சிறகடிக்க ஆசையில் இனி இதுதான் கதையா? வீட்டை விட்டு போன ரோகிணி.. முத்து மீது விழுந்த பழி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 10ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ் வேலைக்கு போகாமலே வேலைக்கு போய்க்கொண்டிருப்பதாக நடித்துக் கொண்டிருந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வந்ததால் அவமானத்தில் ரோகிணி வீட்டை விட்டு காணாமல் போகி இருக்கிறார்.
மனோஜ் வேலைக்கு போகவில்லை என்பது கூட ரோகினிக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் அதை தன்னிடம் மறைத்து விட்டாரே என்ற ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் ரோகினி தவித்துக் கொண்டிருக்கிறார். தனக்கு ஏற்கனவே ஒரு வாழ்க்கை தான் நினைத்த மாதிரி இல்லை ஆனால் இந்த வாழ்க்கையாவது நினைத்த மாதிரி இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் இதுவும் ஏமாற்றமாக இருக்கிறதே என்று ரோகிணி வருத்தத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய தோழியின் வீட்டில் பேசிக் கொண்டிருந்த ரோகிணி தோழி இடம் கூட சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே கிளம்பி போயிருக்கிறார். அதனால் முத்து குடும்பத்தில் புது பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பல மாதங்களாக வேலைக்கு போவது போன்று ஏமாற்றிக் கொண்டிருந்த மனோஜின் நாடகம் நேற்று முடிவுக்கு வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இன்று வெளியான எபிசோடில் கூட மனோஜ் தன்னுடைய ஷோரூமுக்கு விஜய் வந்தார் என்று நடித்துக் கொண்டிருந்தபோது குறும்படத்தை போட்டு முத்து மனோஜ்க்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தார்.
இந்த காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சிகளில் நடித்த நடிகர்களின் நடிப்பும் இயல்பாகவும், அருமையாகவும் இருந்தது. அதை பாராட்டியே ஆக வேண்டும். அதிலும் இன்று குறும்படம் வெளியாகும் போது அனைவருடைய முகத்துக்கும் க்ளோசப் வைக்கப்பட்டது.
அதே நேரத்தில் மனோஜியின் முகத்தில் அவர் உண்மை வெளியே தெரிந்து விட்டது இனி ரோகினி நம்மை ஏற்றுக் கொள்வாளா? இல்லையா என்ற ஒரு பதட்டத்தோடு இருக்கும்போது முகத்தில் வியர்த்து விறுவிறுக்க நின்றது அவரை இத்தனை நாட்களாக திட்டி வந்த ரசிகர்களையும் கூட ரசிக்க வைத்திருந்தது.
அதுபோல இந்த சீரியலின் வில்லியாக இருந்தாலும் ரோகிணியும் ரசிகர்களின் மனதில் இன்றைய காட்சிகளின் மூலம் இடம் பிடித்து விட்டார். அதிலும் தன்னுடைய தோழியிடம் தனக்கு அம்மா செய்து வைத்த திருமணம் அதாவது முதலில் வயதான ஒரு நபரை திருமணம் செய்து வைத்ததால் நான் பட்டப்பாடு எனக்குத்தான் தெரியும், அதற்குப் பிறகு இப்போ தான் நிம்மதியா இருக்கிறேன். அதுவும் மனோஜை நான் உண்மையா காதலிச்சு கிட்டு இருக்கிறேன்.

ஆனால் அவர் என்னை ஏமாற்றிக்கொண்டு இருந்திருக்கிறார் என்பதை தான் என்னால ஏத்துக்க முடியல அதிலும் இனிமே இவர் உண்மையை சொன்னாலும் கூட அவர் மீது எனக்கு நம்பிக்கை வருமானு தெரியலையே என்று கண்ணீரோடு ரோகினி பேசிய வார்த்தைகள் அவருடைய நடிப்புக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இப்படியான நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் ரோகிணி தன்னுடைய தோழியின் வீட்டில் இருந்தபோது அவர் நான் காபி போட்டுட்டு வருகிறேன் என்று ரூமுக்குள் போயிருந்த நிலையில் தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்த ரோகினி என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென்று வீட்டை விட்டு கிளம்பி போயிட்டார் காபியோடு வந்து அவருடைய தோழி வீட்டில் அங்கும் இங்கும் எல்லா இடமும் தேடி பார்த்து காணவில்லை என்பதால் மனோஜ்க்கு போன் பண்ணி சொல்லி இருக்கிறார்.

மனோஜ் இதனால் அதிர்ச்சியாகி வழக்கம் போல இத்தனை பிரச்சனைக்கு காரணம் முத்து தான் என்று முத்து மீது பழியை தூக்கி போட்டு அவருடைய சட்டையை பிடித்து சண்டைக்கு நிற்கிறார். அடுத்ததாக மொத்த குடும்பமும் தெருவில் இறங்கி போனில் இருக்கும் ரோகினி போட்டோவை காட்டி தெருவில் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் எப்படியும் ரோகினி இனி தனியாகவே வீட்டிற்கு வந்துவிடுவார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இன்னும் ஒரு சில நாட்களில் கிராமத்தில் பொங்கல் எபிசோடு நடக்க இருக்கிறது. அதற்கு கண்டிப்பாக ரோகிணியும் வர தான் போகிறார்.
அதனால மனோஜை ரோகினி ஏற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடுவார். ஆனால் இதையெல்லாம் விடவும் ரோகிணியின் முதல் திருமணம் மற்றும் அவருடைய குழந்தை பற்றிய ரகசியம் வீட்டிற்கு தெரிய வரும்போது தான் பெரிய அளவில் சீரியலில் பரபரப்பு ஏற்படும். அது எப்போது தெரிய வரும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications