அண்ணாமலையால் முத்துவுக்கு வந்த நெருக்கடி.. உடைபட்ட உண்மை.. அவமானப்படுத்திய ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 23ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். அதில் மனோஜ்க்கு மீண்டும் வேலை போன விஷயம் ரோகிணிக்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் ரோகிணி கடுமையாக திட்டுகிறார்.
அதே நேரத்தில் அண்ணாமலை சொன்னதற்காக மீனா வீட்டுக்கு போன முத்துவுக்கு அவமானத்துக்கு மேல் அவமானம் கிடைக்கிறது .இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனாவின் அப்பா நினைவு நாளுக்காக கூப்பிட வந்த மீனா குடும்பத்தை விஜயா வழக்கம் போல அவமானப்படுத்துகிறார். அதற்கு அண்ணாமலை விஜயாவை திட்டி உள்ளே அனுப்புகிறார். அப்போது மீனாவின் அம்மா என் பொண்ணு மீனா வாழ்க்கையை பற்றி நினைச்சா தான் எனக்கு கவலையா இருக்கு என்று பீல் பண்ணி பேசியபடி வெளியேறுகிறார்.
அந்த நேரத்தில் முத்து வீட்டுக்கு வருகிறார். ஆனால் மாமியார் மற்றும் சீதாவிடம் எதுவுமே பேசாமல் முத்து வீட்டிற்குள் வந்து விட அதை பார்த்து மீனாவின் அம்மா பீல் பண்ணியபடியே போகிறார். அதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்துவிடம் அண்ணாமலை நீ மீனாவின் அம்மாவையும் தங்கச்சியையும் பார்த்தியா என்று கேட்க, ஆமா வெளிய பார்த்தேன் ஆனா எதுவும் பேசாம அவங்க போயிட்டாங்க என்று முத்து சொல்ல அதற்கு அண்ணாமலை அவங்க நாளைக்கு மீனாவின் அப்பா நினைவு நாளுக்காக கூப்பிட வந்தாங்க.
அதற்காக நீ போய் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளனும் என்று சொல்ல அதற்கு முத்து என்னால் போக முடியாது எனக்கு சவாரி இருக்கு என்று மறுக்கிறார். ஆனாலும் அண்ணாமலை அட்வைஸ் பண்ண முத்து சரி என்று சொல்கிறார். மறுபக்கத்தில் ஸ்ருதியின் அம்மா ஸ்ருதியை பார்ப்பதற்காக ஸ்டூடியோவுக்கு வருகிறார். அப்போது ஸ்ருதியிடம் எதுக்காக அன்னைக்கு நீங்க சைக்கிளில் போனீங்க என்று கேட்கிறார்.
அதற்கு ஸ்ருதி நான் ரவி இடம் ஒரு பெட் கட்டினேன் அதில் ரவி தோற்று விட்டான் அதற்காக அவனுக்கு பனிஷ்மென்ட் கொடுத்திருந்தேன் என்று சொல்ல, அப்போ வீட்டில ஸ்கூட்டி இருக்குது அதை வந்து எடுத்துட்டு போ என்று சொல்ல அதற்கு ஸ்ருதி நாங்க கார் வாங்க பிளான் பண்றோம் என்று சொல்லி அதற்கு பைக் வேண்டாம் என்று மறுக்கிறார். அதற்கு ஸ்ருதியின் அம்மா பாரின் டிக்கெட் ஒன்று கொடுத்து நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க என்று சொல்கிறார்.

அடுத்த கட்டத்தில் மனோஜ் தனக்கு வேலை போன விஷயத்தை ரோகிணியிடம் சொல்ல அதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். அதோடு தன்னுடைய தோழி சொன்ன மாதிரியே உன்னால் ஒரு மாசம் கூட ஒழுங்கா வேலை செய்ய முடியவில்லை என்று திட்டி விட்டு கோபமாக வீட்டை விட்டு வெளியே போகிறார். மறுபக்கத்தில் மீனா வீட்டில் அவருடைய அப்பாவின் நினைவு நாளுக்கு எல்லாம் ரெடியாகி கொண்டிருக்கும்போது அங்கு வந்தவர்கள் எல்லாரும் முத்து இப்படி பண்ணிட்டாரே என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு மீனாவால் எதுவும் சொல்ல முடியாமல் வருத்தத்தோடு நிற்கிறார். பிறகு முத்து வருவார் என்று எல்லோரும் காத்திருந்து முத்து வர நேரமானதால் எல்லாரும் சம்பிரதாயத்தை ஆரம்பிக்கிறார்கள். அப்போது சத்தியா போட்டோவுக்கு சூடம் காட்ட முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் கையை தூக்க முடியாததால் அதை கீழே போட்டு விடுகிறார்.

அதை பார்த்த மீனாவின் அம்மா அழுது கொண்டு என் பையனுக்கு சூடம் காட்ட கூட முடியல அப்படி கைய ஒடச்சு இருக்காங்க, முத்துவை என் மகன் போல் தான பார்த்தேன் ஆனால் இப்படி செஞ்சிட்டாரே என்று அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வாசலில் நிற்கிறார். இறுதியில் எல்லோரும் முத்துவை பார்த்ததும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications