சிறகடிக்க ஆசை: ஃபங்ஷனில் முத்து பிரச்சனை செய்தாரா? இல்லையா? இதைத்தானே எதிர்பார்த்தோம்! செம அப்டேட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். முத்துவை அவமானப்படுத்த வேண்டும் என்று ரோகினி ஒரு பக்கம் சதி திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். அதேபோல ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் முத்துவை கோபப்படுத்தி ஃபங்ஷனில் பிரச்சனை செய்ய வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்று மீனாவும் அண்ணாமலையும் முத்துவை நினைத்து பயந்து கொண்டிருக்கின்றனர். இதனால் முத்து பிரச்சனை செய்வாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் இப்போது சிறகடிக்க ஆசை சீரியல் டீம் வெளியிட்ட வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகி கொண்டு இருக்கின்றனர். இந்த சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதே நேரத்தில் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீரியலுக்கும் தான் இப்போது அதிகமான போட்டி இருக்கின்றது. அதே நேரத்தில் இந்த சீரியல் கதை மக்கள் மத்தியில் அதிகமாக கவரப்படுகிறது.
அதற்கு காரணம் இந்த சீரியலில் அழுகை மட்டுமல்லாமல் காதல் காட்சிகளும், சண்டை சச்சரவுகளும், அதோடு ரொமான்ஸ், காமெடி என்று எல்லாமே இருப்பதால் இது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திருக்கிறது. அதுபோல சமூக வலைதளத்திலும் இந்த சீரியல் குறித்து அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் முக்கியமான ஒரு தருணம் இப்போது நடந்து வருகிறது.
அதாவது இதுவரைக்கும் அண்ணாமலை குடும்பத்தில் எல்லா மகன்களும் ஒரே கூட்டு குடும்பமாக இருக்கும் நிலையில் அந்த குடும்பத்திலிருந்து ஸ்ருதியையும் ரவியையும் பிரித்து விட வேண்டும் என்று ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் பிளான் போட்டு இருக்கின்றனர். அதற்காகவே தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷனை நடத்துகின்றனர். அதே நேரத்தில் இந்த பங்க்ஷனை சரியாக நடத்த விடாமல் முத்துவை வைத்து பிரச்சனை செய்தால்தான் விஜயா தன்னுடைய அப்பாவை பற்றி விசாரிக்க மாட்டார் என்று ரோகினியும் இன்னொரு பக்கம் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இதே நேரத்தில் முத்து நான் எனக்கு என்ன நடந்தாலும் பொறுத்துக் கொள்வேன். ஆனால் என்னுடைய அப்பாவுக்கு ஏதாவது அவமானம் நடந்தால் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே முத்து ஒரு கோவக்காரராக இருக்கும் நிலையில் இப்போது என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அப்பா தன்னுடைய நண்பர் ஒருவரிடம் சொல்லி அண்ணாமலை மீது ஷூ கால் படும்படி பக்கத்தில் இருக்க சொல்ல அவரும் அதே போலவே செய்ய அண்ணாமலை ஸ்ருதியின் அப்பாவின் சூழ்ச்சிகளை புரிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து போய் விடுகிறார்.
அதுபோல ரோகிணி முத்துவை குடிக்க வைத்து விட வேண்டும் என்று பிளான் போட்டு சில ஆட்களை புதிதாக இறக்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் சூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் ஜாலியாக மொத்த குடும்பமும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ எடுத்து இருக்கின்றனர். இதை பார்த்ததும் ரசிகர்கள் அப்போ இங்கே சண்டை எதுவும் நடக்கவில்லையா? கடைசியில் கலகலப்பாக ஃபங்ஷனை முடித்து விட்டார்கள் போல.
அதனால் தான் பங்க்ஷனில் பாட்டு போட்டு டான்ஸ் ஆடி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த சீரியலின் விஜயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சம்மந்தி மற்றும் தோழியோடு டான்ஸ் ஆடியது என்று சில வீடியோக்களையும் பகிர்ந்து இருக்கிறார். இதுவும் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.
ஸ்ருதி அப்பா பிளானை தெரிந்து கொண்ட அண்ணாமலை.. மொத்த குடும்பத்திற்கும் முத்து கொடுத்த அதிர்ச்சி
எது எப்படியோ இந்த சீரியலில் சண்டை வராமல் முத்து அங்கிருந்து வரவேண்டும் என்று ரசிகர்கள் சொன்னது நடந்து விட்டது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் இங்கே சில அவமானங்கள் முத்துவுக்கு நடக்கும் போது மீனா முத்துக்குக்காக சண்டை போடுவார் என்று சிலர் அடித்துக் கூறி வருகின்றனர். ஏற்கனவே இதுபோல திருமதி செல்வம் சீரியலில் கல்யாண மண்டபத்தில் நடக்கும் சீனில் வைத்து தான் பல பிரச்சனைகள் நடந்தது அதுபோல இப்போது முத்துவுக்கு ஆதரவாக அவருடைய குடும்பம் இருக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதற்கான விடை நாளை எபிசோட்டில் தெரியவரும்.
-
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications