ஸ்ருதியால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்சனை.. அவமானப்படும் விஜயா.. அண்ணாமலையால் வெடித்த பூகம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். அதில் கிச்சனில் இருக்கும் மீனாவிடம் முத்து இப்ப எதுக்கு எல்லாத்தையும் அப்பாகிட்ட சொன்ன என்று சொல்ல அதற்கு மீனா எனக்கு வேறு யாரு இருக்கா அவர் ஒருத்தர் தான் எனக்கு ஆறுதலாக இருக்கார், அதனால் அவர் கிட்ட சொன்னேன்.

எதுக்காக என் தம்பியை நீங்க அடிச்சீங்க? அவன் பாவம் படிக்கிற பிள்ளை என்று மீனா பீல் பண்ண அதற்கு முத்து அவன் என்ன செய்தான் தெரியுமா என்று உண்மையை சொல்ல வருகிறார். ஆனால் மீனா அதை காது கொடுத்து கேட்காமல் நாங்க பணம் காசு இல்லாதவங்க தான். அதனால இப்படி பண்றீங்களே என்று சொல்ல முத்து எதுவும் சொல்லாமல் கோபமாக அங்கிருந்து போய் விடுகிறார்.

siragadikka aasai serial December February 19th episode full update

அடுத்ததாக வீட்டில் நடக்கும் முத்து மற்றும் மீனாவின் சண்டையைப் பற்றி விஜயா பார்வதியிடம் மாடிக்கு சென்று சொல்லி சந்தோஷப்படுகிறார். அப்போது அந்த முத்து குடிச்சிட்டு அடிக்கிற அடியில இந்த பூக்காரி அவளே வீட்டில் இருந்து ஓட போறா என்று சந்தோஷப்பட்டு பேசிவிட்டு திரும்பி பார்க்க அப்போது அண்ணாமலை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு உன்னை பத்தி நானும் போன் பண்ணி சொல்ல போறேன்... வீட்டுக்குள்ள நடக்கிற பிரச்சனையை இப்படித்தான் அடுத்தவங்களுக்கு சொல்லுவியா? என்று திட்டுகிறார்.

siragadikka aasai serial December February 19th episode full update

மறுபக்கத்தில் கார் செட்டில் செல்வமும் அவர்களுடைய பிரண்ட்ஸும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வந்த சிட்டி மொத்த காசையும் வைக்கணும் அப்படி இல்லாட்டி மூணு நாள்ல காரை எல்லாம் தூக்கி விடுவேன். உங்களுக்காக தானே அந்த முத்து என்ன அடித்து அவமானப்படுத்தினான். அவன் கிட்ட போய் பணத்தை கேளுங்க என்று மிரட்டி விட்டு போகிறார்.

siragadikka aasai serial December February 19th episode full update

இதை அடுத்த ரூமில் ஸ்ருதியும் ரவியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இன்னைக்கு என்ன நாள் தெரியுமா என்று ஸ்ருதி ரவியிடம் கேட்க ரவி என்ன நாள் இன்னைக்கு மண்டே என்று சொல்கிறார். அதற்கு ரவி ஸ்ருதியை திட்டி கொண்டு இன்றைக்கு முதல் முதலா நாம காதலிக்கும் போது பார்த்துக்கொண்ட நாள் என்று சொல்ல அதற்கு ரவி இந்த நாளை எல்லாம் யாராவது ஞாபகம் வச்சு இருப்பாங்களா என்று கேட்கிறார்.

உடனே ஸ்ருதி ரவியை கூட்டிக்கொண்டு அண்ணாமலை இடம் போய் நீங்க ஆன்ட்டியை எப்ப பார்த்தீங்க என்று கேட்க அதற்கு அவர் 30 வருஷத்துக்கு முன்னாடி நான் விஜயாவை பார்க்கும் போது அவ ஜிமிக்கி போட்டு இருந்தா, புடவை கட்டி பூ எல்லாம் வச்சிருந்தா என்று அன்னைக்கு பார்க்கும்போது நடந்த நிகழ்வுகளை சொல்கிறார்.

அதை கேட்ட ஸ்ருதி பார்த்தியா உங்க அப்பா தான் பெஸ்ட் என்று சொல்லிக்கொண்டு கிச்சனிலிருந்து விஜயாவிடம் நீங்க முதல்முறையா மாமாவை எப்ப பார்த்தீங்க என்று ஸ்ருதி கேட்க, அதற்கு விஜயா நான் அவரை பார்த்ததே வேஸ்ட் என்று நினைக்கிறேன் இதுல அந்த நாளை எல்லாம் நினைவு வச்சுக்கணுமா என்று கேட்கிறார்.

அதற்கு இப்பதான் தெரியுது ரவி உனக்கு உங்க அம்மாவோட கேரக்டர் தான் இருக்கு என்று சொல்லிக் கொண்டு விஜயாவிடம் உங்கள மாமா எப்ப பார்த்தாருனு சரியா சொல்றாரு என்று சொல்ல அதற்கு விஜயா வெட்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து ஸ்ருதி மனோஜ் மற்றும் ரோகினி இடம் நீங்க எப்போ பார்த்து கொண்டீங்க என்று கேட்க அதற்கு இருவரும் எப்போது பார்த்துக் கொண்டார்களோ அதை சரியாக சொல்கின்றனர்.

siragadikka aasai serial December February 19th episode full update

அதற்குப் பிறகு ஸ்ருதி ரவியிடம் உனக்கு மட்டும் தான் ஞாபகம் இல்ல மத்த எல்லாருக்கும் ஞாபகம் இருக்கு, இதுக்கு பனிஷ்மென்ட் நீ என்னை சைக்கிளில் ஸ்டூடியோ கூட்டிட்டு போகணும் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை தன்னைப் முதல் நாள் பார்த்ததை இப்போதும் சொன்னதை கேட்டு விஜயாவுக்கு லவ் மூடு வருகிறது. உடனே காபி போட்டு கொண்டு அண்ணாமலைக்கு வெக்கப்பட்டு கொண்டு கொடுக்க இதை பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+