விஜயாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ரோகிணி.. கதறி அழுத மனோஜ்.. அண்ணாமலை சொன்ன வார்த்தை.. உடைந்த குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 12ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டை விட்டுப் போன ரோகிணி மனோஜ் பற்றி புரிந்து கொண்டு மீண்டும் மனோஜ் வீட்டிற்கு வந்திருக்கிறார். அது தெரியாத மனோஜ் ரோகிணியை நினைத்து கதறி அழுது கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த ரோகிணி முத்து மற்றும் மீனாவை அவமானப்படுத்தி பேசுகிறார். என்னுடைய கணவரை இனி யாரும் தவறாக பேசக்கூடாது அவர் என்னை ஏமாற்றியது எங்களுக்குள் இருக்கும் பிரச்சனை அதை இனி யாரும் பெரிசு படுத்த கூடாது என்று பேசியிருக்கிறார்.
அதுபோல இனி யாராவது எங்களைப் பற்றி பேசினால் நாங்கள் இந்த வீட்டில் இருக்க மாட்டோம் வீட்டை விட்டு போய் விடுவோம் என்று ரோகினி சொல்ல அதை கேட்டு விஜயா அதிர்ச்சியாகி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகினி வீட்டிற்கு வந்திருந்த முத்து,மீனா, மனோஜை அவருடைய அம்மா சமாளித்துக் கொண்டிருக்க கிரிஷ் ஒரு ஏரோபிளேனை காட்டி இது எங்களுடைய அத்தை எனக்கு வாங்கிக் கொடுத்தது என்று சொல்லிக் கொண்டிருக்க அது யாருமா உங்க பொண்ணா என்று மீனா கேட்க, அதற்கு ரோகினி இல்ல அது வேற பொண்ணு என்று சொல்ல, அதற்கு கிரீஸ் அது கல்யாணி அத்தை பாட்டி என்று சொல்ல உள்ளிருக்கும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு ரோகிணியின் போட்டோவை காட்டி இவர்களை இங்கே எங்கேயாவது பார்த்தீர்களா என்று விசாரிக்க, அதற்கு அவர் நான் எங்கேயும் பார்க்கவில்லையே என்று சொல்லி விடுகிறார். அதற்கு முத்து அப்போ இதுக்கு மேல போய் எங்க போய் தேடுறது. இனி அவ்வளவுதான் என்று சொல்ல மனோஜ் என்னை முழுசா நம்புன ரோகினியை நான் ஏமாத்திட்டேன். பெரிய தப்பு பண்ணிட்டேன். என் பொக்கிஷத்தை தொலைச்சிட்டேன்.

அம்மாவுக்கு அப்புறமா என் மேல ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தது ரோகிணி தான். அவ இல்லாம இனிமே என்ன பண்ண போறேன் என்று கண் கலங்கி அங்கேயே அழுது கொண்டிருக்கிறார். இதையெல்லாம் வெளியே இருந்து ரோகிணி கேட்டுக் கொண்டிருக்க, வீட்டிற்குள் ரோகிணி அம்மா மனோஜிடம் கவலைப்படாதீங்க தம்பி அவங்க கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்துடுவாங்க என்று சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்.
பிறகு வெளியே போகும் போதும் முத்து மனோஜிடம் உனக்கும் பொண்ணுங்களுக்கும் செட் ஆகல பேசாம காசிக்கு போயிடு என்று நக்கல் அடித்து வர அதற்கு மீனா கொஞ்சம் சும்மா இருங்க வீட்டுக்கு போகலாம் கண்டிப்பா ரோகிணிக்கு கோபம் தணிந்து வந்துருவாங்க என்று வீட்டிற்கு போகின்றனர். மறுபக்கத்தில் ரோகிணி அம்மா ரோகிணியிடம் மாப்பிள்ளை ரொம்ப சொக்கத்தங்கமா இருக்காரு. செஞ்ச தப்புக்காக கவலைப்படுகிறார்.
உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு, அதை கெட்டியாக பிடித்துக்கொள் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அதைத்தொடர்ந்து மனோஜ் வீட்டிற்கு வந்ததும் விஜயாவை பிடித்து ரோகிணி எங்கன்னு தெரியலம்மா என்று அழுது கொண்டு இருக்க விஜயா பேச முயற்சி செய்கிறார். ஆனால் விஜயாவை பேசவிடாமல் மனோஜ் அழுது கொண்டே இருக்கிறார்.
அப்போது எல்லாத்துக்கும் காரணம் இவன்தான் இவனால்தான் ரோகிணி என்னை விட்டுட்டு போயிட்டா என்று மனோஜ் அழுது கொண்டிருக்க அதற்கு முத்து உனக்காக டீசல் போட்டு வந்தேன் பாரு நன்றியே இல்லடா உனக்கு என்று திட்டிக் கொண்டிருக்கும் போது அங்கு ரூமுக்குள் இருந்து ரோகிணி வெளியே வந்து நிறுத்துங்க என்று சத்தம் போடுகிறார். அப்போது முத்து வீட்டில் இருந்துட்டு தான் எங்களை அலைய விட்டியா என்று கோபப்படுகிறார்.

அதற்கு என் புருஷனை பற்றி ஒரு வார்த்தை இனி நீங்க தப்பா பேசக்கூடாது என்று ரோகினி சொல்ல அதற்கு முத்து ஆனால் அவன் உன்னை ஏமாத்தி இருக்கான் என்று சொல்கிறார். அதற்கு அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு என்ன நஷ்டம் என்று அவமானப்படுத்துகிறார்.
பிறகு அண்ணாமலையிடம் ரோகிணி இனிமே அவரை பத்தி யாரும் எதுவும் பேசக்கூடாது. நீங்க கேள்வி கேளுங்க உங்களுக்கு அந்த ரைட்ஸ் இருக்கு ஆனா மத்தவங்க அவரை அவமானப்படுத்தி பேசுவதை பார்க்க முடியாது. அப்படி யாராவது பேசினால் இனிமே நாங்கள் இந்த வீட்டில் இருக்க மாட்டோம் என்று ரோகிணி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications