியில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு ஓடி போகிறார். மறுபக்கத்தில் ரோகிணி தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று கிரிஷை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவதற்காக காத்திருக்கிறார். அந்த நேரத்தில் தன்னுடைய அம்மாவிடம் தாங்கள் புது வீடு வாங்க போவதை சொல்கிறார்.

மூன்று கோடிக்கு வீடு வாங்க போகிறோம் என்று ரோகிணி சொன்னதும் அவ்வளவு காசுக்கு என்ன செய்வா என்று அம்மா கேட்கிறார். அதற்கு ரோகிணி அது மாதாமாதம் கட்டி முடிக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு அவருடைய அம்மா வருமானத்தின்படி தான் குடும்பத்தை நடத்த வேண்டும் அதுதான் நிம்மதியாக இருக்கும் என்று அட்வைஸ் செய்ததும் உனக்கு நான் வீடு வாங்குறது பிடிக்கலையா என்று ரோகிணி கோபப்படுகிறார்.
பிறகு கிரிஷை கூட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு போகிறார். மறுபக்கத்தில் அண்ணாமலை முதல் நாள் வேலைக்கு செல்வதற்காக கிளம்புகிறார். அப்போது மீனா அவருக்கு மதிய சாப்பாடு கொண்டு வந்து கொடுத்ததும் தன்னுடைய அம்மா ஞாபகம் வந்து விட்டதாக எமோஷனல் ஆகிறார். அப்போது முத்து அண்ணாமலை வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்கிறார்.

ரவி எங்க வேலைக்கு போறீங்க என்று விசாரிக்க ஸ்கூலுக்கு வேலைக்கு போறேன் என்று அண்ணாமலை சொல்கிறார். உடனே மனோஜ் அப்போ வாட்ச்மேன் வேலையா என்று கேட்டதும் முத்து அடிக்க போகிறார். அப்போது அண்ணாமலை இல்லடா நான் அக்கவுண்ட்ஸ் வேலைக்கு போகிறேன்.
வாரத்தில் ஒரு நாள் தான் வேலை என்று சொன்னதும் வாரத்தில் ஒரு நாள் தானடா போயிட்டு வரட்டும் விடு என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications