ஹோட்டலில் மனோஜ்க்கு கிடைத்த அவமானம்.. முத்துவின் எதிர்பாராத செயல்.. விஜயா திமிருக்கு கிடைத்த அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி ஆறாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மீனாவின் பெருந்தன்மையை பார்த்து அவருடைய நகைகளை கொடுக்க சொல்லி அண்ணாமலை விஜயாவிடம் சொல்ல அதற்கு விஜயா பிரச்சனை செய்கிறார். ஆனால் விஜயாவிற்கு கடைசியில் முத்து அதிர்ச்சி கொடுக்கிறார்.
மறுபக்கத்தில் முதல் நாள் வேலைக்கு போன இடத்தில் மனோஜ்க்கு அவமானம் கிடைக்க அடுத்து மனோஜ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இன்று பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்றது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் விஜயா மீனாவை திட்டிவிட்டு மாடிக்கு வர இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அண்ணாமலை வீட்டிற்குள் வந்து அந்த பொண்ணு கிட்ட வாங்கின நகை எல்லாம் கொடுத்துடு என்று சொல்ல, அதற்கு விஜயா நானா வாங்கினேன். அவ தான கழட்டி கொடுத்தா என்று திமிராக பேசுகிறார். அதற்கு நீ என்னதான் அந்த பொண்ணை திட்டினாலும் அவ உனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துட்டு தான் இருக்கா என்று கீழே மீனா பூ கடைக்கு வந்த பெண்ணிடம் பேசியதை பற்றி சொல்கிறார்.
அதற்கு விஜயா மீனா நடிக்கிறா, அவ பூ கட்டுற மாதிரியே வார்த்தைகளை கோர்த்து கட்டுறா, நீங்க இருக்கிறதை பார்த்துட்டு தான் அப்படி எல்லாம் பேசி இருப்பா என்று கோபப்படுகிறார். அதோடு ரோகினி, ஸ்ருதி எவ்வளவு பெரிய இடத்தில் இருந்து வந்திருக்காங்க. அவங்க எனக்கு எவ்வளவு மரியாதை தராங்க ஆனால் இந்த மீனா அப்படியெல்லாம் கிடையாது என்று புலம்பி கொண்டு மீனாவின் கடையை பற்றி பேச அந்த நேரத்தில் மாடிக்கு மீனா வந்துவிட விஜயா பேச்சை நிறுத்தி விடுகிறார்.
அப்போது அண்ணாமலை மீனாவிடம் நகையை வாங்கி போட்டுக்கமா என்று சொல்ல, அதற்கு மீனா எனக்கு வேண்டாம் மாமா, யாருடைய நகையும் எனக்கு தேவையில்லை என்னுடைய வீட்டுக்காரர் எனக்கு வாங்கி தருவார் என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை தாலி செயினையாவது வாங்கி போட்டிக்கமானு சொல்ல, வேண்டாம் மாமா எனக்கு என் புருஷன் வாங்கி தருவாரு என்று சொல்ல அதற்கு விஜயா முத்துவை மட்டம் தட்டி பேசிக் கொண்டிருக்கிறார்.
அவனால எல்லாம் வாங்க முடியாது. அவன் டிரைவர் வேலை பார்த்துட்டு இருக்கான் அவனால எப்படி தங்க நகை எல்லாம் வாங்க முடியும். அப்படியே அவன் வாங்கி தந்தாலும் உனக்கு அறுபதாவது கல்யாணத்தில் தான் வாங்கி தருவான் என்று தரக்குறைவாக பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனா அவர் நினைச்சா இன்னைக்கு கூட வாங்கி தருவாரு எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு என்று விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார்.

இதை கேட்ட அண்ணாமலை உனக்குத்தான் உன் பிள்ளை மேல நம்பிக்கை இல்ல. ஆனா அவளுக்கு அவ புருஷன் மேல நம்பிக்கை இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு முத்துவிடமும் அண்ணாமலை முத்து கண்டிப்பா மீனாவுக்கு செயின் வாங்கி கொடுத்துடு என்று சொல்ல அதற்கு நான் கண்டிப்பா கொடுத்துடுவேன் என்று முத்து சாப்பாடு இருக்கா என்று கேட்க அதற்கு விஜயா இனிமேல் தான் சாப்பாடு செய்யணும்.
அதான் உன் பொண்டாட்டி காலையிலேயே போய் பூக்கடையில் நின்னுட்டாளே என்று கம்ப்ளைன்ட் செய்ய அதற்கு மீனா வாங்க சாப்பிடலாம் இடியாப்பம், குருமா, தேங்காய் பால் எல்லாம் இருக்கு மாமா நீங்களும் வாங்க என்று சொல்ல அதற்கு அண்ணாமலை கிச்சனில் போய் பார்க்காமலேயே நீ இப்படி பேசுறியா என்று விஜயாவை திட்டுகிறார்.
மறுபக்கத்தில் மனோஜ் ஹோட்டலில் சாப்பிட வந்தவரிடம் என்ன சாப்பிடுறீங்க என்று கேட்க, அதற்கு அவர் ஹோட்டலில் என்ன இருக்கு என்று கேட்க மனோஜ் ஹோட்டலில் இருக்கும் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார் .அவர் இந்த ஹோட்டலில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறார் அதற்கு மனோஜ் இந்த ஹோட்டலில் ரவா கிச்சடி தான் ஸ்பெஷல் என்று சொல்ல சரி அதையே எடுத்துட்டு வா என்று சொல்கிறார்.
சரி என்று மனோஜ் எடுத்துட்டு வர போக அங்கு ஹோட்டலில் ரவா கிச்சடி தீர்ந்து போச்சு என்று சொல்ல அதை நீங்களே அவங்க கிட்ட சொல்லிடுங்க என்று மனோஜ் சொல்லிவிட்டார். பிறகு சப்ளையர் வந்து ரவா கிச்சடி இல்லை என்று சொல்ல கஸ்டமர் கோவப்பட்டு இதைக்கூட சரியா பார்த்து சொல்ல மாட்டியா தண்டசோறு இவனை எல்லாம் எதுக்கு வேலைக்கு எடுக்குறீங்க என்று திட்டுகிறார்.

அடுத்ததாக முத்து ஷெட்டுக்கு போக அங்கு சீட்டு ஏலம் விட காத்திருக்கின்றனர். அப்போது முத்து யாருக்காவது தேவை இருக்கா என்று கேட்க அப்போது உனக்கு தேவை இருக்கு தானே நீ எடுத்துக்க என்று செல்வம் சொல்ல 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து எல்லாரையும் கூப்பிட்டு மீனாவுக்காக தாலி வாங்கி வந்ததை அண்ணாமலை இடம் கொடுக்க விஜயா அதிர்ச்சி அடைகிறார். இது என்னுடைய உழைப்பில் நான் என் பொண்டாட்டிக்காகவாங்கிய தாலி என்று சொல்லி விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications