முத்துவை விஜயா வெறுக்க மனோஜ் தான் காரணமா? சிறுவயது ரகசியம்.. எதிர்பாராத ட்விஸ்ட்.. கண் கலங்கிய மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 1ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் விஜயா தன்னை சிறுவயதிலேயே பாட்டி வீட்டில் விட்டுட்டு போன காரணத்தை சொல்லி முத்து கண்கலங்கி அழுது இருக்கிறார்..
அதோடு விஜயா தன்னை வெறுப்பதற்கு காரணம் மனோஜ் தான் என்ற உண்மையை சொல்ல வர அதை அண்ணாமலை தடுத்து நிறுத்தி இருக்கிறார். ஆனாலும் மீனா முத்துவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஸ்ருதி ரவியிடம் நீ இதற்கு முன்னாடி யாரையாவது காதலித்து இருக்கியா என்று கேட்க, அதற்கு அவர் ஆமாம் நான் படிக்கும்போது ஒரு பொண்ணு மேலே கிரஷ் இருந்தது என்று சொல்கிறார். அடுத்ததாக மனோஜிடம் ரவி ட்ரூத் ஆர் டேரா என்று கேட்க அதற்கு மனோஜ் டேரை தேர்வு செய்ய பத்து புஷ் அப்போடு என்று சொல்ல அதற்கு மனோஜ் 5 போட்டுவிட்டு விழுந்து விடுகிறார்.
அதை தொடர்ந்து ரோகிணியிடம் நீங்க ஏதாவது பொய் சொல்லி இருக்கீங்களா என்று கேள்வி கேட்க அதற்கு ரோகினி சொன்னது எல்லாமே பொய் தானே என்று நினைத்துக் கொண்டு," சூழ்நிலையால் ஒரு பொய் உண்மையாகலாம், ஒரு உண்மை பொய்யாகலாம்" என்று சொல்ல அதற்கு மீனா இவங்களை பதில் சொல்ல சொன்னா என்ன இப்படி பேசிட்டு இருக்காங்க என்று கேட்க அதற்கு விஜயா அவ தத்துவம் பேசுறா...

அது ஆராய்ச்சி பண்ணி தான் தெரிஞ்சுக்கணும் என்று சமாளிக்கிறார். அதற்கு அண்ணாமலை போய் உட்கார்ந்து ஆராய்ச்சி பண்ணு என்று திட்டுகிறார். பிறகு மீனாவிடம் உன்னுடைய ஆசை என்னவென்று கேட்க, அதற்கு மீனா என்னுடைய தம்பி, தங்கச்சி நல்லா படிச்சு வேலைக்கு போய் குடும்பத்தோட நிலைமை மாறனும்... அதோட நம்ம குடும்பத்துல எல்லாரும் இதுபோல சந்தோஷமா இருக்கணும் என்று சொல்ல உன்னுடைய ஆசையை சொல்லு என்று மீண்டும் அண்ணாமலை கேட்க எனக்குன்னு எதுவுமே இல்லை என்று சொல்லி மீனா அனைவரையும் வியப்படைய வைக்கிறார்.

அடுத்ததாக முத்துவிடம் உன் மனசுல என்ன இருக்கு என்று கேட்க, அதற்கு சின்ன வயசுல ஒரு பொங்கல் அன்னைக்கு அம்மாவும் அப்பாவும் என்னை கூட்டிட்டு வந்து இங்கு விட்டுட்டு போனாங்க. எதுக்கு விட்டுட்டு போனாங்கன்னு அன்னைக்கும் தெரியாது, இன்னைக்கும் தெரியாது. நான் எப்பவும் அம்மா அம்மான்னு அவங்களை பத்தி மட்டும் தான் பாட்டி கேட்டுட்டு இருப்பேன்.
எனக்கு ஒன்னுனா அவங்க துடி துடிச்சு போயிடுவாங்க. ஒருமுறை கீழே விழுந்துட்டேன், ஓடி வந்து ஊதி ஊதி தூசி எல்லாம் தட்டி விட்டாங்க. அப்புறம் ஒரு நாள் ஸ்கூலில் ஒரு பையன் என்னை அடிச்சிட்டானு தெரிஞ்சதும் ஸ்கூலுக்கு வந்து அந்த பையனை போட்டு அடிச்சாங்க. எப்பவும் அம்மா மடியில படுத்து தான் தூங்குவேன். ஏன்னா அவங்களுக்கு என் மேல அவ்வளவு பாசம். அவங்க கூட இருக்கிறது எனக்கு சாமி கூட இருக்கிற மாதிரி இருக்கும் என்று முத்து பேசுகிறார்.
அதோடு பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் ஆயிடுச்சு. இதுவரைக்கும் என் மனசுல போட்டு வச்சிருந்த ஒரு உண்மையை சொல்ல போறேன் என்று மனோஜை பார்க்க அண்ணாமலை நெஞ்சை பிடித்துக் கொண்டு வேண்டாம் என்று சைகை காட்டுகிறார். இதனால் முத்து கண்ணீரோடு அங்கிருந்து எழுந்து போய்விடுகிறார். பிறகு முத்து மனசுக்குள்ள எவ்வளவு ஆசை இருக்கு பாரு, ஒரு நாள் கூட நீ அவன்கிட்ட ஒரு நல்ல அம்மாவா நடந்துக்கவே இல்லை.
ஆனா மனசுக்குள்ள கற்பனையான விஷயங்களை வைத்திருக்கிறார் என்று அண்ணாமலை விஜயாவை திட்ட அதற்கு விஜயா அவன் ஏதோ உளறிட்டு போறான் என்று உதாசீனப்படுத்துகிறார். அதோடு அவன் சொல்ல வந்த உண்மை எல்லாம் சொல்லி இருந்தா நம்ம சந்தோஷமா வந்தது போல திரும்பி போய் இருக்க முடியாது என்று அண்ணாமலை சொல்லிட்டு கிளம்பி போக அதற்கு விஜயா இவரும் ஏதோ ஒரு உளறிட்டு போறாரு என்று கண்டு கொள்ளாமல் போகிறார்.

பிறகு மீனா முத்துவிடம் அத்தையை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா? என்று கேட்க, அதற்கு முத்து யாருக்கு தான் அம்மாவை பிடிக்காது. எனக்கு அப்பா, பாட்டி எல்லாருடைய பாசமும் கிடைச்சது. ஆனால் அம்மாவோட பாசம் கிடைக்கல. நான் ஏதோ பாவம் பண்ணி இருக்கிறேன் என்று ஃபீல் பண்ணுகிறார். அதற்கு மீனா தன்னுடைய மடியில் முத்துவை சாய்த்து கொண்டு நான் பொண்டாட்டியா மட்டும் இல்ல ஒரு அம்மாவாகவும் பிரண்டாகவும் நான் இருப்பேன் என்று ஆறுதல் கூறுகிறார்.
அடுத்த கட்டத்தில் எல்லோரும் சென்னைக்கு வருகின்றனர் முத்து கடையை திறக்கணும் என்று பேசிக் கொண்டிருக்க அதற்கு விஜயா பெரிய ஷோரூம் இதுல வந்து அப்படியே லாபம் கொட்ட போகுது என்று ஏளனப்படுத்துகிறார். பிறகு ரோகிணியிடம் உங்க மாமா வந்தது ரொம்ப சந்தோஷம்... யார் யாரோ எண்ணலாமோ சொன்னாங்க ஆனா உங்க மாமா இப்பவே மலேசியாவில் இருந்து வந்து மனோஜ்க்கு பிரேஸ்லெட் எல்லாம் போட்டு இருக்காரு என்று முத்துவை வம்பு இழுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications