சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த பெரிய உண்மை.. ஜெயிலுக்கு போகும் சிந்தாமணி! மனம் மாறும் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 22ஆம் தேதிக்கான எபிசோடில், சிந்தாமணி செய்த ஒரு முக்கியமான செயலை முத்து கண்டுபிடித்து அவரை ஜெயிலுக்கு அனுப்பி வைக்கிறார். அதே நேரத்தில் இதுவரைக்கும் ரோகிணி மீது கோபத்தில் இருந்த மனோஜ் இப்போது மனம் மாறி ரோகிணியின் காதலை புரிந்து கொள்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

முத்து - மீனா வாக்குவாதம்
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், விஜயா அண்ணாமலையிடம் பொய் சொன்ன விஷயம் குறித்து முத்து பேசிக் கொண்டிருக்கும் போது, ஹரிணி சொன்ன ஒரு முக்கியமான விஷயத்தை மீனாவிடம் பேசுகிறார். அதாவது ரோகிணியின் காதல் உண்மையானது என்று ஹரிணி புரிந்து கொண்டதை கூட, நீ புரிஞ்சுக்கல" என்று நேராக சொல்கிறார்.
அதற்கு மீனா, "நான் என்ன புரிஞ்சுக்கல?" என்று கேட்க, உடனே முத்து சத்யா - ரேகா காதலை நீ புரிஞ்சுக்கலையே என்று கேட்க, மீனா, "நான் அவனுடைய நல்லதுக்காகத்தான் பேசுறேன், இந்த விஷயம் மட்டும் சிந்தாமணிக்கு தெரிஞ்சா அவள் இதைவிட பெரிய பிரச்சினையாக்குவாள் அத நினைச்சா தான் எனக்கு பயமாயிருக்கு என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பீல் பண்ணும் மனோஜ்
மறுபக்கத்தில் ரவியும் ஸ்ருதியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஸ்ருதி, ரோகிணியின் காதல்தான் உண்மையானது அதனால் தான் அவங்க உங்க அண்ணனுக்காக இவ்வளவு செஞ்சு இருக்காங்க என்று ரவியிடம் சொல்ல, அதற்கு ரவி அவங்க மீண்டும் இந்த வீட்டுக்கு வந்தா இந்த வீட்டை பிரிச்சிடுவாங்க என்று திட்டி விட்டு விட்டு போகிறார்.
அதே நேரத்தில் ஹரிணி சொன்ன விஷயத்தை எல்லாம் மனோஜ் யோசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ரோகிணி தான் உங்களுக்கு சரியான ஜோடி, அவங்க உங்க மேல ரொம்ப அன்பு வச்சிருக்காங்க என்று ஹரிணி சொன்னதை நினைத்து பார்த்து, ரோகினி இதுவரைக்கும் தனக்காக செய்த விஷயங்களையும் நினைத்து பார்த்துக் கொண்டு வருத்தப்படுகிறார்.

சத்யா ரேகா முடிவு
பின்னர் முத்து கார் செட்டிற்கு போனதும் அங்கே சத்யாவும் ரேகாவும் வருகின்றனர். அப்போது ரேகா, நான் ஹைதராபாத்துக்கு போக போறேன் என்று சொல்கிறார். ஏன் திடீர்னு ஹைதராபாத்துக்கு போற உங்க வீட்ல உங்க விஷயம் தெரிஞ்சுடுச்சா என்று முத்து கேட்டதும், வீட்டில் தெரிஞ்சா மாதிரி தெரியல எல்லாரும் நார்மலா தான் பேசிட்டு இருக்காங்க. ஆனால் எனக்கு ஹைதராபாத்தில் கொஞ்சம் வேலை இருக்கு அப்பாவுக்கு அங்கேயும் பிசினஸ் இருக்கு அதைத்தான் என்னை கவனிக்க சொல்லி இருக்காங்க என்று ரேகா சொல்கிறார்.
மேலும் சத்யாவின் அம்மாவிற்கு எங்களோட காதல் விஷயம் தெரிஞ்சுடுச்சு என்று ரேகா சொன்னதும், அது எல்லாம் உங்க அக்கா பண்ணுன வேலை தான் என்று முத்து சொல்கிறார். பிறகு நீங்க ரெண்டு பேரும் காதலில் உறுதியா இருக்கீங்களா? என்று முத்து கேட்க, அதற்கு இரண்டு பேருமே எங்களால ஒருத்தரை ஒருத்தர் பிரிந்து இருக்க முடியாது நாங்க யாருக்காகவும் எங்களுடைய காதல விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கின்றனர்.
அதைக் கேட்டது முத்து இப்படியே இருந்தால் சந்தோசம் தான் ஹைதராபாத்துக்கு போயிட்டு வா அப்புறம் நடக்க வேண்டிய விஷயங்களை பற்றி பொறுமையாக பேசிக்கலாம் என்று சொல்லி அனுப்புகிறார்.

மீனாவின் சந்தேகம்
வீட்டிற்கு திரும்பிய முத்துவிடம், ரேகா ஹைதராபாத் போகும் விஷயம் பற்றி மீனா பேசுகிறார்.
ஆனா இதில் ஏதோ உள்குத்து இருக்கு என்று மீனா சந்தேகப்படுகிறார். "இவ்வளவு நாள் சென்னையில இருந்தவங்க திடீர்னு ஹைதராபாத் போறாங்கன்னா, அவர்களோட காதல் விஷயம் வீட்டில் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு என்று மீனா சொல்கிறார். ஆனால் முத்து, "அப்படி தெரிஞ்சிருந்தா சிந்தாமணி இப்பவே பிரச்சனை பண்ணியிருப்பா" என்று சொல்கிறார்.
ரவுடியை பிடித்த முத்து
இதற்கிடையில், ஒரு சவாரிக்குச் செல்லும் முத்து, அப்பகுதியில் ஒரு நபரை கவனிக்கிறார். இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்தபோது, "இவன்தான் மீனாவை கத்தியால் குத்தினவன்" என்று நினைவுக்கு வருகிறது.
உடனே அவனை துரத்தி பிடித்து, "யார் சொல்லி குத்தின?" என்று கேட்கிறார். முதலில் உண்மையை சொல்ல மறுக்கும் அந்த நபர், முத்து போட்ட அடியால் சிந்தாமணி தான் இதை செய்ய சொன்னது என்ற உண்மையை சொல்லிவிடுகிறார்.
சிந்தாமணி கைது
உடனே முத்து அந்த ஆளை போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு ஒப்படைக்கிறார். பிறகு போலீசார் சிந்தாமணி வீட்டிற்கு வந்து, "நீங்க நாள் வச்சு மீனாவ கத்தியால் குத்தி இருக்கீங்க" என்று கைது செய்ய வருகிறார்கள்.
இதைக் கேட்ட சிந்தாமணி அதிர்ச்சியடைந்து, "நான் எதுவும் செய்யல... முத்து பொய் பழி போடுறான்" என்று மறுக்கிறார். ஆனால் போலீசார், "அதை ஸ்டேஷன்ல சொல்லிக்கோங்க" என்று கூறி அவரை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications