சிறகடிக்க ஆசை: முத்துவால் மீனாவை கொச்சைப்படுத்திய விஜயா.. ரோகினி இப்படி செய்யலாமா? உடைபடும் உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ரவியை ரூமை விட்டு துரத்தியதற்காக விஜயா மீனாவை அவமானப்படுத்துகிறார்.

அதே நேரத்தில் மீனா அவமானப்படுவதை ரோகினி மனோஜ் பார்த்து ரசிக்கின்றனர். இதனால் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலயே இந்த சீரியல் தொடர்ச்சியாக டிஆர்பி யில் முன்னணி இடத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான இந்த சீரியலின் ப்ரோமோ இருக்கிறது.

ஏற்கனவே பணத்திற்காக விஜயா ரவி மற்றும் ஸ்ருதியை முத்துவின் எதிர்ப்பையும் மீறி வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். அதோடு முத்து அறையில் ரவி மற்றும் ஸ்ருதிக்கு முதலிரவுக்கான ஏற்பாடுகளை செய்து வைக்க அதனால் முத்து மாடியில் தூங்குகிறார். அதே நேரத்தில் தன்னுடைய அறைக்கு வந்த முத்து மீனாவிடம் உனக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கோ என்று சொல்ல, மீனா அங்கிருக்கும் அழுக்கு துணிகளை மட்டும் எடுத்து இதை நான் துவைக்க வேண்டும் என்று ஹாலுக்கு வருகிறார்.

அப்போது முத்து அவசரமாக தன்னுடைய அறையை பூட்டி சாவியை எடுக்கிறார். அதைப் பார்த்த விஜயா டேய் எதற்குடா கதவை பூட்டுற என்று கேட்க அதற்கு ரவி என் ரூமை கொடுத்துட்டு நான் மொட்டை மாடியில போய் படுத்து இருக்கணும்னு எனக்கு என்ன தலை எழுத்தா? என்று கேட்க, அதற்கு விஜயா இன்னும் 2 நாள் தானடா என்று சொல்ல, அதற்கு முத்து அதெல்லாம் முடியாது, இவன் பண்ணுனதுக்கு எல்லாம் இவன் தெருவில் தான் போய் படுக்கணும் என்று திட்டுகிறார்.

அதோடு மீனா சமாதானம் செய்ய முயற்சி செய்ய அதற்கு நான் சாயங்காலம் வந்து கதவை திறந்து விடுவேன் என்று சொல்லி முத்து வெளியே போய் விடுகிறார். பின்னாடியே மீனா முத்துவை கூப்பிட்டபடியே போக அதனால் கோபமான விஜயா என்ன வேலை பார்த்துட்டு போறாண்டி உன் புருஷன், ஒரு நாள் கூட நீ இல்லாம அவனால இருக்க முடியாதா? உன்னாலயும் ஒரு நாள் தனியா தூங்க முடியாதா? என்று கேட்க அதற்கு மீனா தனியாக நின்று அழுது கொண்டிருக்கிறார்.

இதை எல்லாம் ரோகிணி மற்றும் மனோஜ் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விஜயா இப்படி எல்லாம் பேசியதற்கு மீனா பதிலடி கொடுக்கவில்லையே என்று பலர் பீல் பண்ணி வருகின்றனர். அதோடு பலமுறை விஜயா மீனாவை அவமானப்படுத்தி இருக்கிறார். ஆனால் இப்போது இந்த மாதிரி பேசியது எல்லாம் ரொம்ப ஓவர் இதனால் மீனாவை போல்டா பேசுற மாதிரி கொண்டுட்டு போங்க என்று இயக்குனரிடம் பலர் வேண்டுகோள் வைக்கின்றனர்.
-
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications