சத்யா கையை உடைத்த முத்து.. வீடியோவை வைத்து செல்வம் போட்ட ப்ளான்.. கோபத்தில் மீனா! விஜயா முடிவு?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 14ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்து சத்யாவின் கையை உடைத்ததால் சத்யா மருத்துவமனையில் இருக்க அதை பார்த்து மீனா பதறி போய் இருக்கிறார்.
இதோடு சத்யா செய்த திருட்டு வேலை பற்றிய வீடியோ இப்போது செல்வத்திடம் இருக்கும் நிலையில் அதை வைத்து சத்யாவை திருத்துவதற்காக செல்வம் முயற்சி எடுத்து இருப்பதாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்குது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து சிட்டியை அடித்துக் கொண்டிருக்க அப்போது சத்யா அவன் என் பிரண்டு அவனை அடிக்காத மாமான்னு கூட பார்க்க மாட்டேன் என்று முத்துவின் சட்டையை பிடிக்க, அதற்கு என் மேலயா கை வைக்கிற என்று முத்து சத்யாவை காலால் எட்டி மிதித்து பிறகு அவருடைய கையைப் பிடித்து முறுக்கி விடுகிறார்.

அதனால் சத்தியா வலியில் துடிக்க அப்போது செல்வம் முத்துவை தடுத்து நிறுத்தி சத்யாவை நீ போடா என்று அனுப்பி வைக்கிறார். பிறகு சிட்டியுடன் வந்த சத்தியா கைவலியில் துடிக்க ஹாஸ்பிடல் போகலாம் என்று சிட்டி கூப்பிட அதற்கு வேண்டாம் கொஞ்ச நேரத்தில் சரியாயிடும் என்று சத்யா மறுத்துவிடுகிறார். பிறகு சிட்டி சத்யாவை வீட்டில் கொண்டு வந்து விட வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்தில் சந்தியாவிற்கு கைவலி அதிகமாகி விடுகிறது.
அவர் வலியில் துடித்துக் கொண்டு இருக்க அவருடைய அம்மாவும் சீதாவும் என்ன ஆச்சுன்னு விசாரிக்கின்றனர். அப்போது சிட்டி பைக்கில் போகும்போது கீழே விழுந்துட்டேன் என்று ஏமாற்றுகிறார். உடனே அவரை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கின்றனர் மறுபக்கத்தில் முத்துவிடம் செல்வம் நீ ஏன்டா அவனை அடிச்சா? என்ன இருந்தாலும் உனக்கு இருக்கிற ஒரே மச்சான் அவன் தான்.

நீ அவனை அடிச்சதால இனி என்ன பிரச்சனை வருமோனு தெரியல என்று சொல்ல அதற்கு முத்து சத்யா செய்த விஷயத்தை வீடியோ ஆதாரமாக காட்டி கோபப்படுகிறார். அதோடு அவன் மேல அவங்க வீட்ல பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறாங்க, இந்த விஷயத்தை சொல்லலாம்னு தான் அவங்க வீட்டுக்கு போனேன். ஆனா அத்தை பேசுனது கேட்டு சொல்ல முடியல அவங்களோட மொத்த நம்பிக்கையும் சத்யாவா தான் இருக்கான்.

எங்க வீட்ல இந்த விஷயம் தெரிந்தா எங்கள் அம்மா மீனாவை வீட்டுல இருக்க விட மாட்டாங்க. இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது அதுதான் எல்லாருக்கும் நல்லது. ஸ்டுடியோவிலையும் அந்த வீடியோவை நான் டெலிட் பண்ண சொல்லிட்டேன். நானும் அந்த வீடியோவை டெலிட் பண்ண போறேன் என்று போனை எடுக்க செல்வம் வேண்டாம் சத்யாவை திருத்த இருக்கிற ஒரே ஆதாரம் இதுதான் இது ரொம்ப முக்கியம் என்று சொல்கிறார்.

அடுத்ததாக மீனா முத்துவுக்கு போன் போட்டு சத்யாவுக்கு அடிபட்டு இருக்கும் விஷயத்தை சொல்ல, முத்து அப்படியா என்று அசால்டாக கேட்கிறார். அதோடு என்னால் ஹாஸ்பிடலுக்கு வர முடியாது சவாரிக்கு போயிட்டு இருக்கிறேன் என்று முத்து சொல்ல அதற்கு மீனா என்னுடைய தம்பி கை வலியில் துடிச்சிட்டு இருக்கான். உங்களுக்கு சவாரி தான் முக்கியமா என்று கேட்க அதற்கு முத்து எனக்கு உன் தம்பியா இருந்தாலும் சரி என் தம்பி இருந்தாலும் சரி எனக்கு சவாரி தான் முக்கியம் என்று சொல்ல மீனா கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications