ரோகினிக்கு அதிர்ச்சி கொடுத்த மாமா.. முத்துவால் அவமானப்பட்ட மீனா.. ஊர்க்காரர்கள் செய்த அலப்பறை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 22ஆம் தேதி காலை எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் கிராமத்திற்கு பொங்கல் கொண்டாட போயிருக்கும் அண்ணாமலை குடும்பத்தினரில் முத்து மற்றும் மீனா செய்த செயலால் ஊர்க்காரர்கள் அனைவரும் மீனாவை கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் விஜயா ரோகினியின் மாமா வரப்போகிறார் என்று வீட்டில் அலப்பறை செய்து கொண்டிருக்க அதனால் ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணியின் மாமாவாக நடிக்க வரும் நபர் வீட்டிற்கு வர போகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் குடைக்குள் டார்ச் லைட் அடித்து வைத்து இரவு முழுவதும் பாட்டு பாடி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். அதை பார்த்து அடுத்த நாள் காலையில் அக்கப் பக்கத்தினர் அனைவரும் கையில் குடையோடு வந்து மீனாவிடம் பேச அவர்களை பாட்டி துரத்தி விடுகிறார்.

பாட்டி போனதும் அந்த பெண்கள் மீண்டும் திரும்பவும் வந்து முத்துவிடம் அந்த குடை எல்லாம் ஓகே ஆனா அதற்குள் எப்படி லைட் வந்துச்சு என்று கிண்டல் செய்ய, அதற்கு மீனா வெட்கப்பட்டு கொண்டே முத்துவிடம் எல்லாம் உங்களால தான் என்று செல்லமாக கோபப்பட்டு உள்ளே ஓடுகிறார். அதற்குப் பிறகு மீனா கோலம் போட்டுக் கொண்டிருக்க முத்துவும் செல்வமும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஓடிவரும் விஜயா ரோகினியோட மாமா வராரு கோலத்துல வெல்கம்னு எழுதி வையி இப்படி கோலம் மட்டும் போட்டு வச்சிருக்கே என்று திட்டுகிறார்.
அதோடு ஆரத்தி கரைச்சி வையி, வீட்டில் பொருள் எல்லாம் அப்படி இப்படியுமா கிடக்கிறது என்று பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருக்க மொத்த பொருட்களையும் கையில் அள்ளிக்கொண்டு விஜயா நடந்து கொண்டு இருக்க அப்போது தவறி விழும்போது அண்ணாமலை தாங்கி பிடிக்கிறார்.

அடுத்த கட்டத்தில் ஸ்ருதியும் ரவியும் தூங்கி எழுந்து வெளியே வந்து காபி கேட்க அதற்கு விஜயா நீ இன்னும் காபி கொடுக்கலையா என்று கேட்க, அதற்கு மீனா காலையிலே எல்லாருக்கும் காபி போட்டு கொடுத்துட்டு இருந்தேன். அப்போ ஸ்ருதி தூங்கிட்டு இருந்தாங்க. தூங்கிட்டு இருந்தவங்களுக்கு எப்படி காபி கொடுப்பாங்க என்று கேள்வி கேட்கிறார்.

பிறகு மனோஜ், ரோகிணி எழுந்து வர அப்போது விஜயா ரோகினியின் மாமா பற்றி ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்க ரோகிணி நடிக்கிறேன் என்று சொன்ன மனுஷன் வந்துடுவாரா இல்லையான்னு தெரியலையே என்று தவிக்கிறார். பிறகு தனியாக வந்து கறிக்கடைக்காரர்களுக்கு போன் பண்ணி பேச, அவர் நான் காலையில அஞ்சு மணிக்கே இங்க வந்துட்டேன். நீங்க சொன்ன ஊருக்கு 8 கிலோமீட்டர் முன்னாடி தான் காத்துட்டு இருக்கேன்.

இந்த மாதிரி பில்டப் எல்லாம் நீங்க கொடுத்தா தான் சரியா இருக்கும். நீங்க ஆக்சன் சொல்ல ரெடியா இருங்க, நான் எப்படி கேரக்டரை நடித்துக் காட்டுகிறேன் என்று மட்டும் பாருங்க என்று சொல்லி போனை வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications