அண்ணாமலை சத்யாவிடம் கேட்ட கேள்வி! உண்மைகளை உடைத்த முத்து.. ஆனால் மீனா பேசியது தான் எதிர்பார்க்காதது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 21ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் பார்கீ பிரண்டிடம் கடன் வாங்கி இருந்த மனோஜ் அவரிடம் மாட்டிக் கொண்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் மீனாவின் தம்பியை பார்க்க போகின்ற அண்ணாமலைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கிறது. அதனால் அவர் வருத்தத்தில் இருக்க இதற்கு மீனா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சத்யாவுக்கு அவருடைய அம்மா சூப்பு கொடுத்துக் கொண்டிருக்கும்போது முத்து இப்படி பண்ணுவார் என்று நினைக்கலையே என்று புலம்பி கொண்டு இருக்க, அதை கேட்டு மீனா பதில் எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை மீனாவின் வீட்டிற்கு வந்து சத்தியாவை நலம் விசாரிக்கிறார்.
அப்போது மீனாவின் அம்மா முத்துவை நாங்க மூத்த பையனாக தானே நெனச்சோம். ஆனா மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரு, நாங்க அவருக்கு என்ன பாவம் பண்ணோம்? நாங்க என்ன அவருக்கு எதிரியா? இதெல்லாம் நினைச்சா தான் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, என்று பீல் பண்ணுகிறார். அதைக் கேட்டு அண்ணாமலை முத்து தப்பு பண்ணாமல் யார் மேலேயும் கை வைக்க மாட்டான்..

ஆனால் சத்யா விஷயத்தில் ஏன் இப்படி நடந்துக்கிட்டான்னு தெரியல உனக்கு அவனுக்கு ஏதாவது பிரச்சனையா? என்று சத்யாவிடம் கேட்க அதற்கு சத்யா அப்படிலாம் இல்ல செல்வத்துக்கிட்ட பணம் கொடுக்கலைன்னு கேட்க போன போது தான் மாமா என்னை அடிச்சிட்டாரு என்று பொய் சொல்கிறார். அதற்கு அண்ணாமலை முத்துவுக்காக மன்னிப்பு கேட்டு கொஞ்சம் பணம் கொடுக்க அதை மீனா குடும்பம் வாங்க மறுத்துவிடுகிறது.

மறுபக்கத்தில் மனோஜ்க்கு கடன் கொடுத்த அவருடைய பார்க் நண்பர் ஹோட்டலுக்கு தேடி வர மனோஜ் ஓடி ஒளிகிறார். ஆனாலும் அவரிடம் மாட்டிக் கொள்கிறார். பிறகு மனோஜிடம் பணத்தை கேட்டு திட்டி அந்த நபர் ஹோட்டலில் பலவிதமான சாப்பாடுகளை வாங்கிவிட்டு பில்லை மனோஜ் தலையில் கட்டி விட்டு போய்விடுகிறார். அடுத்த கட்டத்தில் வீட்டுக்கு வந்து அண்ணாமலை படுத்திருக்க விஜயா கொண்டு போன பணத்தை பிடிங்கிட்டாங்களா என்று கேட்க அதற்கு அண்ணாமலை அவங்க படத்துக்கு ஆசைப்படுறவங்க கிடையாது என்று பதிலடி கொடுக்கிறார்.

அப்போது வீட்டுக்கு வந்த மீனா அண்ணாமலையிடம் அம்மா பேசியதற்காக மன்னிப்பு கேட்க அதற்கு அண்ணாமலை அவங்க பேசுனதுல தப்பு இல்ல என்று சொல்லி முத்து வந்ததும் அவரை ரூமுக்கு கூட்டிட்டு போய் ஏன்டா இப்படி இருக்க? சத்யா பாவம்.. அவங்க அம்மா எவ்வளவு வருத்தப்படுறாங்க என்று திட்ட அப்போது கோபத்தில் முத்து உண்மையை சொல்ல போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications